சூரா அஸ்-ஸல்ஸலா pdf — பதிவிறக்கம் (தமிழ்)
சூரா அஸ்-ஸல்ஸலா pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அஸ்-ஸல்ஸலா மொழிபெயர்ப்பு. சூரா அஸ்-ஸல்ஸலா (Medinan) 8 வசனம்.
Related
More சூரா PDF
சூரா அஸ்-ஸல்ஸலா

ﮅﮆﮇﮈﮉ
99:1
பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது
ﮊﮋﮌﮍ
99:2
இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-
ﮎﮏﮐﮑﮒ
99:3
"அதற்கு என்ன நேர்ந்தது?" என்று மனிதன் கேட்கும் போது-
ﮓﮔﮕﮖ
99:4
அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.
ﮗﮘﮙﮚﮛ
99:5
(அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால்.
ﮜﮝﮞﮟﮠﮡﮢ
99:6
அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
ﮣﮤﮥﮦﮧﮨﮩ
99:7
எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
ﮪﮫﮬﮭﮮﮯﮰ
99:8
அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
திருக்குர்ஆன்
Wednesday, September 9, 2026
Don't forget us in your sincere prayers







