அத்-துஹா சூரா அரபி மற்றும் தமிழ்

அத்-துஹா சூராவை முழுமையான தமிழ் மொழிபெயர்ப்புடன் படியுங்கள். அரபி உரை மற்றும் ஒலி திலாவத்துடன் வசனம் வசனமாக. (11 வசனம் — مكية). அத்-துஹா கேள், அத்-துஹா மொழிபெயர்ப்பு, அத்-துஹா mp3, அத்-துஹா pdf.

அத்-துஹா சூரா படி மற்றும் கேள்

🎧 வசனம்
M Mishary Rashid Alafasy
M Mahmoud Khalil Al-Husary
A Abdurrahman As-Sudais
M Mohamed Siddiq Al-Minshawi
A Abdul Basit Abdul Samad
A Ali Al-Hudhaify
A Ahmed ibn Ali al-Ajamy
A Abu Bakr Ash-Shaatree
M Muhammad Ayyoub
A Abdullah Basfar
A Abdullah Al-Juhani
M Maher Al Muaiqly
x1
وَالضُّحَىٰ ۝١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 1
முற்பகல் மீது சத்தியமாக
وَاللَّيْلِ إِذَا سَجَىٰ ۝٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 2
ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ۝٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 3
உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.
وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَىٰ ۝٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 4
மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ ۝٥
📖 மொழிபெயர்ப்பு வசனம் 5
இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ ۝٦
📖 மொழிபெயர்ப்பு வசனம் 6
(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?
وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ ۝٧
📖 மொழிபெயர்ப்பு வசனம் 7
இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.
وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ ۝٨
📖 மொழிபெயர்ப்பு வசனம் 8
மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ ۝٩
📖 மொழிபெயர்ப்பு வசனம் 9
எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.
وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ ۝١٠
📖 மொழிபெயர்ப்பு வசனம் 10
யாசிப்போரை விரட்டாதீர்.
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ ۝١١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 11
மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.
← 92 அத்-துஹா (93/114) 94 →
படிக்க அத்-துஹா சூரா தமிழ் மொழிபெயர்ப்பு – வசனங்கள் மற்றும் ஒலி

93الضحى Ad-Duha 📚 11 வசனம் مكية

வசனம் வசனமாக – அத்-துஹா சூரா — 11 வசனம்




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers