அல்-வாகியா சூரா அரபி மற்றும் தமிழ்

அல்-வாகியா சூராவை முழுமையான தமிழ் மொழிபெயர்ப்புடன் படியுங்கள். அரபி உரை மற்றும் ஒலி திலாவத்துடன் வசனம் வசனமாக. (96 வசனம் — مكية). அல்-வாகியா கேள், அல்-வாகியா மொழிபெயர்ப்பு, அல்-வாகியா mp3, அல்-வாகியா pdf.

அல்-வாகியா சூரா படி மற்றும் கேள்

🎧 வசனம்
M Mishary Rashid Alafasy
M Mahmoud Khalil Al-Husary
A Abdurrahman As-Sudais
M Mohamed Siddiq Al-Minshawi
A Abdul Basit Abdul Samad
A Ali Al-Hudhaify
A Ahmed ibn Ali al-Ajamy
A Abu Bakr Ash-Shaatree
M Muhammad Ayyoub
A Abdullah Basfar
A Abdullah Al-Juhani
M Maher Al Muaiqly
x1
إِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ ۝١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 1
மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால்
لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ ۝٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 2
அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை.
خَافِضَةٌ رَّافِعَةٌ ۝٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 3
அது (தீயோரைத்) தாழ்த்தி விடும், (நல்லோரை) உயர்த்தி விடும்.
إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًّا ۝٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 4
பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது.
وَبُسَّتِ الْجِبَالُ بَسًّا ۝٥
📖 மொழிபெயர்ப்பு வசனம் 5
இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது,
فَكَانَتْ هَبَاءً مُّنبَثًّا ۝٦
📖 மொழிபெயர்ப்பு வசனம் 6
பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.
وَكُنتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً ۝٧
📖 மொழிபெயர்ப்பு வசனம் 7
(அப்போது) நீங்களும் மூன்று பிரிவினர்களாகி விடுவீர்கள்.
فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ ۝٨
📖 மொழிபெயர்ப்பு வசனம் 8
(முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் - வலது பாரிசத்துக்காரர் யார்? (என்பதை அறிவீர்களா?)
وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ ۝٩
📖 மொழிபெயர்ப்பு வசனம் 9
(இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் - இடது பாரிசத்திலுள்ளோர் யார்? (என அறிவீர்களா?)
وَالسَّابِقُونَ السَّابِقُونَ ۝١٠
📖 மொழிபெயர்ப்பு வசனம் 10
(மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள்.
أُولَٰئِكَ الْمُقَرَّبُونَ ۝١١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 11
இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள்.
فِي جَنَّاتِ النَّعِيمِ ۝١٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 12
இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.
ثُلَّةٌ مِّنَ الْأَوَّلِينَ ۝١٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 13
முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்,
وَقَلِيلٌ مِّنَ الْآخِرِينَ ۝١٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 14
பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் -
عَلَىٰ سُرُرٍ مَّوْضُونَةٍ ۝١٥
📖 மொழிபெயர்ப்பு வசனம் 15
(பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது -
مُّتَّكِئِينَ عَلَيْهَا مُتَقَابِلِينَ ۝١٦
📖 மொழிபெயர்ப்பு வசனம் 16
ஒருவரையொருவர் முன்னோக்கியவாகளாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.
يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُونَ ۝١٧
📖 மொழிபெயர்ப்பு வசனம் 17
நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.
بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِّن مَّعِينٍ ۝١٨
📖 மொழிபெயர்ப்பு வசனம் 18
தெளிந்த பானங்களால் நிறம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்).
لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ ۝١٩
📖 மொழிபெயர்ப்பு வசனம் 19
(அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள், மதிமயங்கவுமாட்டார்கள்.
وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ ۝٢٠
📖 மொழிபெயர்ப்பு வசனம் 20
இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் -
وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ ۝٢١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 21
விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்).
وَحُورٌ عِينٌ ۝٢٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 22
(அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்.
كَأَمْثَالِ اللُّؤْلُؤِ الْمَكْنُونِ ۝٢٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 23
மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்).
جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ ۝٢٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 24
(இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும்.
لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا ۝٢٥
📖 மொழிபெயர்ப்பு வசனம் 25
அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள்.
إِلَّا قِيلًا سَلَامًا سَلَامًا ۝٢٦
📖 மொழிபெயர்ப்பு வசனம் 26
'ஸலாம், ஸலாம்' என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்).
وَأَصْحَابُ الْيَمِينِ مَا أَصْحَابُ الْيَمِينِ ۝٢٧
📖 மொழிபெயர்ப்பு வசனம் 27
இன்னும் வலப்புறத்தார்கள் - வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?)
فِي سِدْرٍ مَّخْضُودٍ ۝٢٨
📖 மொழிபெயர்ப்பு வசனம் 28
(அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்:
وَطَلْحٍ مَّنضُودٍ ۝٢٩
📖 மொழிபெயர்ப்பு வசனம் 29
(நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடை வாழை மரத்தின் கீழும்:
وَظِلٍّ مَّمْدُودٍ ۝٣٠
📖 மொழிபெயர்ப்பு வசனம் 30
இன்னும், நீண்ட நிழலிலும்,
وَمَاءٍ مَّسْكُوبٍ ۝٣١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 31
(சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும்,
وَفَاكِهَةٍ كَثِيرَةٍ ۝٣٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 32
ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் -
لَّا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ ۝٣٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 33
அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை -
وَفُرُشٍ مَّرْفُوعَةٍ ۝٣٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 34
மேலும், உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பர்).
إِنَّا أَنشَأْنَاهُنَّ إِنشَاءً ۝٣٥
📖 மொழிபெயர்ப்பு வசனம் 35
நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி,
فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا ۝٣٦
📖 மொழிபெயர்ப்பு வசனம் 36
அப்பெண்களைக் கன்னிகளாகவும்,
عُرُبًا أَتْرَابًا ۝٣٧
📖 மொழிபெயர்ப்பு வசனம் 37
(தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும்,
لِّأَصْحَابِ الْيَمِينِ ۝٣٨
📖 மொழிபெயர்ப்பு வசனம் 38
வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்).
ثُلَّةٌ مِّنَ الْأَوَّلِينَ ۝٣٩
📖 மொழிபெயர்ப்பு வசனம் 39
முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும்,
وَثُلَّةٌ مِّنَ الْآخِرِينَ ۝٤٠
📖 மொழிபெயர்ப்பு வசனம் 40
பின்னுள்ளோரில் ஒரு கூட்டமும் (வலப்புறத்தோராக இருப்பார்கள்).
وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ ۝٤١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 41
இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார்? (என்று அறிவீர்களா?)
فِي سَمُومٍ وَحَمِيمٍ ۝٤٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 42
(அவர்கள்) கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும் நீரிலும் -
وَظِلٍّ مِّن يَحْمُومٍ ۝٤٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 43
அடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள்.
لَّا بَارِدٍ وَلَا كَرِيمٍ ۝٤٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 44
(அங்கு) குளிர்ச்சியுமில்லை, நலமுமில்லை.
إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ ۝٤٥
📖 மொழிபெயர்ப்பு வசனம் 45
நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் (உலகத்தில்) சுகபோகிகளாக இருந்தனர்.
وَكَانُوا يُصِرُّونَ عَلَى الْحِنثِ الْعَظِيمِ ۝٤٦
📖 மொழிபெயர்ப்பு வசனம் 46
ஆனால், அவர்கள் பெரும் பாவத்தின் மீது நிலைத்தும் இருந்தனர்.
وَكَانُوا يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ ۝٤٧
📖 மொழிபெயர்ப்பு வசனம் 47
மேலும், அவர்கள், "நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?" என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.
أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ ۝٤٨
📖 மொழிபெயர்ப்பு வசனம் 48
"அல்லது, முன்னோர்களான நம் தந்தையருமா? (எழுப்பப்படுவர்?" என்றும் கூறினர்.)
قُلْ إِنَّ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ ۝٤٩
📖 மொழிபெயர்ப்பு வசனம் 49
(நபியே!) நீர் கூறும்: "(நிச்சயமாக உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும்.
لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَاتِ يَوْمٍ مَّعْلُومٍ ۝٥٠
📖 மொழிபெயர்ப்பு வசனம் 50
"குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் (நீங்கள் யாவரும்) ஒன்று கூட்டப்படுவீர்கள்.
ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ ۝٥١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 51
அதற்குப் பின்னர்: "பொய்யர்களாகிய வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள்,
لَآكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ ۝٥٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 52
ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள்.
فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ ۝٥٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 53
ஆகவே, "அதைக் கொண்டே வயிறுகளை நிரப்புவீர்கள்.
فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ ۝٥٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 54
அப்புறம் அதன்மேல் கொதிக்கும் நீரையே குடிப்பீர்கள்.
فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ ۝٥٥
📖 மொழிபெயர்ப்பு வசனம் 55
"பின்னும் ஹீம் - தாகமுள்ள ஒட்டகை குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்."
هَٰذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّينِ ۝٥٦
📖 மொழிபெயர்ப்பு வசனம் 56
இதுதான் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு விருந்தாகும்.
نَحْنُ خَلَقْنَاكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ ۝٥٧
📖 மொழிபெயர்ப்பு வசனம் 57
நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா?
أَفَرَأَيْتُم مَّا تُمْنُونَ ۝٥٨
📖 மொழிபெயர்ப்பு வசனம் 58
(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
أَأَنتُمْ تَخْلُقُونَهُ أَمْ نَحْنُ الْخَالِقُونَ ۝٥٩
📖 மொழிபெயர்ப்பு வசனம் 59
அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?
نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ ۝٦٠
📖 மொழிபெயர்ப்பு வசனம் 60
உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம், எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.
عَلَىٰ أَن نُّبَدِّلَ أَمْثَالَكُمْ وَنُنشِئَكُمْ فِي مَا لَا تَعْلَمُونَ ۝٦١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 61
(அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).
وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْأَةَ الْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ ۝٦٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 62
முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா?
أَفَرَأَيْتُم مَّا تَحْرُثُونَ ۝٦٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 63
(இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?
أَأَنتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ ۝٦٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 64
அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?
لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ ۝٦٥
📖 மொழிபெயர்ப்பு வசனம் 65
நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.
إِنَّا لَمُغْرَمُونَ ۝٦٦
📖 மொழிபெயர்ப்பு வசனம் 66
"நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.
بَلْ نَحْنُ مَحْرُومُونَ ۝٦٧
📖 மொழிபெயர்ப்பு வசனம் 67
"மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்" (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).
أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ ۝٦٨
📖 மொழிபெயர்ப்பு வசனம் 68
அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?
أَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنزِلُونَ ۝٦٩
📖 மொழிபெயர்ப்பு வசனம் 69
மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?
لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ ۝٧٠
📖 மொழிபெயர்ப்பு வசனம் 70
நாம் நாடினால், அதைக் கைப்புள்ள தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
أَفَرَأَيْتُمُ النَّارَ الَّتِي تُورُونَ ۝٧١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 71
நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?
أَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَا أَمْ نَحْنُ الْمُنشِئُونَ ۝٧٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 72
அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?
نَحْنُ جَعَلْنَاهَا تَذْكِرَةً وَمَتَاعًا لِّلْمُقْوِينَ ۝٧٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 73
நாம் அதனை நினைவூட்டுவதாகவும், பயணிகளுக்கு பயனளிக்கப்பதற்காகவும் உண்டாக்கினோம்.
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ ۝٧٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 74
ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.
۞ فَلَا أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ ۝٧٥
📖 மொழிபெயர்ப்பு வசனம் 75
நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.
وَإِنَّهُ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ ۝٧٦
📖 மொழிபெயர்ப்பு வசனம் 76
நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான் பிரமாணமாகும்.
إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ ۝٧٧
📖 மொழிபெயர்ப்பு வசனம் 77
நீச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும்.
فِي كِتَابٍ مَّكْنُونٍ ۝٧٨
📖 மொழிபெயர்ப்பு வசனம் 78
பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது.
لَّا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ ۝٧٩
📖 மொழிபெயர்ப்பு வசனம் 79
தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.
تَنزِيلٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ ۝٨٠
📖 மொழிபெயர்ப்பு வசனம் 80
அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது.
أَفَبِهَٰذَا الْحَدِيثِ أَنتُم مُّدْهِنُونَ ۝٨١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 81
அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா?
وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ ۝٨٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 82
நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா?
فَلَوْلَا إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ ۝٨٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 83
மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது -
وَأَنتُمْ حِينَئِذٍ تَنظُرُونَ ۝٨٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 84
அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَٰكِن لَّا تُبْصِرُونَ ۝٨٥
📖 மொழிபெயர்ப்பு வசனம் 85
ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை.
فَلَوْلَا إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ ۝٨٦
📖 மொழிபெயர்ப்பு வசனம் 86
எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் -
تَرْجِعُونَهَا إِن كُنتُمْ صَادِقِينَ ۝٨٧
📖 மொழிபெயர்ப்பு வசனம் 87
நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே!
فَأَمَّا إِن كَانَ مِنَ الْمُقَرَّبِينَ ۝٨٨
📖 மொழிபெயர்ப்பு வசனம் 88
(இறந்தவர் இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின்.
فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ ۝٨٩
📖 மொழிபெயர்ப்பு வசனம் 89
அவருக்குச் சுகமும், நல்லுணவும் இன்னும் பாக்கியமுள்ள சுவர்க்கமும் உண்டு.
وَأَمَّا إِن كَانَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ ۝٩٠
📖 மொழிபெயர்ப்பு வசனம் 90
அன்றியும், அவர் வலப்புறத்துத் தோழராக இருந்தால்,
فَسَلَامٌ لَّكَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ ۝٩١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 91
"வலப்புறத்தோரே! உங்களுக்கு "ஸலாம்" உண்டாவதாக" (என்று கூறப்படும்).
وَأَمَّا إِن كَانَ مِنَ الْمُكَذِّبِينَ الضَّالِّينَ ۝٩٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 92
ஆனால் அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில் (ஒருவனாக) இருந்தால்
فَنُزُلٌ مِّنْ حَمِيمٍ ۝٩٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 93
கொதிக்கும் நீரே, அவனுக்கு விருந்தாகும்.
وَتَصْلِيَةُ جَحِيمٍ ۝٩٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 94
நரக நெருப்பில் தள்ளப்படுவது (விருந்தாகும்).
إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ الْيَقِينِ ۝٩٥
📖 மொழிபெயர்ப்பு வசனம் 95
நிச்சயமாக இதுதான் உறுதியான உண்மையாகும்.
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ ۝٩٦
📖 மொழிபெயர்ப்பு வசனம் 96
எனவே (நபியே!) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.
← 55 அல்-வாகியா (56/114) 57 →
படிக்க அல்-வாகியா சூரா தமிழ் மொழிபெயர்ப்பு – வசனங்கள் மற்றும் ஒலி

56الواقعة Al-Waqi'ah 📚 96 வசனம் مكية

வசனம் வசனமாக – அல்-வாகியா சூரா — 96 வசனம்




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers