PDF —
25 வசனம் Meccan PDF
Built right in your browser — download starts automatically

சூரா அல்-இன்ஷிகாக் pdf — பதிவிறக்கம் (தமிழ்)

சூரா அல்-இன்ஷிகாக் pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அல்-இன்ஷிகாக் மொழிபெயர்ப்பு. சூரா அல்-இன்ஷிகாக் (Meccan) 25 வசனம்.



25 வசனம் · Meccan · தமிழ்
bismillah
ﭣﭤﭥﭦ
84:1 வானம் பிளந்துவிடும் போது
ﭧﭨﭩﭪ
84:2 தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபனியும் போது-
ﭫﭬﭭﭮ
84:3 இன்னும், பூமி விரிக்கப்பட்டு,
ﭯﭰﭱﭲﭳ
84:4 அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது-
ﭴﭵﭶﭷ
84:5 தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது.
ﭸﭹﭺﭻﭼﭽﭾﭿﮀ
84:6 மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய்.
ﮁﮂﮃﮄﮅﮆ
84:7 ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ,
ﮇﮈﮉﮊﮋ
84:8 அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.
ﮌﮍﮎﮏﮐ
84:9 இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.
ﮑﮒﮓﮔﮕﮖﮗ
84:10 ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ-
ﮘﮙﮚﮛ
84:11 அவன் (தன்குக்) 'கேடு' தான் எனக் கூவியவனாக-
ﮜﮝﮞ
84:12 அவன் நரகத்தில் புகுவான்.
ﮟﮠﮡﮢﮣﮤ
84:13 நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான்.
ﮥﮦﮧﮨﮩﮪ
84:14 நிச்சயமாக, தான் (இறைவன் பால்) "மீளவே மாட்டேன்" என்று எண்ணியிருந்தான்.
ﮫﮬﮭﮮﮯﮰﮱﯓ
84:15 அப்படியல்ல, நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான்.
ﯔﯕﯖﯗ
84:16 இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
ﯘﯙﯚﯛ
84:17 மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்,
ﯜﯝﯞﯟ
84:18 பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).
ﯠﯡﯢﯣﯤ
84:19 நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.
ﯥﯦﯧﯨﯩ
84:20 எனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்வதில்லை.
ﯪﯫﯬﯭﯮﯯﯰﯱ
84:21 மேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை.
ﯲﯳﯴﯵﯶ
84:22 அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர்.
ﯷﯸﯹﯺﯻ
84:23 ஆனால் அல்லாஹ், அவர்கள் (தங்களுக்குள்ளே சேகரித்து) மறைத்து வைத்திருப்பவற்றை நன்கு அறிந்திருக்கின்றான்.
ﯼﯽﯾﯿ
84:24 (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயங் கூறுவீராக.
ﭑﭒﭓﭔﭕﭖﭗﭘﭙﭚ
84:25 எவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு.

திருக்குர்ஆன்


Wednesday, September 9, 2026

Don't forget us in your sincere prayers