PDF —
11 வசனம் Meccan PDF
Built right in your browser — download starts automatically

சூரா அல்-ஆதியாத் pdf — பதிவிறக்கம் (தமிழ்)

சூரா அல்-ஆதியாத் pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அல்-ஆதியாத் மொழிபெயர்ப்பு. சூரா அல்-ஆதியாத் (Meccan) 11 வசனம்.

← அஸ்-ஸல்ஸலாசூரா அல்-ஆதியாத் அல்-கரிஆ →


11 வசனம் · Meccan · தமிழ்
bismillah
ﮱﯓﯔ
100:1 மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-
ﯕﯖﯗ
100:2 பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,
ﯘﯙﯚ
100:3 பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-
ﯛﯜﯝﯞ
100:4 மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,
ﯟﯠﯡﯢ
100:5 அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-
ﭑﭒﭓﭔﭕ
100:6 நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
ﭖﭗﭘﭙﭚ
100:7 அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.
ﭛﭜﭝﭞﭟ
100:8 இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.
ﭠﭡﭢﭣﭤﭥﭦﭧﭨ
100:9 அவன் அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-
ﭩﭪﭫﭬﭭ
100:10 மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-
ﭮﭯﭰﭱﭲﭳ
100:11 நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன்


Wednesday, September 9, 2026

Don't forget us in your sincere prayers