PDF —
26 வசனம் Meccan PDF
Built right in your browser — download starts automatically

சூரா அல்-காஷியா pdf — பதிவிறக்கம் (தமிழ்)

சூரா அல்-காஷியா pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அல்-காஷியா மொழிபெயர்ப்பு. சூரா அல்-காஷியா (Meccan) 26 வசனம்.

← அல்-அஆலாசூரா அல்-காஷியா அல்-ஃபஜ்ர் →


26 வசனம் · Meccan · தமிழ்
bismillah
ﭽﭾﭿﮀﮁ
88:1 சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?
ﮂﮃﮄﮅ
88:2 அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.
ﮆﮇﮈ
88:3 அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.
ﮉﮊﮋﮌ
88:4 கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.
ﮍﮎﮏﮐﮑ
88:5 கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.
ﮒﮓﮔﮕﮖﮗﮘ
88:6 அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.
ﮙﮚﮛﮜﮝﮞﮟ
88:7 அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது.
ﮠﮡﮢﮣ
88:8 அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.
ﮤﮥﮦ
88:9 தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.
ﮧﮨﮩﮪ
88:10 உன்னதமான சுவர்க்கச் சோலையில்-
ﮫﮬﮭﮮﮯ
88:11 அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.
ﮰﮱﯓﯔ
88:12 அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.
ﯕﯖﯗﯘ
88:13 அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.
ﯙﯚﯛ
88:14 (அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.
ﯜﯝﯞ
88:15 மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-
ﯟﯠﯡ
88:16 விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.
ﯢﯣﯤﯥﯦﯧﯨ
88:17 (நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-
ﯩﯪﯫﯬﯭ
88:18 மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,
ﯮﯯﯰﯱﯲ
88:19 இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,
ﯳﯴﯵﯶﯷ
88:20 இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)
ﯸﯹﯺﯻﯼ
88:21 ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.
ﯽﯾﯿﰀ
88:22 அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.
ﭑﭒﭓﭔﭕ
88:23 ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-
ﭖﭗﭘﭙﭚ
88:24 அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.
ﭛﭜﭝﭞ
88:25 நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.
ﭟﭠﭡﭢﭣ
88:26 பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.

திருக்குர்ஆன்


Wednesday, September 9, 2026

Don't forget us in your sincere prayers