சூரா அல்-ஹுமஸா pdf — பதிவிறக்கம் (தமிழ்)
சூரா அல்-ஹுமஸா pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அல்-ஹுமஸா மொழிபெயர்ப்பு. சூரா அல்-ஹுமஸா (Meccan) 9 வசனம்.
Related
More சூரா PDF
சூரா அல்-ஹுமஸா

ﭢﭣﭤﭥﭦ
104:1
குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.
ﭧﭨﭩﭪﭫ
104:2
(அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.
ﭬﭭﭮﭯﭰ
104:3
நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.
ﭱﭲﭳﭴﭵﭶ
104:4
அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.
ﭷﭸﭹﭺﭻ
104:5
ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
ﭼﭽﭾﭿ
104:6
அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.
ﮀﮁﮂﮃﮄ
104:7
அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.
ﮅﮆﮇﮈ
104:8
நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.
ﮉﮊﮋﮌ
104:9
நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).
திருக்குர்ஆன்
Wednesday, September 9, 2026
Don't forget us in your sincere prayers







