அல்-ஹுமஸா சூரா அரபி மற்றும் தமிழ்

அல்-ஹுமஸா சூராவை முழுமையான தமிழ் மொழிபெயர்ப்புடன் படியுங்கள். அரபி உரை மற்றும் ஒலி திலாவத்துடன் வசனம் வசனமாக. (9 வசனம் — مكية). அல்-ஹுமஸா கேள், அல்-ஹுமஸா மொழிபெயர்ப்பு, அல்-ஹுமஸா mp3, அல்-ஹுமஸா pdf.

அல்-ஹுமஸா சூரா படி மற்றும் கேள்

🎧 வசனம்
M Mishary Rashid Alafasy
M Mahmoud Khalil Al-Husary
A Abdurrahman As-Sudais
M Mohamed Siddiq Al-Minshawi
A Abdul Basit Abdul Samad
A Ali Al-Hudhaify
A Ahmed ibn Ali al-Ajamy
A Abu Bakr Ash-Shaatree
M Muhammad Ayyoub
A Abdullah Basfar
A Abdullah Al-Juhani
M Maher Al Muaiqly
x1
وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ ۝١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 1
குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.
الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ ۝٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 2
(அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.
يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ ۝٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 3
நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.
كَلَّا ۖ لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ ۝٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 4
அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.
وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ ۝٥
📖 மொழிபெயர்ப்பு வசனம் 5
ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
نَارُ اللَّهِ الْمُوقَدَةُ ۝٦
📖 மொழிபெயர்ப்பு வசனம் 6
அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.
الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ ۝٧
📖 மொழிபெயர்ப்பு வசனம் 7
அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.
إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌ ۝٨
📖 மொழிபெயர்ப்பு வசனம் 8
நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.
فِي عَمَدٍ مُّمَدَّدَةٍ ۝٩
📖 மொழிபெயர்ப்பு வசனம் 9
நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).
← 103 அல்-ஹுமஸா (104/114) 105 →
படிக்க அல்-ஹுமஸா சூரா தமிழ் மொழிபெயர்ப்பு – வசனங்கள் மற்றும் ஒலி

104الهمزة Al-Humazah 📚 9 வசனம் مكية

வசனம் வசனமாக – அல்-ஹுமஸா சூரா — 9 வசனம்




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers