சூரா அல்-கரிஆ pdf — பதிவிறக்கம் (தமிழ்)
சூரா அல்-கரிஆ pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அல்-கரிஆ மொழிபெயர்ப்பு. சூரா அல்-கரிஆ (Meccan) 11 வசனம்.
Related
More சூரா PDF
சூரா அல்-கரிஆ

ﭴﭵ
101:1
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).
ﭶﭷﭸ
101:2
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?
ﭹﭺﭻﭼﭽ
101:3
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?
ﭾﭿﮀﮁﮂﮃ
101:4
அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
ﮄﮅﮆﮇﮈ
101:5
மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.
ﮉﮊﮋﮌﮍ
101:6
எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-
ﮎﮏﮐﮑﮒ
101:7
அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.
ﮓﮔﮕﮖﮗ
101:8
ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-
ﮘﮙﮚ
101:9
அவன் தங்குமிடம் "ஹாவியா" தான்.
ﮛﮜﮝﮞﮟ
101:10
இன்னும் ('ஹாவியா') என்ன என்று உமக்கு அறிவித்தது எது?
ﮠﮡﮢ
101:11
அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.
திருக்குர்ஆன்
Wednesday, September 9, 2026
Don't forget us in your sincere prayers







