PDF —
11 வசனம் Meccan PDF
Built right in your browser — download starts automatically

சூரா அத்-துஹா pdf — பதிவிறக்கம் (தமிழ்)

சூரா அத்-துஹா pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அத்-துஹா மொழிபெயர்ப்பு. சூரா அத்-துஹா (Meccan) 11 வசனம்.

← அல்-லைல்சூரா அத்-துஹா அஷ்-ஷர்ஹ் →


11 வசனம் · Meccan · தமிழ்
bismillah
ﮉﮊ
93:1 முற்பகல் மீது சத்தியமாக
ﮋﮌﮍﮎ
93:2 ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
ﮏﮐﮑﮒﮓﮔ
93:3 உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.
ﮕﮖﮗﮘﮙﮚ
93:4 மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.
ﮛﮜﮝﮞﮟ
93:5 இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.
ﮠﮡﮢﮣﮤ
93:6 (நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?
ﮥﮦﮧﮨ
93:7 இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.
ﮩﮪﮫﮬ
93:8 மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
ﮭﮮﮯﮰﮱ
93:9 எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.
ﯓﯔﯕﯖﯗ
93:10 யாசிப்போரை விரட்டாதீர்.
ﯘﯙﯚﯛﯜ
93:11 மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.

திருக்குர்ஆன்


Wednesday, September 9, 2026

Don't forget us in your sincere prayers