PDF —
40 வசனம் Meccan PDF
Built right in your browser — download starts automatically

சூரா அன்-நபா pdf — பதிவிறக்கம் (தமிழ்)

சூரா அன்-நபா pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அன்-நபா மொழிபெயர்ப்பு. சூரா அன்-நபா (Meccan) 40 வசனம்.



40 வசனம் · Meccan · தமிழ்
bismillah
ﭑﭒﭓ
78:1 எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?
ﭔﭕﭖﭗ
78:2 மகத்தான அச்செய்தியைப் பற்றி,
ﭘﭙﭚﭛﭜ
78:3 எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,
ﭝﭞﭟ
78:4 அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
ﭠﭡﭢﭣ
78:5 பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.
ﭤﭥﭦﭧﭨ
78:6 நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
ﭩﭪﭫ
78:7 இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?
ﭬﭭﭮ
78:8 இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.
ﭯﭰﭱﭲ
78:9 மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.
ﭳﭴﭵﭶ
78:10 அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.
ﭷﭸﭹﭺ
78:11 மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.
ﭻﭼﭽﭾﭿ
78:12 உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.
ﮀﮁﮂﮃ
78:13 ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.
ﮄﮅﮆﮇﮈﮉ
78:14 அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.
ﮊﮋﮌﮍﮎ
78:15 அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.
ﮏﮐﮑ
78:16 (கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).
ﮒﮓﮔﮕﮖﮗ
78:17 நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.
ﮘﮙﮚﮛﮜﮝﮞ
78:18 ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.
ﮟﮠﮡﮢﮣ
78:19 இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.
ﮤﮥﮦﮧﮨ
78:20 மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
ﮩﮪﮫﮬﮭ
78:21 நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.
ﮮﮯﮰ
78:22 வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக.
ﮱﯓﯔﯕ
78:23 அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில்.
ﯖﯗﯘﯙﯚﯛﯜ
78:24 அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.
ﯝﯞﯟﯠ
78:25 கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.
ﯡﯢﯣ
78:26 (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
ﯤﯥﯦﯧﯨﯩ
78:27 நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.
ﯪﯫﯬﯭ
78:28 அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.
ﯮﯯﯰﯱﯲ
78:29 நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.
ﯳﯴﯵﯶﯷﯸ
78:30 "ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
ﭑﭒﭓﭔ
78:31 நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.
ﭕﭖﭗ
78:32 தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.
ﭘﭙﭚ
78:33 ஒரே வயதுள்ள கன்னிகளும்.
ﭛﭜﭝ
78:34 பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).
ﭞﭟﭠﭡﭢﭣﭤ
78:35 அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.
ﭥﭦﭧﭨﭩﭪ
78:36 (இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்.
ﭫﭬﭭﭮﭯﭰﭱﭲﭳﭴﭵﭶ
78:37 (அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.
ﭷﭸﭹﭺﭻﭼﭽﭾﭿﮀﮁﮂﮃﮄﮅﮆ
78:38 ரூஹு (என்ற ஜிப்ரயீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.
ﮇﮈﮉﮊﮋﮌﮍﮎﮏﮐﮑ
78:39 அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக.
ﮒﮓﮔﮕﮖﮗﮘﮙﮚﮛﮜﮝﮞﮟﮠﮡ
78:40 நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் "அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!" என்று (பிரலாபித்துக்) கூறுவான்.

திருக்குர்ஆன்


Wednesday, September 9, 2026

Don't forget us in your sincere prayers