சூரா அத்-தாரிக் pdf — பதிவிறக்கம் (தமிழ்)
சூரா அத்-தாரிக் pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அத்-தாரிக் மொழிபெயர்ப்பு. சூரா அத்-தாரிக் (Meccan) 17 வசனம்.
Related
More சூரா PDF
சூரா அத்-தாரிக்

ﭑﭒﭓ
86:1
வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக
ﭔﭕﭖﭗﭘ
86:2
தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
ﭙﭚﭛ
86:3
அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.
ﭜﭝﭞﭟﭠﭡﭢ
86:4
ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.
ﭣﭤﭥﭦﭧ
86:5
மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.
ﭨﭩﭪﭫﭬ
86:6
குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.
ﭭﭮﭯﭰﭱﭲ
86:7
முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.
ﭳﭴﭵﭶﭷ
86:8
இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.
ﭸﭹﭺﭻ
86:9
இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.
ﭼﭽﭾﭿﮀﮁﮂ
86:10
மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.
ﮃﮄﮅﮆ
86:11
(திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,
ﮇﮈﮉﮊ
86:12
(தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,
ﮋﮌﮍﮎ
86:13
நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.
ﮏﮐﮑﮒ
86:14
அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.
ﮓﮔﮕﮖ
86:15
நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.
ﮗﮘﮙ
86:16
நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.
ﮚﮛﮜﮝﮞ
86:17
எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.
திருக்குர்ஆன்
Wednesday, September 9, 2026
Don't forget us in your sincere prayers







