அல்-ஆதியாத் சூரா அரபி மற்றும் தமிழ்

அல்-ஆதியாத் சூராவை முழுமையான தமிழ் மொழிபெயர்ப்புடன் படியுங்கள். அரபி உரை மற்றும் ஒலி திலாவத்துடன் வசனம் வசனமாக. (11 வசனம் — مكية). அல்-ஆதியாத் கேள், அல்-ஆதியாத் மொழிபெயர்ப்பு, அல்-ஆதியாத் mp3, அல்-ஆதியாத் pdf.

அல்-ஆதியாத் சூரா படி மற்றும் கேள்

🎧 வசனம்
M Mishary Rashid Alafasy
M Mahmoud Khalil Al-Husary
A Abdurrahman As-Sudais
M Mohamed Siddiq Al-Minshawi
A Abdul Basit Abdul Samad
A Ali Al-Hudhaify
A Ahmed ibn Ali al-Ajamy
A Abu Bakr Ash-Shaatree
M Muhammad Ayyoub
A Abdullah Basfar
A Abdullah Al-Juhani
M Maher Al Muaiqly
x1
وَالْعَادِيَاتِ ضَبْحًا ۝١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 1
மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-
فَالْمُورِيَاتِ قَدْحًا ۝٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 2
பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,
فَالْمُغِيرَاتِ صُبْحًا ۝٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 3
பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-
فَأَثَرْنَ بِهِ نَقْعًا ۝٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 4
மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,
فَوَسَطْنَ بِهِ جَمْعًا ۝٥
📖 மொழிபெயர்ப்பு வசனம் 5
அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-
إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ ۝٦
📖 மொழிபெயர்ப்பு வசனம் 6
நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
وَإِنَّهُ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ ۝٧
📖 மொழிபெயர்ப்பு வசனம் 7
அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.
وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ ۝٨
📖 மொழிபெயர்ப்பு வசனம் 8
இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.
۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ ۝٩
📖 மொழிபெயர்ப்பு வசனம் 9
அவன் அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-
وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ ۝١٠
📖 மொழிபெயர்ப்பு வசனம் 10
மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-
إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌ ۝١١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 11
நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்.
← 99 அல்-ஆதியாத் (100/114) 101 →
படிக்க அல்-ஆதியாத் சூரா தமிழ் மொழிபெயர்ப்பு – வசனங்கள் மற்றும் ஒலி

100العاديات Al-'Adiyat 📚 11 வசனம் مكية

வசனம் வசனமாக – அல்-ஆதியாத் சூரா — 11 வசனம்




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers