PDF —
40 வசனம் Meccan PDF
Built right in your browser — download starts automatically

சூரா அல்-கியாமா pdf — பதிவிறக்கம் (தமிழ்)

சூரா அல்-கியாமா pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அல்-கியாமா மொழிபெயர்ப்பு. சூரா அல்-கியாமா (Meccan) 40 வசனம்.



40 வசனம் · Meccan · தமிழ்
bismillah
ﮊﮋﮌﮍﮎ
75:1 கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
ﮏﮐﮑﮒﮓ
75:2 நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.
ﮔﮕﮖﮗﮘﮙ
75:3 (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?
ﮚﮛﮜﮝﮞﮟﮠ
75:4 அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
ﮡﮢﮣﮤﮥﮦ
75:5 எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.
ﮧﮨﮩﮪﮫ
75:6 "கியாம நாள் எப்போழுது வரும்?" என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.
ﮬﮭﮮﮯ
75:7 ஆகவே, பார்வையும் மழுங்கி-
ﮰﮱﯓ
75:8 சந்திரன் ஒளியும் மங்கி-
ﯔﯕﯖﯗ
75:9 சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.
ﯘﯙﯚﯛﯜﯝ
75:10 அந்நாளில் "(தப்பித்துக் கெள; ள) எங்கு விரண்டோடுவது?" என்று மனிதன் கேட்பான்.
ﯞﯟﯠﯡ
75:11 "இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!" (என்று கூறப்படும்).
ﯢﯣﯤﯥﯦ
75:12 அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.
ﯧﯨﯩﯪﯫﯬﯭ
75:13 அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.
ﯮﯯﯰﯱﯲﯳ
75:14 எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கிறான்.
ﯴﯵﯶﯷ
75:15 அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்!
ﯸﯹﯺﯻﯼﯽﯾ
75:16 (நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள்.
ﯿﰀﰁﰂﰃ
75:17 நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.
ﰄﰅﰆﰇﰈ
75:18 எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.
ﰉﰊﰋﰌﰍ
75:19 பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.
ﭑﭒﭓﭔﭕ
75:20 எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.
ﭖﭗﭘ
75:21 ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.
ﭙﭚﭛﭜ
75:22 அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.
ﭝﭞﭟﭠ
75:23 தம்முடைய இறைவனளவில் நோக்கிய வையாக இருக்கும்.
ﭡﭢﭣﭤ
75:24 ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.
ﭥﭦﭧﭨﭩﭪ
75:25 இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.
ﭫﭬﭭﭮﭯ
75:26 அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,
ﭰﭱﭲﭳﭴ
75:27 "மந்திரிப்பவன் யார்?" எனக் கேட்கப்படுகிறது.
ﭵﭶﭷﭸ
75:28 ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.
ﭹﭺﭻﭼ
75:29 இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.
ﭽﭾﭿﮀﮁ
75:30 உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.
ﮂﮃﮄﮅﮆ
75:31 ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை, அவன் தொழவுமில்லை.
ﮇﮈﮉﮊ
75:32 ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.
ﮋﮌﮍﮎﮏﮐ
75:33 பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.
ﮑﮒﮓﮔ
75:34 கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!
ﮕﮖﮗﮘﮙ
75:35 பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.
ﮚﮛﮜﮝﮞﮟ
75:36 வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?
ﮠﮡﮢﮣﮤﮥﮦ
75:37 (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?
ﮧﮨﮩﮪﮫﮬ
75:38 பின்னர் அவன் 'அலக்' என்ற நிலையில் இருந்தான், அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.
ﮭﮮﮯﮰﮱﯓ
75:39 பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.
ﯔﯕﯖﯗﯘﯙﯚﯛ
75:40 (இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?

திருக்குர்ஆன்


Wednesday, September 9, 2026

Don't forget us in your sincere prayers