Innamal mu`minoonal lazeena aamanoo billaahi wa Rasoolihee wa izaa kaanoo ma`ahoo `alaaa amrin jaami`il lam yazhaboo hataa yastaazinooh; innal lazeena yastaa zinookana ulaaa`ikal lazeena yu`minoona billaahi wa Rasoolih; fa izas taazanooka liba`di shaanihim faazal liman shi`ta minhum wastaghfir lahumul laah; innal laaha Gahfoor Raheem
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் ஈமான் கொண்டவர்களே! (உண்மை) முஃமின்களாவார்கள், மேலும், அவர்கள் ஒரு பொதுவான காரியம் பற்றி அவருடன் (ஆலோசிக்கக் கூடி) இருக்கும் போது அவருடைய அனுமதியின்றி (அங்கிருந்து) செல்லமாட்டார்கள்; (நபியே!) உம்மிடத்தில் (அவ்வாறு) அனுமதி பெற்றுச் செல்பவர்களே நிச்சயமாக அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் மெய்யாகவே ஈமான் கொண்டவர்கள், ஆகவே தங்கள் காரியங்கள் சிலவற்றுக்காக அவர்கள் உம்மிடம் அனுமதி கேட்டால், அவர்களில் நீர் விரும்பியவருக்கு அனுமதி கொடுப்பீராக இன்னும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் நீர் மன்னிப்புக் கோருவீராக நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; கிருபையுடையவன்.
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
അല്ലാഹുവിലും അവന്റെ റസൂലിലും വിശ്വസിച്ചവര് മാത്രമാകുന്നു സത്യവിശ്വാസികള്. അദ്ദേഹത്തോടൊപ്പം അവര് വല്ല പൊതുകാര്യത്തിലും ഏര്പെട്ടിരിക്കുകയാണെങ്കില് അദ്ദേഹത്തോട് അനുവാദം ചോദിക്കാതെ അവര് പിരിഞ്ഞു പോകുകയില്ല. തീര്ച്ചയായും നിന്നോട് അനുവാദം ചോദിക്കുന്നവരാരോ അവരാകുന്നു അല്ലാഹുവിലും അവന്റെ റസൂലിലും വിശ്വസിക്കുന്നവര്. അങ്ങനെ അവരുടെ എന്തെങ്കിലും ആവശ്യത്തിന് വേണ്ടി (പിരിഞ്ഞ് പോകാന്) അവര് നിന്നോട് അനുവാദം ചോദിക്കുകയാണെങ്കില് അവരില് നീ ഉദ്ദേശിക്കുന്നവര്ക്ക് നീ അനുവാദം നല്കുകയും, അവര്ക്ക് വേണ്ടി നീ അല്ലാഹുവോട് പാപമോചനം തേടുകയും ചെയ്യുക. തീര്ച്ചയായും അല്ലാഹു ഏറെ പൊറുക്കുന്നവനും കരുണാനിധിയുമാകുന്നു.
عَلَىٰ أَمْرٍ جَامِعٍ – மக்களின் நலனுக்காக ஒன்றிணைக்கும் விஷயம் (போர், ஜுமுஆ, பெருநாள் தொழுகை, ஆலோசனை போன்றவை).
يَسْتَأْذِنُوهُ – அவரிடம் (நபி ﷺ) அனுமதி கேட்பார்கள்.
لِبَعْضِ شَأْنِهِمْ – அவர்களுடைய தேவைகளுக்காக.
فَأْذَن لِّمَن شِئْتَ – நீங்கள் விரும்புபவருக்கு அனுமதி வழங்குங்கள்.
விளக்கம்:
உண்மையான இறைநம்பிக்கையாளர்கள் (முஃமின்கள்) என்று சொல்லப்படுபவர்கள், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் உண்மையாக நம்பி, அவர்களுடைய சட்டங்களைப் பின்பற்றுபவர்களாவர். அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் முஸ்லிம்களின் நலனுக்காக ஒன்றிணைக்கும் ஒரு விஷயத்தில் (போர், தொழுகை, ஆலோசனை போன்றவை) இருக்கும்போது, அவர்களிடம் அனுமதி பெறாமல் சென்றுவிடமாட்டார்கள். அனுமதி கேட்டு, அவர் அனுமதி வழங்கினால்தான் செல்வார்கள்.
நபியே! உங்களிடம் அனுமதி கேட்பவர்கள்தான் உண்மையாக அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புகிறவர்கள். அவர்கள் தங்கள் தேவைகளுக்காக உங்களிடம் அனுமதி கேட்டால், நீங்கள் விரும்புபவர்களுக்கு அனுமதி வழங்குங்கள். அதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் சென்றால், அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுங்கள். ஏனெனில், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுள்ளவனாகவும் இருக்கிறான். தவ்பா செய்து மன்னிப்புக் கேட்கும் அடியார்களின் பாவங்களை மன்னித்து, அவர்கள் மீது கருணை காட்டுகிறான்.
பயன்கள்:
இந்த வசனம் முஸ்லிம்களுக்கு ஒழுக்கத்தையும், ஒழுங்கையும் கற்றுக்கொடுக்கிறது – தலைவரிடம் அனுமதி பெறாமல் கூட்டத்திலிருந்து விலகுவது கூடாது என்பதை உணர்த்துகிறது.
நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்பது இறைநம்பிக்கையின் அடையாளம் என்று காட்டுகிறது – இது நபி மீதுள்ள மரியாதையையும் பற்றுதலையும் வெளிப்படுத்துகிறது.
தலைமைக்குக் கீழ்ப்படிதலும், கூட்டு முடிவுகளில் ஒத்துழைப்பும் இஸ்லாமிய சமூகத்தின் அடிப்படைக் குணங்கள் என்பதை இது போதிக்கிறது.
அல்லாஹ்வின் மன்னிப்பும் கருணையும் மகத்தானது – தவறு செய்தாலும் உண்மையாக மன்னிப்புக் கேட்டால் அவன் மன்னிக்கிறான் என்பதை இது நம்பிக்கையூட்டுகிறது.
இந்த வசனம் முஸ்லிம்களிடையே அன்பு, மரியாதை, ஒழுக்கம் ஆகியவற்றை வளர்க்கிறது – இது இஸ்லாமிய சமூகத்தின் அழகிய பண்புகளில் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் ஈமான் கொண்டவர்களே! (உண்மை) முஃமின்களாவார்கள், மேலும், அவர்கள் ஒரு பொதுவான காரியம் பற்றி அவருடன் (ஆலோசிக்கக் கூடி) இருக்கும் போது அவருடைய அனுமதியின்றி (அங்கிருந்து) செல்லமாட்டார்கள்; (நபியே!) உம்மிடத்தில் (அவ்வாறு) அனுமதி பெற்றுச் செல்பவர்களே நிச்சயமாக அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் மெய்யாகவே ஈமான் கொண்டவர்கள், ஆகவே தங்கள் காரியங்கள் சிலவற்றுக்காக அவர்கள் உம்மிடம் அனுமதி கேட்டால், அவர்களில் நீர் விரும்பியவருக்கு அனுமதி கொடுப்பீராக இன்னும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் நீர் மன்னிப்புக் கோருவீராக நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; கிருபையுடையவன்.
மேலும், பெண்களில் விவாகத்தை நாட முடியாத (முதிர்ந்து) வயதை அடைந்து விட்ட பெண்கள், தங்கள் அழகலங்காரத்தை(ப் பிறருக்கு) வெளியாக்காதவர்களான நிலையில், தங்கள் மேலாடைகளைக் கழற்றியிருப்பது, அவர்கள் மீது குற்றமில்லை ஆனால் (இதனையும் அவர்கள் தவிர்த்து) ஒழுங்கைப் பேணிக்கொள்வது அவர்களுக்கு மிகவும் நலமாக இருக்கும். அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.
(முஃமின்களே! உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதில்) குருடர் மீதும் குற்றமில்லை முடவர் மீதும் குற்றமில்லை, நோயாளியின் மீதும் குற்றமில்லை உங்கள் மீதும் குற்றமில்லை நீங்கள் உங்கள் சொந்த வீடுகளிலோ அல்லது உங்கள் தந்தைமார் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாய்மார் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரர் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரர் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயாரின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது எ(ந்த வீட்டுடைய)தின் சாவிகள் உங்கள் வசம் இருக்கின்றதோ (அதிலும்) அல்லது உங்கள் தோழரின் வீடுகளிலோ, நீங்கள் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ புசிப்பது உங்கள் மீது குற்றமாகாது ஆனால் நீங்கள் எந்த வீட்டில் பிரவேசித்தாலும் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்குக் கிடைத்திருக்கும் முபாரக்கான - பாக்கியம் மிக்க - பரிசுத்தமான ("அஸ்ஸலாமு அலைக்கும்" என்னும்) நல்வாக்கியத்தை நீங்கள் உங்களுக்குள் கூறிக்கொள்ளுங்கள் - நீங்கள் அறிந்து கொள்வதற்காக, இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு(த் தன்) வசனங்களை விவரிக்கிறான்.
அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் ஈமான் கொண்டவர்களே! (உண்மை) முஃமின்களாவார்கள், மேலும், அவர்கள் ஒரு பொதுவான காரியம் பற்றி அவருடன் (ஆலோசிக்கக் கூடி) இருக்கும் போது அவருடைய அனுமதியின்றி (அங்கிருந்து) செல்லமாட்டார்கள்; (நபியே!) உம்மிடத்தில் (அவ்வாறு) அனுமதி பெற்றுச் செல்பவர்களே நிச்சயமாக அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் மெய்யாகவே ஈமான் கொண்டவர்கள், ஆகவே தங்கள் காரியங்கள் சிலவற்றுக்காக அவர்கள் உம்மிடம் அனுமதி கேட்டால், அவர்களில் நீர் விரும்பியவருக்கு அனுமதி கொடுப்பீராக இன்னும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் நீர் மன்னிப்புக் கோருவீராக நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; கிருபையுடையவன்.
(முஃமின்களே!) உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பதுபோல் உங்களுக்கிடையில் (அல்லாஹ்வுடைய) தூதரின் அழைப்பை ஆக்காதீர்கள். உங்களிலிருந்து (அவருடைய சபையிலிருந்து) எவர் மறைவாக நழுவி விடுகிறார்களோ அவர்களை திடமாக அல்லாஹ் (நன்கு) அறிவான் - ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்.
வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதை அறிந்து கொள்வீர்களாக! நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ அதை அவன் (நன்கு) அறிவான்; மேலும் அவனிடத்தில் அவர்கள் மீட்டப்படும் அந் நாளில் அவன், அவர்கள் (இம்மையில்) என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதையும் அவர்களுக்கு அறிவிப்பான் - மேலும், அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிபவன்.
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.