அத்-தௌபா · 5/129
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அத்-தௌபா
فَإِذَا انسَلَخَ الْأَشْهُرُ الْحُرُمُ فَاقْتُلُوا الْمُشْرِكِينَ حَيْثُ وَجَدتُّمُوهُمْ وَخُذُوهُمْ وَاحْصُرُوهُمْ وَاقْعُدُوا لَهُمْ كُلَّ مَرْصَدٍ ۚ فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ ۚ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ ۝٥
Fa izansalakhal Ashhurul Hurumu faqtulul mushrikeena haisu wajattumoohum wa khuzoohum wahsuroohum qaq`udoo lahum kulla marsad; fa-in taaboo wa aqaamus Salaata wa aatawuz Zakaata fakhalloo sabeelahum; innal laaha Ghafoorur Raheem
📖 தமிழில்
(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

🎧 கேள்
📜

மொழிபெயர்ப்பு — Tafsir

சொற்பொருள் விளக்கம்:

  • انسَلَخَ: முடிவடைந்தது, கழிந்தது (தோல் உரிவது போல் ஒன்று மற்றொன்றிலிருந்து பிரிவதைக் குறிக்கும்).
  • الأَشْهُرُ الْحُرُمُ: புனித மாதங்கள். இங்கே குறிப்பிடப்படுவது, இணைவைப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நான்கு மாதங்கள் (ஷவ்வால், துல்-கஅதா, துல்-ஹிஜ்ஜா, முஹர்ரம்).
  • وَخُذُوهُمْ: அவர்களைச் சிறைப்பிடியுங்கள்.
  • وَاحْصُرُوهُمْ: அவர்களை முற்றுகையிடுங்கள்.
  • كُلَّ مَرْصَدٍ: ஒவ்வொரு வழியிலும், ஒவ்வொரு இடத்திலும் பதுங்கியிருந்து காத்திருங்கள்.

விளக்கம்:

புனித மாதங்கள் நான்கும் முடிவடைந்தவுடன், இணைவைப்பவர்களுடன் போர் புரிய உத்தரவிடப்படுகிறது. அவர்கள் எங்கு கண்டாலும் கொல்லுங்கள், அவர்களைச் சிறைப்பிடியுங்கள், அவர்களை முற்றுகையிட்டு நெருக்கடிக்குள்ளாக்குங்கள், அவர்கள் தப்பிச் செல்லக்கூடிய ஒவ்வொரு பாதையிலும் அவர்களுக்காகக் காத்திருங்கள். ஆனால் அவர்கள் தங்கள் இணைவைப்பை விட்டுவிட்டு, உண்மையான மனதுடன் தவ்பா செய்து, இஸ்லாத்தில் நுழைந்து, தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத் வழங்கினால், அவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் உங்கள் சகோதரர்களாகிவிட்டதால், அவர்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையும் நிறுத்துங்கள். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கருணையாளனாகவும் இருக்கிறான். தவ்பா செய்து திரும்புபவர்களை அவன் மன்னித்து, அவர்கள் மீது கருணை காட்டுகிறான்.


பயன்கள்:

  1. இஸ்லாம் எப்போதும் அமைதியையே விரும்புகிறது; ஆனால் எதிரிகள் அமைதியை மீறி, வஞ்சகம் செய்யும்போது அவர்களுக்கு எதிராகக் கடுமையாகச் செயல்பட அனுமதிக்கிறது.
  2. இணைவைப்பு என்பது மன்னிக்கப்பட முடியாத மாபெரும் குற்றம்; ஆனால் அதிலிருந்து மனந்திரும்பி இஸ்லாத்தில் நுழைபவர்களுக்கு முழு மன்னிப்பு உண்டு.
  3. தொழுகையும் ஸகாத்தும் இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள்; இவற்றை நிறைவேற்றுபவர்கள் முஸ்லிம் சமூகத்தின் முழு உரிமைகளைப் பெறுகிறார்கள்.
  4. அல்லாஹ்வின் கருணை மிகப்பெரியது; எவ்வளவு பெரிய பாவமாக இருந்தாலும், உண்மையான தவ்பாவுடன் அவனிடம் திரும்பினால் அவன் மன்னிக்கிறான்.
  5. இந்த வசனம் நமக்குக் கற்பிக்கும் பாடம்: நம் எதிரிகளிடம் கூட நாம் நியாயமாகவும், கருணையுடனும் நடந்துகொள்ள வேண்டும்; அவர்கள் நல்வழிக்குத் திரும்பினால் அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.


📜 வசனம் 3-7 — சூரா அத்-தௌபா

3وَأَذَانٌ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ إِلَى النَّاسِ يَوْمَ الْحَجِّ الْأَكْبَرِ أَنَّ اللَّهَ بَرِيءٌ مِّنَ الْمُشْرِكِينَ ۙ وَرَسُولُهُ ۚ فَإِن تُبْتُمْ فَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَإِن تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّكُمْ غَيْرُ مُعْجِزِي اللَّهِ ۗ وَبَشِّرِ الَّذِينَ كَفَرُوا بِعَذَابٍ أَلِيمٍ
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் முஷ்ரிக்குகளுடன் (செய்திருந்த உடன்படிக்கையை) விட்டும் நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்பதை ஹஜ்ஜுல் அக்பர் (மாபெரும் ஹஜ்ஜுடைய) நாளில் மனிதர்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெளிப்படையாக அறிவிக்கின்றனர்; எனவே நீங்கள் (இணைவைப்பதிலிருந்து மனந்திருந்தி) விலகிக் கொண்டால் அது உங்களுக்கே நலமாகும்; நீங்கள் (சத்தியத்தை) புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதை (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நிராகரிப்போருக்கு நோவினை தரும் வேதனை இருக்கிறது என்று நீர் நன்மாராயம் கூறுவீராக.
4إِلَّا الَّذِينَ عَاهَدتُّم مِّنَ الْمُشْرِكِينَ ثُمَّ لَمْ يَنقُصُوكُمْ شَيْئًا وَلَمْ يُظَاهِرُوا عَلَيْكُمْ أَحَدًا فَأَتِمُّوا إِلَيْهِمْ عَهْدَهُمْ إِلَىٰ مُدَّتِهِمْ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ
ஆனால், நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இந்த முஷ்ரிக்குகளில், எதையும் குறைத்து விடாமலும், உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
5فَإِذَا انسَلَخَ الْأَشْهُرُ الْحُرُمُ فَاقْتُلُوا الْمُشْرِكِينَ حَيْثُ وَجَدتُّمُوهُمْ وَخُذُوهُمْ وَاحْصُرُوهُمْ وَاقْعُدُوا لَهُمْ كُلَّ مَرْصَدٍ ۚ فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ ۚ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
6وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّىٰ يَسْمَعَ كَلَامَ اللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْلَمُونَ
(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.
7كَيْفَ يَكُونُ لِلْمُشْرِكِينَ عَهْدٌ عِندَ اللَّهِ وَعِندَ رَسُولِهِ إِلَّا الَّذِينَ عَاهَدتُّمْ عِندَ الْمَسْجِدِ الْحَرَامِ ۖ فَمَا اسْتَقَامُوا لَكُمْ فَاسْتَقِيمُوا لَهُمْ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ
அல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் முஷ்ரிக்குகளுக்கு எப்படி உடன்படிக்கை இருக்க முடியும்? ஆனால், நீங்கள் மஸ்ஜிதுல் ஹராம் (கஃபத்துல்லாஹ்) முன் (எவர்களுடன்) உடன்படிக்கை செய்து கொண்டீர்களோ, அவர்களைத் தவிர அவர்கள் (தம் உடன்படிக்கைப்படி) உங்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளும்வரை நீங்களும் அவர்களுடன் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
அத்-தௌபாகுர்ஆன் பட்டியல்
129வசனம்
MedinanRevelation
5வசனம்

மொழிபெயர்ப்பு — அத்-தௌபா 5

சூரா அத்-தௌபா வசனம் 5 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள்…

சூரா வசனம் 5/129 — சூரா அத்-தௌபா التوبة (Medinan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அத்-தௌபா கேள், சூரா அத்-தௌபா மொழிபெயர்ப்பு, சூரா அத்-தௌபா mp3, சூரா அத்-தௌபா pdf. வசனம் 3–7. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Monday, September 7, 2026

Don't forget us in your sincere prayers