PDF —
30 வசனம் Meccan PDF
Built right in your browser — download starts automatically

சூரா அல்-ஃபஜ்ர் pdf — பதிவிறக்கம் (தமிழ்)

சூரா அல்-ஃபஜ்ர் pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அல்-ஃபஜ்ர் மொழிபெயர்ப்பு. சூரா அல்-ஃபஜ்ர் (Meccan) 30 வசனம்.

← அல்-காஷியாசூரா அல்-ஃபஜ்ர் அல்-பலத் →


30 வசனம் · Meccan · தமிழ்
bismillah
ﭤﭥ
89:1 விடியற் காலையின் மீது சத்தியமாக,
ﭦﭧﭨ
89:2 பத்து இரவுகளின் மீது சத்தியமாக,
ﭩﭪﭫ
89:3 இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,
ﭬﭭﭮﭯ
89:4 செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,
ﭰﭱﭲﭳﭴﭵﭶ
89:5 இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?
ﭷﭸﭹﭺﭻﭼﭽ
89:6 உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
ﭾﭿﮀﮁ
89:7 (அவர்கள்) தூண்களையுடைய 'இரம்' (நகர) வாசிகள்,
ﮂﮃﮄﮅﮆﮇﮈ
89:8 அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.
ﮉﮊﮋﮌﮍﮎ
89:9 பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)
ﮏﮐﮑﮒ
89:10 மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)
ﮓﮔﮕﮖﮗ
89:11 அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்.
ﮘﮙﮚﮛ
89:12 அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்.
ﮜﮝﮞﮟﮠﮡ
89:13 எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்.
ﮢﮣﮤﮥ
89:14 நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கிறன்றான்.
ﮦﮧﮨﮩﮪﮫﮬﮭﮮﮯﮰﮱ
89:15 ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்; "என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்" என்று கூறுகிறான்.
ﯓﯔﯕﯖﯗﯘﯙﯚﯛﯜﯝ
89:16 எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், "என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்" எனக் கூறுகின்றான்.
ﯞﯟﯠﯡﯢﯣﯤ
89:17 அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.
ﯥﯦﯧﯨﯩﯪ
89:18 ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.
ﯫﯬﯭﯮﯯ
89:19 இன்னும் (பிறருடைய) அநந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.
ﯰﯱﯲﯳﯴ
89:20 இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.
ﯵﯶﯷﯸﯹﯺﯻﯼ
89:21 அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,
ﯽﯾﯿﰀﰁﰂ
89:22 உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது,
ﭑﭒﭓﭔﭕﭖﭗﭘﭙﭚﭛ
89:23 அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.
ﭜﭝﭞﭟﭠ
89:24 "என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!" என்று அப்போது மனிதன் கூறுவான்.
ﭡﭢﭣﭤﭥﭦ
89:25 ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.
ﭧﭨﭩﭪﭫ
89:26 மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.
ﭬﭭﭮﭯ
89:27 (ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே!
ﭰﭱﭲﭳﭴﭵ
89:28 நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.
ﭶﭷﭸﭹ
89:29 நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.
ﭺﭻﭼ
89:30 மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).

திருக்குர்ஆன்


Wednesday, September 9, 2026

Don't forget us in your sincere prayers