PDF —
19 வசனம் Meccan PDF
Built right in your browser — download starts automatically

சூரா அல்-இன்பிதார் pdf — பதிவிறக்கம் (தமிழ்)

சூரா அல்-இன்பிதார் pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அல்-இன்பிதார் மொழிபெயர்ப்பு. சூரா அல்-இன்பிதார் (Meccan) 19 வசனம்.



19 வசனம் · Meccan · தமிழ்
bismillah
ﭑﭒﭓﭔ
82:1 வானம் பிளந்து விடும்போது
ﭕﭖﭗﭘ
82:2 நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
ﭙﭚﭛﭜ
82:3 கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,
ﭝﭞﭟﭠ
82:4 கப்றுகள் திறக்கப்படும் போது,
ﭡﭢﭣﭤﭥﭦ
82:5 ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.
ﭧﭨﭩﭪﭫﭬﭭ
82:6 மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?
ﭮﭯﭰﭱﭲ
82:7 அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.
ﭳﭴﭵﭶﭷﭸﭹ
82:8 எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான்.
ﭺﭻﭼﭽﭾ
82:9 இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.
ﭿﮀﮁﮂ
82:10 நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
ﮃﮄﮅ
82:11 (அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.
ﮆﮇﮈﮉ
82:12 நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.
ﮊﮋﮌﮍﮎ
82:13 நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
ﮏﮐﮑﮒﮓ
82:14 இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.
ﮔﮕﮖﮗ
82:15 நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.
ﮘﮙﮚﮛﮜ
82:16 மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்.
ﮝﮞﮟﮠﮡﮢ
82:17 நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது?
ﮣﮤﮥﮦﮧﮨﮩ
82:18 பின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது?
ﮪﮫﮬﮭﮮﮯﮰﮱﯓﯔﯕ
82:19 அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.

திருக்குர்ஆன்


Wednesday, September 9, 2026

Don't forget us in your sincere prayers