அல்-இன்பிதார் சூரா அரபி மற்றும் தமிழ்

அல்-இன்பிதார் சூராவை முழுமையான தமிழ் மொழிபெயர்ப்புடன் படியுங்கள். அரபி உரை மற்றும் ஒலி திலாவத்துடன் வசனம் வசனமாக. (19 வசனம் — مكية). அல்-இன்பிதார் கேள், அல்-இன்பிதார் மொழிபெயர்ப்பு, அல்-இன்பிதார் mp3, அல்-இன்பிதார் pdf.

அல்-இன்பிதார் சூரா படி மற்றும் கேள்

🎧 வசனம்
M Mishary Rashid Alafasy
M Mahmoud Khalil Al-Husary
A Abdurrahman As-Sudais
M Mohamed Siddiq Al-Minshawi
A Abdul Basit Abdul Samad
A Ali Al-Hudhaify
A Ahmed ibn Ali al-Ajamy
A Abu Bakr Ash-Shaatree
M Muhammad Ayyoub
A Abdullah Basfar
A Abdullah Al-Juhani
M Maher Al Muaiqly
x1
إِذَا السَّمَاءُ انفَطَرَتْ ۝١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 1
வானம் பிளந்து விடும்போது
وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ ۝٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 2
நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ ۝٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 3
கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,
وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ ۝٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 4
கப்றுகள் திறக்கப்படும் போது,
عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ ۝٥
📖 மொழிபெயர்ப்பு வசனம் 5
ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.
يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ ۝٦
📖 மொழிபெயர்ப்பு வசனம் 6
மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?
الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ ۝٧
📖 மொழிபெயர்ப்பு வசனம் 7
அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.
فِي أَيِّ صُورَةٍ مَّا شَاءَ رَكَّبَكَ ۝٨
📖 மொழிபெயர்ப்பு வசனம் 8
எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான்.
كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ ۝٩
📖 மொழிபெயர்ப்பு வசனம் 9
இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.
وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ ۝١٠
📖 மொழிபெயர்ப்பு வசனம் 10
நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
كِرَامًا كَاتِبِينَ ۝١١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 11
(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ ۝١٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 12
நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.
إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ ۝١٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 13
நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ ۝١٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 14
இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.
يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ ۝١٥
📖 மொழிபெயர்ப்பு வசனம் 15
நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.
وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ ۝١٦
📖 மொழிபெயர்ப்பு வசனம் 16
மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்.
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ ۝١٧
📖 மொழிபெயர்ப்பு வசனம் 17
நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது?
ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ ۝١٨
📖 மொழிபெயர்ப்பு வசனம் 18
பின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது?
يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا ۖ وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ ۝١٩
📖 மொழிபெயர்ப்பு வசனம் 19
அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.
← 81 அல்-இன்பிதார் (82/114) 83 →
படிக்க அல்-இன்பிதார் சூரா தமிழ் மொழிபெயர்ப்பு – வசனங்கள் மற்றும் ஒலி

82الإنفطار Al-Infitar 📚 19 வசனம் مكية

வசனம் வசனமாக – அல்-இன்பிதார் சூரா — 19 வசனம்




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers