PDF —
15 வசனம் Meccan PDF
Built right in your browser — download starts automatically

சூரா அஷ்-ஷம்ஸ் pdf — பதிவிறக்கம் (தமிழ்)

சூரா அஷ்-ஷம்ஸ் pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அஷ்-ஷம்ஸ் மொழிபெயர்ப்பு. சூரா அஷ்-ஷம்ஸ் (Meccan) 15 வசனம்.

← அல்-பலத்சூரா அஷ்-ஷம்ஸ் அல்-லைல் →


15 வசனம் · Meccan · தமிழ்
bismillah
ﭜﭝﭞ
91:1 சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக
ﭟﭠﭡﭢ
91:2 (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
ﭣﭤﭥﭦ
91:3 (சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-
ﭧﭨﭩﭪ
91:4 (அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-
ﭫﭬﭭﭮ
91:5 வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைந்திருப்பதின் மீதும் சத்தியமாக-
ﭯﭰﭱﭲ
91:6 பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
ﭳﭴﭵﭶ
91:7 ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-
ﭷﭸﭹﭺ
91:8 அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.
ﭻﭼﭽﭾﭿ
91:9 அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.
ﮀﮁﮂﮃﮄ
91:10 ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.
ﮅﮆﮇﮈ
91:11 'ஸமூது' (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.
ﮉﮊﮋﮌ
91:12 அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது,
ﮍﮎﮏﮐﮑﮒﮓﮔ
91:13 அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: "இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது, இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்" என்று கூறினார்.
ﮕﮖﮗﮘﮙﮚﮛﮜ
91:14 ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.
ﮝﮞﮟﮠ
91:15 அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.

திருக்குர்ஆன்


Wednesday, September 9, 2026

Don't forget us in your sincere prayers