Wa laqad sadaqakumul laahu wa`dahooo iz tahussoo nahum bi iznihee hattaaa izaa fashiltim wa tanaaza`tum fil amri wa `asaitum mim ba`di maaa araakum maa tuhibboon; minkum mai yureedud dunyaa wa minkum mai yureedul Aakhirah; summa sarafakum `anhum sarafakum `anhum liyabtaliyakum wa laqad `afaa `ankum; wallaahu zoo fadlin `alal mu`mineen
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
இன்னும் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான்; (அவ்வமயம் உஹது களத்தில்) பகைவர்களை அவன் அனுமதியின் பிரகாரம் நீங்கள் அழித்து விடும் நிலையில் இருந்தபோது நீங்கள் தயங்கினீர்கள்;. நீங்கள் (உங்களுக்கிடப்பட்ட) உத்திரவு பற்றித் தர்க்கிக்கத் துவங்கினீர்கள்;. நீங்கள் விரும்பிய (வெற்றியை) அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்திரவுக்கு மாறு செய்யலானீர்கள்;. உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள். இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்;. பின்னர், உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளைவிட்டு உங்களைப் பின்னடையுமாறு திருப்பினான்;. நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான். மேலும் அல்லாஹ் முஃமின்களிடம் அருள் பொழிவோனாகவே இருக்கின்றான்.
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
അല്ലാഹുവിന്റെ അനുമതി പ്രകാരം നിങ്ങളവരെ കൊന്നൊടുക്കിക്കൊണ്ടിരുന്നപ്പോള് നിങ്ങളോടുള്ള അല്ലാഹുവിന്റെ വാഗ്ദാനത്തില് അവന് സത്യം പാലിച്ചിട്ടുണ്ട്. എന്നാല് നിങ്ങള് ഭീരുത്വം കാണിക്കുകയും, കാര്യനിര്വഹണത്തില് അന്യോന്യം പിണങ്ങുകയും, നിങ്ങള് ഇഷ്ടപ്പെടുന്ന നേട്ടം അല്ലാഹു നിങ്ങള്ക്ക് കാണിച്ചുതന്നതിന് ശേഷം നിങ്ങള് അനുസരണക്കേട് കാണിക്കുകയും ചെയ്തപ്പോഴാണ് (കാര്യങ്ങള് നിങ്ങള്ക്കെതിരായത്.) നിങ്ങളില് ഇഹലോകത്തെ ലക്ഷ്യമാക്കുന്നവരുണ്ട്. പരലോകത്തെ ലക്ഷ്യമാക്കുന്നവരും നിങ്ങളിലുണ്ട്. അനന്തരം നിങ്ങളെ പരീക്ഷിക്കുവാനായി അവരില് (ശത്രുക്കളില്) നിന്ന് നിങ്ങളെ അല്ലാഹു പിന്തിരിപ്പിച്ചുകളഞ്ഞു. എന്നാല് അല്ലാഹു നിങ്ങള്ക്ക് മാപ്പ് തന്നിരിക്കുന്നു. അല്ലാഹു സത്യവിശ്വാസികളോട് ഔദാര്യം കാണിക്കുന്നവനാകുന്നു.
அல்லாஹ் தனது வாக்குறுதியை உங்களுக்கு உண்மையாக்கினான். உஹத் போரில், அவனது அனுமதியால் நீங்கள் எதிரிகளைக் கடுமையாகத் தாக்கி வெற்றி பெற்றீர்கள். ஆனால், போரின் நடுவில் நீங்கள் தளர்ச்சியடைந்தீர்கள்; மலை உச்சியில் நிலை கொண்டிருந்த அம்பெய்யும் படையினர், தங்கள் இடத்தை விட்டு இறங்கி செல்லலாமா வேண்டாமா என்று கருத்து வேறுபாடு கொண்டனர். நபி (ஸல்) அவர்கள் எந்த நிலையிலும் அந்த இடத்தை விட்டு நகர வேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தும், நீங்கள் அவர்களுக்குக் கீழ்ப்படியாமல் மீறினீர்கள். அப்போது அல்லாஹ் உங்களுக்கு வெற்றியையும் செல்வத்தையும் காட்டிய பின்னரே இந்த மீறல் நிகழ்ந்தது.
உங்களில் சிலர் உலக செல்வத்தையே நாடினர் — அவர்களே கனீமத் (போர்ச் செல்வம்) சேகரிக்கச் சென்றவர்கள். உங்களில் சிலர் மறுமையின் நன்மையை நாடினர் — அவர்களே நபியின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து தங்கள் இடத்தில் நிலைத்திருந்தவர்கள். பின்னர் அல்லாஹ் உங்களை எதிரிகளிடமிருந்து விலக்கி, அவர்கள் உங்களைத் தாக்கும்படி செய்தான் — இது உங்களைச் சோதிப்பதற்காகவே. நீங்கள் செய்த தவறுக்காக உங்களை முற்றிலும் அழித்து விடாமல் அல்லாஹ் உங்களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்கள் மீது மகத்தான அருளுடையவன்.
பயன்கள்:
அல்லாஹ்வின் வாக்குறுதி எப்போதும் உண்மையானது; அவன் தரும் வெற்றி நிபந்தனைகளுடன் கூடியது — பொறுமை, கீழ்ப்படிதல், உறுதி.
நபியின் கட்டளைக்குக் கீழ்ப்படிதல்தான் வெற்றியின் திறவுகோல்; அதை மீறினால் தோல்வி உறுதி.
உலக ஆசை மனிதனை இழிவுபடுத்தும்; மறுமை நோக்கம் அவனை உயர்த்தும்.
சோதனைகள் இறைநம்பிக்கையாளர்களின் நிலையைத் தெளிவுபடுத்தும் — யார் உறுதியானவர், யார் மென்மையானவர் என்பதை வெளிப்படுத்தும்.
அல்லாஹ்வின் மன்னிப்பு மிகப் பெரியது; தவறு செய்த பிறகும் அவன் தனது அருளால் நம்மைத் தாங்குகிறான். இது நமக்கு நம்பிக்கையளிக்கிறது — தவறு செய்தால் விரக்தியடையாமல், தவ்பா செய்து திரும்பினால் அல்லாஹ் மன்னிப்பான்.
இன்னும் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான்; (அவ்வமயம் உஹது களத்தில்) பகைவர்களை அவன் அனுமதியின் பிரகாரம் நீங்கள் அழித்து விடும் நிலையில் இருந்தபோது நீங்கள் தயங்கினீர்கள்;. நீங்கள் (உங்களுக்கிடப்பட்ட) உத்திரவு பற்றித் தர்க்கிக்கத் துவங்கினீர்கள்;. நீங்கள் விரும்பிய (வெற்றியை) அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்திரவுக்கு மாறு செய்யலானீர்கள்;. உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள். இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்;. பின்னர், உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளைவிட்டு உங்களைப் பின்னடையுமாறு திருப்பினான்;. நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான். மேலும் அல்லாஹ் முஃமின்களிடம் அருள் பொழிவோனாகவே இருக்கின்றான்.
விரைவிலேயே நிராகரிப்பவர்களின் இதயங்களில் திகிலை உண்டாக்குவோம். ஏனெனில் (தனக்கு இணை வைப்பதற்கு அவர்களுக்கு) எந்தவிதமான ஆதாரமும் இறக்கி வைக்கப்படாமலிருக்க, அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தார்கள். தவிர, அவர்கள் தங்குமிடம் நெருப்புதான்;. அக்கிரமக்காரர்கள் தங்கும் இடங்களிலெல்லாம் அது தான் மிகவும் கெட்டது.
இன்னும் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான்; (அவ்வமயம் உஹது களத்தில்) பகைவர்களை அவன் அனுமதியின் பிரகாரம் நீங்கள் அழித்து விடும் நிலையில் இருந்தபோது நீங்கள் தயங்கினீர்கள்;. நீங்கள் (உங்களுக்கிடப்பட்ட) உத்திரவு பற்றித் தர்க்கிக்கத் துவங்கினீர்கள்;. நீங்கள் விரும்பிய (வெற்றியை) அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்திரவுக்கு மாறு செய்யலானீர்கள்;. உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள். இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்;. பின்னர், உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளைவிட்டு உங்களைப் பின்னடையுமாறு திருப்பினான்;. நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான். மேலும் அல்லாஹ் முஃமின்களிடம் அருள் பொழிவோனாகவே இருக்கின்றான்.
(நினைவு கூருங்கள்! உஹது களத்தில்) உங்கள் பின்னால் இருந்து இறைதூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் எவரையும் திரும்பிப் பார்க்காமல் மேட்டின்மேல் ஏறிக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தீர்கள். ஆகவே (இவ்வாறு இறை தூதருக்கு நீங்கள் கொடுத்த துக்கத்தின்) பலனாக இறைவன் துக்கத்தின்மேல் துக்கத்தை உங்களுக்குக் கொடுத்தான். ஏனெனில் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது தவறி விட்டாலோ, உங்களுக்குச் சோதனைகள் ஏற்பட்டாலோ நீங்கள் (சோர்வும்) கவலையும் அடையாது (பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்); இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
பிறகு, அத்துக்கத்திற்குப்பின் அவன் உங்களுக்கு அமைதி அளிப்பதற்காக நித்திரையை இறக்கி வைத்தான்;. உங்களில் ஒரு பிரிவினரை அந்நித்திரை சூழ்ந்து கொண்டது. மற்றொரு கூட்டத்தினரோ- அவர்களுடைய மனங்கள் அவர்களுக்குக் கவலையை உண்டு பண்ணி விட்டன. அவர்கள் அறிவில்லாதவர்களைப் போன்று, உண்மைக்கு மாறாக அல்லாஹ்வைப் பற்றி சந்தேகம் கொள்ளலாயினர்; (அதனால்) அவர்கள் கூறினார்கள்; "இ(ப்போர்)க் காரியத்தில் நமக்கு சாதகமாக ஏதேனும் உண்டா?" (என்று, அதற்கு) "நிச்சயமாக இக்காரியம் முழுவதும் அல்லாஹ்விடமே உள்ளது" என்று (நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் உம்மிடம் வெளிப்படையாகக் கூற முடியாத ஒன்றைத் தம் நெஞ்சங்களில் மறைத்து வைத்திருக்கின்றனர்;. அவர்கள் (தமக்குள்) கூறிக்கொள்ளுகிறார்கள்; "இக்காரியத்தால் நமக்கு ஏதேனும் சாதகமாக இருந்திருந்தால் நாம் இங்கு கொல்லப்பட்டு இருக்க மாட்டோம்;" "நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், யாருக்கு மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் (தன் கொலைக்களங்களுக்கு) மரணம் அடையும் இடங்களுக்குச் சென்றே இருப்பார்கள்!" என்று (நபியே!) நீர் கூறும். (இவ்வாறு ஏற்பட்டது) உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் சோதிப்பதற்காகவும், உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை (அகற்றிச்) சத்தப்படுத்துவதற்காகவும் ஆகும் - இன்னும், அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.