Wa laqad ji`tumoonaa furaadaa kamaa khalaqnaakum awwala marratinw wa taraktum maa khawwalnaakum waraaa`a zuhoorikum wa maa naraa ma`akum shufa`aaa` akumul lazeena za`amtum annahum feekum shurakaaa`; laqat taqatta`a bainakum wa dalla `annkum maa kuntum taz`umoon
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
அன்றியும் (மறுமையில் அல்லாஹ் இவர்களை நோக்கி), "நாம் உங்களை முதல் முறையாகப் படைத்தோமே அதுபோன்று நீங்கள் (எதுவுமில்லாமல்) தனியே எம்மிடம் வந்துவிட்டீர்கள்; இன்னும்; நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டு விட்டீர்கள்; எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, உங்களுக்குப் பரிந்து பேசுவார்கள் (என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ) அவர்களை நாம் உங்களுடனிருப்பதைக் காணவில்லை, உங்களுக்கிடையே இருந்த தொடர்பும் அறுந்து விட்டது, உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன" (என்று கூறுவான்).
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
(അവരോട് അല്ലാഹു പറയും:) നിങ്ങളെ നാം ആദ്യഘട്ടത്തില് സൃഷ്ടിച്ചത് പോലെത്തന്നെ നിങ്ങളിതാ നമ്മുടെ അടുക്കല് ഒറ്റപ്പെട്ടവരായി വന്നെത്തിയിരിക്കുന്നു. നിങ്ങള്ക്ക് നാം അധീനപ്പെടുത്തിതന്നതെല്ലാം നിങ്ങളുടെ പിന്നില് നിങ്ങള് വിട്ടേച്ച് പോന്നിരിക്കുന്നു. നിങ്ങളുടെ കാര്യത്തില് (അല്ലാഹുവിന്റെ) പങ്കുകാരാണെന്ന് നിങ്ങള് ജല്പിച്ചിരുന്ന നിങ്ങളുടെ ആ ശുപാര്ശക്കാരെ നിങ്ങളോടൊപ്പം നാം കാണുന്നില്ല. നിങ്ങള് തമ്മിലുള്ള ബന്ധം അറ്റുപോകുകയും നിങ്ങള് ജല്പിച്ചിരുന്നതെല്ലാം നിങ്ങളെ വിട്ടുപോകുകയും ചെയ്തിരിക്കുന്നു.
خَوَّلْنَاكُمْ: நாம் உங்களுக்கு வழங்கிய செல்வங்கள், அதிகாரங்கள்.
شُفَعَاءَكُمُ: உங்கள் பரிந்துரையாளர்கள் (நீங்கள் இணைவைத்த தெய்வங்கள்).
تَقَطَّعَ بَيْنَكُمْ: உங்களுக்கிடையே இருந்த தொடர்புகள் அறுந்து போயின.
ضَلَّ عَنكُم: உங்களை விட்டு மறைந்து போயின, அழிந்து போயின.
விளக்கம்:
மறுமை நாளில், இணைவைப்பாளர்களிடம் அல்லாஹ் கூறுவான்: "நீங்கள் முதல் முறை நாம் உங்களைப் படைத்தபோது எப்படி தனித்தனியாக, வெறுமையாக இருந்தீர்களோ, அதே போன்று இன்று நம்மிடம் தனித்தனியாக வந்து சேர்ந்துள்ளீர்கள். அப்போது உங்களிடம் செல்வமும் இல்லை, பிள்ளைகளும் இல்லை, உதவியாளர்களும் இல்லை. நாம் உங்களுக்கு வழங்கிய செல்வங்கள், அதிகாரங்கள், ஆடம்பரங்கள் அனைத்தையும் பின்னால் விட்டுவிட்டு வந்துவிட்டீர்கள். அவற்றில் ஒன்றையும் உங்களுடன் கொண்டு வரவில்லை.
இன்று நாம் உங்களுடன் உங்கள் பரிந்துரையாளர்களைக் காணவில்லை. நீங்கள் உலகில் வாழ்ந்த காலத்தில், இந்தச் சிலைகளும் தெய்வங்களும் உங்களுக்காகப் பரிந்துரைப்பார்கள், அவை அல்லாஹ்வுக்கு இணையானவை என்று கூறிக்கொண்டிருந்தீர்களே! அவை எங்கே? இன்று அவை உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை. உங்களுக்கும் அவற்றிற்கும் இடையே இருந்த தொடர்புகள் அனைத்தும் அறுந்துபோயின. நீங்கள் அவற்றைப் பரிந்துரையாளர்களாக எண்ணியிருந்தீர்களே, அவை அனைத்தும் உங்களை விட்டு மறைந்து போயின. நீங்கள் அவற்றை நம்பியிருந்தீர்களே, அவை அனைத்தும் பொய்யானவை என்பது தெளிவாகிவிட்டது. உங்கள் நம்பிக்கைகள் அனைத்தும் வீணாகிப்போயின. உங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்தீர்கள்."
பயன்கள்:
மறுமை நாளில் ஒவ்வொருவரும் தனித்தனியாக அல்லாஹ்வின் முன் நிற்பார்கள். அங்கு செல்வமோ, பதவியோ, உறவுகளோ யாருக்கும் உதவாது. எனவே, இவ்வுலகில் நல்லறங்களைச் செய்து, இறைவனின் கட்டளைகளைப் பின்பற்றி வாழ வேண்டும்.
இவ்வுலக செல்வங்களும் ஆடம்பரங்களும் நிலையானவை அல்ல. அவற்றை நம்பி ஏமாற்றப்படக்கூடாது. மெய்யான நிலையான வாழ்வு மறுமை வாழ்வே ஆகும்.
அல்லாஹ்வுக்கு இணைவைப்பது மிகப்பெரிய தவறு. இணைவைப்பவர்களின் நம்பிக்கைகள் அனைத்தும் மறுமையில் பொய்யாகிவிடும். அவர்களுக்கு உதவி செய்ய யாரும் இருக்க மாட்டார்கள்.
அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, அவனிடம் மட்டுமே உதவி தேட வேண்டும். அவனைத் தவிர வேறு யாரும் நமக்கு பரிந்துரை செய்யவோ, உதவி செய்யவோ முடியாது என்பதை உணர வேண்டும்.
இவ்வுலகில் நாம் ஈட்டும் செல்வங்கள், பதவிகள் அனைத்தும் அல்லாஹ்வின் அருளால் கிடைத்தவை. அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிட வேண்டும். அவற்றை நம்பி ஆணவம் கொள்ளக்கூடாது.
அன்றியும் (மறுமையில் அல்லாஹ் இவர்களை நோக்கி), "நாம் உங்களை முதல் முறையாகப் படைத்தோமே அதுபோன்று நீங்கள் (எதுவுமில்லாமல்) தனியே எம்மிடம் வந்துவிட்டீர்கள்; இன்னும்; நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டு விட்டீர்கள்; எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, உங்களுக்குப் பரிந்து பேசுவார்கள் (என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ) அவர்களை நாம் உங்களுடனிருப்பதைக் காணவில்லை, உங்களுக்கிடையே இருந்த தொடர்பும் அறுந்து விட்டது, உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன" (என்று கூறுவான்).
இந்த வேதத்தை - அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்குமுன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம்; (இதைக்கொண்டு) நீர் (நகரங்களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களையும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்.) எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள்.
அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, "எனக்கு வஹீ வந்தது" என்று கூறுபவன்; அல்லது "அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்" என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) "உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்" (என்று கூறுவதை நீர் காண்பீர்).
அன்றியும் (மறுமையில் அல்லாஹ் இவர்களை நோக்கி), "நாம் உங்களை முதல் முறையாகப் படைத்தோமே அதுபோன்று நீங்கள் (எதுவுமில்லாமல்) தனியே எம்மிடம் வந்துவிட்டீர்கள்; இன்னும்; நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டு விட்டீர்கள்; எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, உங்களுக்குப் பரிந்து பேசுவார்கள் (என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ) அவர்களை நாம் உங்களுடனிருப்பதைக் காணவில்லை, உங்களுக்கிடையே இருந்த தொடர்பும் அறுந்து விட்டது, உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன" (என்று கூறுவான்).
நிச்சயமாக அல்லாஹ்தான், வித்துகளையும், கொட்டைகளையும் வெடி(த்து முளை)க்கச் செய்கிறான் இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளிப்படுத்துகிறான்; அவனே உங்கள் அல்லாஹ் - எப்படி நீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்?
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.