Wa man azlamu mimmanif taraa `alal laahi kaziban aw qaala oohiya ilaiya wa lam yooha ilaihi shai`un wa man qaala sa unzilu misla maaa anzalal laah; wa law taraaa iziz zaalimoona fee ghamaraatil mawti walmalaaa`ikatu baasitooo aideehim akhrijooo anfusakum; al yawma tujzawna `azaabal hooni bimaa kuntum taqooloona `alal laahi ghairal haqqi wa kuntum `an aayaatihee tastakbiroon
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, "எனக்கு வஹீ வந்தது" என்று கூறுபவன்; அல்லது "அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்" என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) "உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்" (என்று கூறுவதை நீர் காண்பீர்).
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
അല്ലാഹുവിന്റെ പേരില് കള്ളം കെട്ടിച്ചമയ്ക്കുകയോ, തനിക്ക് യാതൊരു ബോധനവും നല്കപ്പെടാതെ എനിക്ക് ബോധനം ലഭിച്ചിരിക്കുന്നു എന്ന് പറയുകയോ ചെയ്തവനേക്കാളും, അല്ലാഹു അവതരിപ്പിച്ചത് പോലെയുള്ളത് ഞാനും അവതരിപ്പിക്കാമെന്ന് പറഞ്ഞവനെക്കാളും വലിയ അക്രമി ആരുണ്ട് ? ആ അക്രമികള് മരണവെപ്രാളത്തിലായിരിക്കുന്ന രംഗം നീ കണ്ടിരുന്നുവെങ്കില്! നിങ്ങള് നിങ്ങളുടെ ആത്മാക്കളെ പുറത്തിറക്കുവിന് എന്ന് പറഞ്ഞ് കൊണ്ട് മലക്കുകള് അവരുടെ നേരെ തങ്ങളുടെ കൈകള് നീട്ടികൊണ്ടിരിക്കുകയാണ്. നിങ്ങള് അല്ലാഹുവിന്റെ പേരില് സത്യമല്ലാത്തത് പറഞ്ഞുകൊണ്ടിരുന്നതിന്റെയും, അവന്റെ ദൃഷ്ടാന്തങ്ങളെ നിങ്ങള് അഹങ്കരിച്ച് തള്ളിക്കളഞ്ഞിരുന്നതിന്റെയും ഫലമായി ഇന്ന് നിങ്ങള്ക്ക് ഹീനമായ ശിക്ഷ നല്കപ്പെടുന്നതാണ്. (എന്ന് മലക്കുകള് പറയും.)
غَمَرَاتِ الْمَوْتِ – இறப்பின் கடுமையான வேதனைகள், மரணத்தின் சிக்கல்கள்.
بَاسِطُو أَيْدِيهِمْ – (வானவர்கள்) தங்கள் கைகளை நீட்டியவர்களாக (ஆத்மாவைப் பிடிக்க).
الْهُونِ – இழிவு, அவமானம், கேவலம்.
تَسْتَكْبِرُونَ – பெருமை கொள்கிறீர்கள், ஆணவம் செலுத்துகிறீர்கள்.
விளக்கம்:
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனை விட, அல்லது அவனிடம் எதுவும் வஹ்யு (இறைச் செய்தி) வரவில்லை என்ற நிலையில் "எனக்கு வஹ்யு வந்தது" என்று பொய்யாகக் கூறுபவனை விட, அல்லது "அல்லாஹ் இறக்கிய (வேதத்)தைப் போன்றதை நானும் இறக்குவேன்" என்று சொல்பவனை விட அதிக அநியாயக்காரன் யார்? இவர்களை விட அக்கிரமக்காரர் எவரும் இல்லை.
(நபியே!) இந்த அக்கிரமக்காரர்கள் மரணத்தின் கடுமையான வேதனைகளில் சிக்கித் தவிக்கும் நிலையில், வானவர்கள் தங்கள் கைகளை நீட்டி, "உங்கள் ஆத்மாக்களை வெளியே கொண்டு வாருங்கள்" என்று கடுமையாகக் கூறும்போது, "இன்று நீங்கள் இழிவான வேதனையால் தண்டிக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் மீது உண்மையல்லாததைக் கூறிக்கொண்டிருந்தீர்கள்; அவனுடைய வசனங்களைப் புறக்கணித்து பெருமை கொண்டிருந்தீர்கள்" என்று கூறப்படும் நிலையை நீங்கள் கண்டிருந்தால், மிகப்பெரிய பயங்கரமான காட்சியைத்தான் கண்டிருப்பீர்கள்.
இந்த வசனம் முசைலமா அல்-கஸ்ஸாப் போன்ற பொய்யான நபித்துவத்தைக் கூறியவர்கள், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவர்கள், வேதத்தை இகழ்ந்து அதைப் போன்றதை நாம் கொண்டு வர முடியும் என்று சவால் விட்டவர்கள் ஆகியோரைக் குறித்து இறங்கியது. இவர்கள் அனைவரும் மிகப்பெரிய அக்கிரமக்காரர்கள் ஆவர்.
பயன்பாடுகள் (சிந்தனைகள்):
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுவது, அவனுக்கு இணை கற்பிப்பது, நபித்துவத்தைப் பொய்யாகக் கூறுவது போன்றவை மிகப்பெரிய அக்கிரமங்களாகும். இது மன்னிக்கப்பட முடியாத பாவமாகும்.
மரணத்தின் போது ஏற்படும் வேதனைகள் மிகக் கடுமையானவை. எனவே, ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் நல்ல செயல்களைச் செய்து, அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ வேண்டும்.
அல்லாஹ்வின் வசனங்களைப் புறக்கணித்து, அவற்றை ஏற்க மறுப்பது, பெருமை கொள்வது ஆகியவை நரக வேதனைக்குக் காரணமாகின்றன. எனவே, அடக்கமாக இருந்து அல்லாஹ்வின் வழிகாட்டலை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த வசனம் முஸ்லிம்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும்: அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுவதிலிருந்தும், அவனுடைய வேதத்தை இகழ்வதிலிருந்தும் விலகி இருக்க வேண்டும்.
அல்லாஹ்வின் வேதமாகிய குர்ஆன் மிக உயர்ந்ததும், அதைப் போன்று எவராலும் கொண்டு வர முடியாததுமாகும். இது அதன் அற்புதத் தன்மையை நிரூபிக்கிறது.
அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, "எனக்கு வஹீ வந்தது" என்று கூறுபவன்; அல்லது "அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்" என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) "உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்" (என்று கூறுவதை நீர் காண்பீர்).
இவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதிக்கவில்லை ஏனெனில் அவர்கள், "அல்லாஹ் எந்த ஒரு மனிதர் மீதும் எ(ந்த வேதத்)தையும் இறக்கவில்லை" என்று கூறுகின்றனர்; அவர்களிடத்தில் நீர் கூறும்; "பிரகாசமானதாகவும், மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் மூஸா கொண்டுவந்தாரே அந்த வேத்தை இறக்கியவன் யார்? அதனை நீங்கள் தனித்தனி ஏடுகளாக ஆக்கி, அவற்றில் சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள்; பெரும்பாலானவற்றை மறைத்தும் விடுகிறீர்கள்; (அவ்வேதத்தின் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதையர்களும் அறியாமல் இருந்தவைகளையெல்லாம் கற்றுக்கொடுக்கப்பட்டீர்கள்." (நபியே! மேலும்) நீர் கூறுவீராக "அல்லாஹ்தான் (அதை இறக்கிவைத்தான்)" பின்பு அவர்களைத் தம் வீணான (தர்க்கத்)தில் விளையாடிக்கொண்டிருக்குமாறு விட்டுவிடுவீராக.
இந்த வேதத்தை - அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்குமுன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம்; (இதைக்கொண்டு) நீர் (நகரங்களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களையும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்.) எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள்.
அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, "எனக்கு வஹீ வந்தது" என்று கூறுபவன்; அல்லது "அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்" என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) "உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்" (என்று கூறுவதை நீர் காண்பீர்).
அன்றியும் (மறுமையில் அல்லாஹ் இவர்களை நோக்கி), "நாம் உங்களை முதல் முறையாகப் படைத்தோமே அதுபோன்று நீங்கள் (எதுவுமில்லாமல்) தனியே எம்மிடம் வந்துவிட்டீர்கள்; இன்னும்; நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டு விட்டீர்கள்; எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, உங்களுக்குப் பரிந்து பேசுவார்கள் (என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ) அவர்களை நாம் உங்களுடனிருப்பதைக் காணவில்லை, உங்களுக்கிடையே இருந்த தொடர்பும் அறுந்து விட்டது, உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன" (என்று கூறுவான்).
நிச்சயமாக அல்லாஹ்தான், வித்துகளையும், கொட்டைகளையும் வெடி(த்து முளை)க்கச் செய்கிறான் இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளிப்படுத்துகிறான்; அவனே உங்கள் அல்லாஹ் - எப்படி நீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்?
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.