அல்-கஹ்ஃப் · 31/110
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-கஹ்ஃப்
أُولَٰئِكَ لَهُمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِن تَحْتِهِمُ الْأَنْهَارُ يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِن ذَهَبٍ وَيَلْبَسُونَ ثِيَابًا خُضْرًا مِّن سُندُسٍ وَإِسْتَبْرَقٍ مُّتَّكِئِينَ فِيهَا عَلَى الْأَرَائِكِ ۚ نِعْمَ الثَّوَابُ وَحَسُنَتْ مُرْتَفَقًا ۝٣١
Ulaaa`ika lahum Jannaatu `Adnin tajree min tahtihimul anhaaru yuhallawna feehaa min asaawira min zahabinw wa yalbasoona siyaaban khudram min sundusinw wa istabraqim muttaki`eena feehaa `alal araaa`ik; ni`mas sawaab; wa hasunat murtafaqaa
📖 தமிழில்
அ(த்தகைய)வர்களுக்கு என்றென்றும் தங்கியிருக்கக் கூடிய சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கு பொன்னாலாகிய கடகங்கள் அணிவிக்கப்படும், ஸுன்துஸு, இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகளை அவர்கள் அணிந்திருப்பார்கள்; அங்குள்ள உயர்ந்த ஆசனங்களின் மீது சாய்(ந்து மகிழ்)ந்து இருப்பார்கள் - (அவர்களுடைய) நற் கூலி மிகவும் பாக்கியமிக்கதாயிற்று (அவர்கள்) இளைப்பாறுமிடமும் மிக அழகியதாற்று.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00
📜

மொழிபெயர்ப்பு — Tafsir

சொற்பொருள் விளக்கம்:

  • جَنَّاتُ عَدْنٍ – நிரந்தரமான தோட்டங்கள்; 'அத்ன்' என்றால் நிலையாகத் தங்குதல்.
  • أَسَاوِرَ – கைகளில் அணியப்படும் வளையல்கள் (தங்க வளையல்கள்).
  • سُندُس – மெல்லிய பட்டு.
  • إستبرق – தடித்த பட்டு.
  • الأَرَائِك – அழகிய திரைச்சீலைகளால் அலங்கரிக்கப்பட்ட மஞ்சங்கள் (கட்டில்கள்).
  • مُرْتَفَقًا – தங்குமிடம், ஓய்விடம்.

விளக்கம்:

இறைநம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவர்களுக்காகத்தான் இந்த வாக்குறுதி. அவர்களுக்கு ‘அத்ன்’ எனப்படும் நிரந்தர சொர்க்கத் தோட்டங்கள் உண்டு. அந்தத் தோட்டங்களின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் அங்கு தங்க வளையல்களால் அலங்கரிக்கப்படுவார்கள். பச்சை நிற ஆடைகளை அணிவார்கள் – அவை மெல்லிய பட்டு மற்றும் தடித்த பட்டு ஆகியவற்றால் செய்யப்பட்டவை. அங்கு அவர்கள் அழகிய திரைச்சீலைகளால் அலங்கரிக்கப்பட்ட மஞ்சங்களில் சாய்ந்தபடி இருப்பார்கள். இது எத்தனை அழகான பரிசு! அவர்களின் கூலி எவ்வளவு சிறந்தது! அந்த சொர்க்கம் தங்குமிடமாகவும், ஓய்விடமாகவும் எவ்வளவு அழகாக இருக்கிறது!


பயன்கள்:

  1. இறைநம்பிக்கையும் நல்லறங்களும் சேர்ந்தால் தான் சொர்க்கம் கிடைக்கும் – நம்பிக்கை மட்டும் போதாது, செயலும் வேண்டும் என்பதை இது காட்டுகிறது.
  2. சொர்க்கத்தின் இன்பங்கள் நிலையானவை; உலக இன்பங்கள் நிலையற்றவை. எனவே நிலையான இன்பத்திற்காக முயற்சி செய்ய வேண்டும்.
  3. சொர்க்கத்தில் உள்ள ஆடைகள், அணிகலன்கள், வசதிகள் அனைத்தும் மனிதனின் கற்பனைக்கும் அப்பாற்பட்டவை – இது இறைவனின் கருணையின் மகத்துவத்தை உணர்த்துகிறது.
  4. இறைவன் தன் நல்லடியார்களுக்கு கொடுக்கும் பரிசு எவ்வளவு சிறந்தது என்பதை உணர்ந்து, அதை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
  5. இந்த வசனம் முஸ்லிம்களுக்கு நம்பிக்கையூட்டுகிறது – உலகில் எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும், இறுதி வெற்றி இறைநம்பிக்கையாளர்களுக்கே என்பதை உறுதிப்படுத்துகிறது.


📜 வசனம் 29-33 — சூரா அல்-கஹ்ஃப்

29وَقُلِ الْحَقُّ مِن رَّبِّكُمْ ۖ فَمَن شَاءَ فَلْيُؤْمِن وَمَن شَاءَ فَلْيَكْفُرْ ۚ إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا أَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا ۚ وَإِن يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ ۚ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا
(நபியே!) இன்னும் நீர் கூறுவீராக "இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது" ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். இனனும் விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.
30إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ إِنَّا لَا نُضِيعُ أَجْرَ مَنْ أَحْسَنَ عَمَلًا
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற் கருமங்களையும் செய்கிறார்களோ, அத்தகைய அழகிய செயல் செய்வோரின் (நற்) கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.
31أُولَٰئِكَ لَهُمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِن تَحْتِهِمُ الْأَنْهَارُ يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِن ذَهَبٍ وَيَلْبَسُونَ ثِيَابًا خُضْرًا مِّن سُندُسٍ وَإِسْتَبْرَقٍ مُّتَّكِئِينَ فِيهَا عَلَى الْأَرَائِكِ ۚ نِعْمَ الثَّوَابُ وَحَسُنَتْ مُرْتَفَقًا
அ(த்தகைய)வர்களுக்கு என்றென்றும் தங்கியிருக்கக் கூடிய சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கு பொன்னாலாகிய கடகங்கள் அணிவிக்கப்படும், ஸுன்துஸு, இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகளை அவர்கள் அணிந்திருப்பார்கள்; அங்குள்ள உயர்ந்த ஆசனங்களின் மீது சாய்(ந்து மகிழ்)ந்து இருப்பார்கள் - (அவர்களுடைய) நற் கூலி மிகவும் பாக்கியமிக்கதாயிற்று (அவர்கள்) இளைப்பாறுமிடமும் மிக அழகியதாற்று.
32۞ وَاضْرِبْ لَهُم مَّثَلًا رَّجُلَيْنِ جَعَلْنَا لِأَحَدِهِمَا جَنَّتَيْنِ مِنْ أَعْنَابٍ وَحَفَفْنَاهُمَا بِنَخْلٍ وَجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًا
(நபியே!) இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகவும் கூறுவீராக! அவ்விருவரில் ஒருவருக்கு நாம் திராட்சைத் தோட்டங்களில் இரண்டைக் கொடுத்தோம்; இன்னும் பேரீத்த மரங்களைக் கொண்டு அவ்விரண்டையும் சூழப்பட்டவை ஆக்கினோம், அவ்விரண்டிற்கும் இடையில் (தானிய) விவசாயத்தையும் அமைத்தோம்.
33كِلْتَا الْجَنَّتَيْنِ آتَتْ أُكُلَهَا وَلَمْ تَظْلِم مِّنْهُ شَيْئًا ۚ وَفَجَّرْنَا خِلَالَهُمَا نَهَرًا
அவ்விரு தோட்டங்களும் அவற்றின் பலன்களை - எப்பொருளையும் குறையாது கொடுத்துக் கொண்டிருந்தன. அவ்விரண்டிற்கும் நடுவே நாம் ஓர் ஆற்றையும் ஒலித்தோடச் செய்தோம்.
அல்-கஹ்ஃப்குர்ஆன் பட்டியல்
110வசனம்
MeccanRevelation
31வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-கஹ்ஃப் 31

சூரா அல்-கஹ்ஃப் வசனம் 31 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : அ(த்தகைய)வர்களுக்கு என்றென்றும் தங்கியிருக்கக் கூடிய சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்…

சூரா வசனம் 31/110 — சூரா அல்-கஹ்ஃப் الكهف (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-கஹ்ஃப் கேள், சூரா அல்-கஹ்ஃப் மொழிபெயர்ப்பு, சூரா அல்-கஹ்ஃப் mp3, சூரா அல்-கஹ்ஃப் pdf. வசனம் 29–33. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Tuesday, September 29, 2026

Don't forget us in your sincere prayers