அல்-மாயிதா · 43/120
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-மாயிதா
وَكَيْفَ يُحَكِّمُونَكَ وَعِندَهُمُ التَّوْرَاةُ فِيهَا حُكْمُ اللَّهِ ثُمَّ يَتَوَلَّوْنَ مِن بَعْدِ ذَٰلِكَ ۚ وَمَا أُولَٰئِكَ بِالْمُؤْمِنِينَ ۝٤٣
Wa kaifa yuhakkimoonaka wa `indahumut Tawraatu feehaa hukmul laahi summa yatawallawna mim ba`di zaalik; wa maaa ulaaa`ika bilmu`mineen
📖 தமிழில்
எனினும், இவர்கள் உம்மை தீர்ப்பு அளிப்பவராக எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இவர்களிடத்திலோ தவ்ராத் (வேத) முள்ளது. அதில் அல்லாஹ்வின் கட்டளையும் உள்ளது. எனினும் அதைப் பின்னர் புறக்கணித்து விடுகிறார்கள்;. இவர்கள் முஃமின்களே அல்லர்.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00
📜

மொழிபெயர்ப்பு — Tafsir

சொற்பொருள்:

  • يُحَكِّمُونَكَ – உங்களை நடுவராக/தீர்ப்பாளராக ஆக்குகிறார்கள்.
  • يَتَوَلَّوْنَ – புறக்கணித்து விடுகிறார்கள், விலகிச் செல்கிறார்கள்.
  • بِالْمُؤْمِنِينَ – உண்மையான இறைநம்பிக்கையாளர்கள்.

விளக்கம்:

இந்த இறைவசனத்தில், யூதர்களின் நிலை எவ்வளவு ஆச்சரியமானது என்பதை அல்லாஹ் சுட்டிக்காட்டுகிறான். அவர்கள் உங்களை (நபியே!) தங்களுக்கிடையே தீர்ப்பளிக்க நடுவராக அழைக்கிறார்கள். ஆனால் அவர்கள் உங்கள் மீதும், உங்கள் மீது இறக்கப்பட்ட வேதத்தின் மீதும் உண்மையான நம்பிக்கை கொள்ளவில்லை. அவர்களிடம் தவ்ராத் (தோரா) வேதம் இருக்கிறது; அதில் அல்லாஹ்வின் சட்டம் – குறிப்பாக விபச்சாரத் தண்டனை (ரஜ்ம் – கல்லெறிதல்) – தெளிவாக உள்ளது. அவர்கள் அந்த வேதத்தை உண்மையாக நம்புவதாகக் கூறிக்கொண்டாலும், அதில் உள்ள சட்டத்தைப் பின்பற்றாமல், தங்கள் சுய இச்சைகளுக்கு ஏற்ப தீர்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உங்களிடம் வருகிறார்கள். பின்னர், உங்கள் தீர்ப்பு அவர்களின் விருப்பத்திற்கு மாறாக இருந்தால், அதை ஏற்க மறுத்து புறக்கணித்து விடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் தங்கள் வேதத்தில் உள்ள அல்லாஹ்வின் சட்டத்தை நிராகரித்ததுடன், உங்கள் நியாயமான தீர்ப்பையும் புறக்கணிக்கிறார்கள். இத்தகைய செயல்கள் உண்மையான இறைநம்பிக்கையாளர்களின் பண்புகள் அல்ல. எனவே, இவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவர் வழங்கும் நியாயமான தீர்ப்பின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லர்.

பயன்கள்:

  1. உண்மையான இறைநம்பிக்கை என்பது வெறும் வாய்ச்சொல் அல்ல; அது அல்லாஹ்வின் வேதத்தையும், அவனுடைய தூதரின் தீர்ப்பையும் முழுமனதுடன் ஏற்று, அதற்கு கட்டுப்படுவதில் தான் வெளிப்படுகிறது.
  2. ஒருவர் தனது சுய இச்சைகளுக்கு ஏற்ப மார்க்க சட்டங்களைத் தேர்ந்தெடுத்துப் பின்பற்றுவது நயவஞ்சகத்தின் அறிகுறியாகும்; உண்மையான நம்பிக்கையாளர் அல்லாஹ்வின் சட்டத்தை முழுமையாக ஏற்று நடப்பார்.
  3. அல்லாஹ்வின் வேதத்தில் உள்ள சட்டங்கள் இருந்தும், அவற்றை விட்டுவிட்டு மனிதர்களிடம் தீர்ப்பு கேட்பதும், பின்னர் அந்தத் தீர்ப்பு தனக்கு சாதகமாக இல்லாத போது அதை நிராகரிப்பதும் பெரும் பாவமாகும்.
  4. நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பு எப்போதும் நியாயமானதாகவும், அல்லாஹ்வின் சட்டத்தின் அடிப்படையிலானதாகவும் இருக்கும்; அதை ஏற்று நடப்பதே வெற்றிக்கு வழி.


📜 வசனம் 41-45 — சூரா அல்-மாயிதா

41۞ يَا أَيُّهَا الرَّسُولُ لَا يَحْزُنكَ الَّذِينَ يُسَارِعُونَ فِي الْكُفْرِ مِنَ الَّذِينَ قَالُوا آمَنَّا بِأَفْوَاهِهِمْ وَلَمْ تُؤْمِن قُلُوبُهُمْ ۛ وَمِنَ الَّذِينَ هَادُوا ۛ سَمَّاعُونَ لِلْكَذِبِ سَمَّاعُونَ لِقَوْمٍ آخَرِينَ لَمْ يَأْتُوكَ ۖ يُحَرِّفُونَ الْكَلِمَ مِن بَعْدِ مَوَاضِعِهِ ۖ يَقُولُونَ إِنْ أُوتِيتُمْ هَٰذَا فَخُذُوهُ وَإِن لَّمْ تُؤْتَوْهُ فَاحْذَرُوا ۚ وَمَن يُرِدِ اللَّهُ فِتْنَتَهُ فَلَن تَمْلِكَ لَهُ مِنَ اللَّهِ شَيْئًا ۚ أُولَٰئِكَ الَّذِينَ لَمْ يُرِدِ اللَّهُ أَن يُطَهِّرَ قُلُوبَهُمْ ۚ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ ۖ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ
தூதரே! எவர்கள் தங்கள் வாய்களினால் 'நம்பிக்கை கொண்டோம்' என்று கூறி அவர்களுடைய இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றனர். உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றனர். மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி 'இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்;. அவை உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறுகிறார்கள்;. மேலும் அல்லாஹ் எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர். இத்தகையோருடைய இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு.
42سَمَّاعُونَ لِلْكَذِبِ أَكَّالُونَ لِلسُّحْتِ ۚ فَإِن جَاءُوكَ فَاحْكُم بَيْنَهُمْ أَوْ أَعْرِضْ عَنْهُمْ ۖ وَإِن تُعْرِضْ عَنْهُمْ فَلَن يَضُرُّوكَ شَيْئًا ۖ وَإِنْ حَكَمْتَ فَاحْكُم بَيْنَهُم بِالْقِسْطِ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ
அன்றியும், இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்போராகவும், விலக்கப் பட்ட பொருட்களையே விழுங்குவோராகவும் இருக்கின்றனர். (நபியே!) இவர்கள் உம்மிடம் வந்தால், இவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கும்;. அல்லது இவர்களைப் புறக்கணித்து விடும். அப்படி இவர்களை நீர் புறக்கணித்து விடுவீராயினும், இவர்கள் உமக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. ஆனால், நீர் (இவர்களிடையே) தீர்ப்பளிப்பீராயின் நியாயமாகவே அவர்களிடையில் தீர்ப்பளிப்பீராக. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கின்றான்.
43وَكَيْفَ يُحَكِّمُونَكَ وَعِندَهُمُ التَّوْرَاةُ فِيهَا حُكْمُ اللَّهِ ثُمَّ يَتَوَلَّوْنَ مِن بَعْدِ ذَٰلِكَ ۚ وَمَا أُولَٰئِكَ بِالْمُؤْمِنِينَ
எனினும், இவர்கள் உம்மை தீர்ப்பு அளிப்பவராக எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இவர்களிடத்திலோ தவ்ராத் (வேத) முள்ளது. அதில் அல்லாஹ்வின் கட்டளையும் உள்ளது. எனினும் அதைப் பின்னர் புறக்கணித்து விடுகிறார்கள்;. இவர்கள் முஃமின்களே அல்லர்.
44إِنَّا أَنزَلْنَا التَّوْرَاةَ فِيهَا هُدًى وَنُورٌ ۚ يَحْكُمُ بِهَا النَّبِيُّونَ الَّذِينَ أَسْلَمُوا لِلَّذِينَ هَادُوا وَالرَّبَّانِيُّونَ وَالْأَحْبَارُ بِمَا اسْتُحْفِظُوا مِن كِتَابِ اللَّهِ وَكَانُوا عَلَيْهِ شُهَدَاءَ ۚ فَلَا تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ وَلَا تَشْتَرُوا بِآيَاتِي ثَمَنًا قَلِيلًا ۚ وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ
நிச்சயமாக நாம்தாம் 'தவ்ராத்'தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்;. இறை பக்தி நிறைந்த மேதை(ரப்பானிய்யூன்)களும், அறிஞர்(அஹ்பார்)களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்;. முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்;. எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம்.
45وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنفَ بِالْأَنفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ ۚ فَمَن تَصَدَّقَ بِهِ فَهُوَ كَفَّارَةٌ لَّهُ ۚ وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ
அவர்களுக்கு நாம் அதில், "உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;" எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்;. எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே!
அல்-மாயிதாகுர்ஆன் பட்டியல்
120வசனம்
MedinanRevelation
43வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-மாயிதா 43

சூரா அல்-மாயிதா வசனம் 43 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : எனினும், இவர்கள் உம்மை தீர்ப்பு அளிப்பவராக எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இவர்களிடத்திலோ தவ்ராத்…

சூரா வசனம் 43/120 — சூரா அல்-மாயிதா المائدة (Medinan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-மாயிதா கேள், சூரா அல்-மாயிதா மொழிபெயர்ப்பு, சூரா அல்-மாயிதா mp3, சூரா அல்-மாயிதா pdf. வசனம் 41–45. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers