சூரா அல்-அலக் pdf — பதிவிறக்கம் (தமிழ்)
சூரா அல்-அலக் pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அல்-அலக் மொழிபெயர்ப்பு. சூரா அல்-அலக் (Meccan) 19 வசனம்.
Related
More சூரா PDF
சூரா அல்-அலக்

ﮕﮖﮗﮘﮙﮚ
96:1
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
ﮛﮜﮝﮞﮟ
96:2
'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
ﮠﮡﮢﮣ
96:3
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
ﮤﮥﮦﮧ
96:4
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
ﮨﮩﮪﮫﮬﮭ
96:5
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
ﮮﮯﮰﮱﯓ
96:6
எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
ﯔﯕﯖﯗ
96:7
அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
ﯘﯙﯚﯛﯜ
96:8
நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
ﯝﯞﯟﯠ
96:9
தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?
ﯡﯢﯣﯤ
96:10
ஓர் அடியாரை - அவர் தொழும்போது,
ﯥﯦﯧﯨﯩﯪ
96:11
நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
ﯫﯬﯭﯮ
96:12
அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
ﭑﭒﭓﭔﭕ
96:13
அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,
ﭖﭗﭘﭙﭚﭛ
96:14
நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
ﭜﭝﭞﭟﭠﭡﭢ
96:15
அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
ﭣﭤﭥﭦ
96:16
தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
ﭧﭨﭩ
96:17
ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
ﭪﭫﭬ
96:18
நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
ﭭﭮﭯﭰﭱﭲﭳ
96:19
(அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.
திருக்குர்ஆன்
Wednesday, September 9, 2026
Don't forget us in your sincere prayers







