Fataqabbalahaa Rabbuhaa biqaboolin hasaninw wa ambatahaa nabaatan hasananw wa kaffalahaa Zakariyyaa kullamaa dakhala `alaihaa Zakariyyal Mihraaba wajada `indahaa rizqan qaala yaa Maryamu annaa laki haazaa qaalat huwa min `indil laahi innal laaha yarzuqu mai yashaaa`u bighairi hisaab
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்;. அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்;. அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், "மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?" என்று அவர் கேட்டார்; "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்" என்று அவள்(பதில்) கூறினாள்.
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
അങ്ങനെ അവളുടെ (മര്യമിന്റെ) രക്ഷിതാവ് അവളെ നല്ല നിലയില് സ്വീകരിക്കുകയും, നല്ല നിലയില് വളര്ത്തിക്കൊണ്ടു വരികയും, അവളുടെ സംരക്ഷണച്ചുമതല അവന് സകരിയ്യായെ ഏല്പിക്കുകയും ചെയ്തു. മിഹ്റാബില് (പ്രാര്ത്ഥനാവേദിയില്) അവളുടെ അടുക്കല് സകരിയ്യാ കടന്നു ചെല്ലുമ്പോഴെല്ലാം അവളുടെ അടുത്ത് എന്തെങ്കിലും ആഹാരം കണ്ടെത്തുമായിരുന്നു. അദ്ദേഹം ചോദിച്ചു: മര്യമേ, നിനക്ക് എവിടെ നിന്നാണിത് കിട്ടിയത്? അവള് മറുപടി പറഞ്ഞു. അത് അല്ലാഹുവിങ്കല് നിന്ന് ലഭിക്കുന്നതാകുന്നു. തീര്ച്ചയായും അല്ലാഹു താന് ഉദ്ദേശിക്കുന്നവര്ക്ക് കണക്ക് നോക്കാതെ നല്കുന്നു.
بِقَبُولٍ حَسَنٍ: அழகிய முறையில், முழுமையான அங்கீகாரத்துடன்.
وَأَنبَتَهَا نَبَاتًا حَسَنًا: அவளை அழகிய வளர்ச்சியுடன் வளர்த்தான்.
وَكَفَّلَهَا زَكَرِيَّا: ஸகரிய்யா (அலை) அவளைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றார்.
الْمِحْرَابَ: வணக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட இடம் (தொழுகை அறை).
أَنَّى لَكِ: இது உனக்கு எங்கிருந்து வந்தது?
بِغَيْرِ حِسَابٍ: கணக்கின்றி, அளவின்றி.
விளக்கம்:
அல்லாஹ் மர்யம் (அலை) அவர்களின் தாயின் பிரார்த்தனையை ஏற்று, அவள் செய்த நேர்ச்சையை (நன்றி) அழகிய முறையில் ஏற்றுக்கொண்டான். மர்யம் (அலை) அவர்களைப் பரிசுத்தமான, நல்ல வளர்ச்சியுடன் வளர்க்கும் பொறுப்பை ஏற்றான். அவர்களுக்காக நல்லோர்களின் இதயங்களை இணக்கப்படுத்தினான். பின்னர், ஸகரிய்யா (அலை) அவர்களை அவளது பராமரிப்பாளராக நியமித்தான். ஸகரிய்யா (அலை) அவர்கள் அவளது வணக்க இடத்திற்குள் நுழையும் போதெல்லாம், அவளிடம் நல்ல உணவும், கோடையில் குளிர்காலப் பழங்களும், குளிர்காலத்தில் கோடைகாலப் பழங்களும் இருப்பதைக் கண்டார்கள். ஆச்சரியத்துடன், "மர்யமே! கதவுகள் அனைத்தும் மூடப்பட்டிருக்க, இந்த உணவு உனக்கு எங்கிருந்து வந்தது?" என்று கேட்டார்கள். அதற்கு அவள், "இது அல்லாஹ்விடமிருந்து வந்தது. நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு கணக்கின்றி உணவளிக்கிறான்" என்று பதிலளித்தாள்.
பயன்கள்:
அல்லாஹ்விடம் நேர்மையான மனதுடன் செய்யப்படும் பிரார்த்தனையும், நேர்ச்சையும் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கு அழகிய பலன் வழங்கப்படுகிறது.
நல்ல செயலுக்காக அல்லாஹ் நல்லவர்களின் உதவியை ஏற்படுத்தித் தருகிறான். மர்யம் (அலை) அவர்களுக்கு ஸகரிய்யா (அலை) போன்ற நல்லவரை பராமரிப்பாளராக நியமித்தது இதற்குச் சான்று.
அல்லாஹ்வின் வழங்கல் கணக்கிட முடியாதது. அவன் நாடினால், எதிர்பாராத வழிகளில், எதிர்பாராத நேரங்களில் தன் அடியார்களுக்கு உணவளிக்கிறான்.
மர்யம் (அலை) அவர்களின் பதில் நமக்கு கற்றுத்தரும் பாடம்: அல்லாஹ்வின் அருளைப் பற்றி முழு நம்பிக்கையுடன் இருப்பது, அவனிடம் மட்டுமே எதிர்பார்ப்பை வைப்பது.
அல்லாஹ்வின் அருளைக் கண்டு ஆச்சரியப்படுவதும், அதை அங்கீகரிப்பதும் நம்பிக்கையாளர்களின் பண்பாகும்.
அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்;. அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்;. அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், "மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?" என்று அவர் கேட்டார்; "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்" என்று அவள்(பதில்) கூறினாள்.
இம்ரானின் மனைவி; "என் இரைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்;. எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்" என்று கூறியதையும்.
(பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்; "என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கின்றேன்" எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்;. அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்;. ஆண், பெண்ணைப் போலல்ல. (மேலும் அந்தத்தாய் சொன்னாள்;) "அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்;. இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.
அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்;. அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்;. அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், "மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?" என்று அவர் கேட்டார்; "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்" என்று அவள்(பதில்) கூறினாள்.
அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார்; "இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்."
அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து "நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்;. அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்" எனக் கூறினர்.
சூரா ஆல்-இம்ரான் வசனம் 37 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்;. அக்குழந்தையை அழகாக…
சூரா வசனம் 37/200 — சூரா ஆல்-இம்ரான் آل عمران (Medinan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா ஆல்-இம்ரான் கேள், சூரா ஆல்-இம்ரான் மொழிபெயர்ப்பு, சூரா ஆல்-இம்ரான் mp3, சூரா ஆல்-இம்ரான் pdf. வசனம் 35–39. தமிழில்: മലയാളം.
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.