அல்-மாயிதா · 11/120
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-மாயிதா
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ هَمَّ قَوْمٌ أَن يَبْسُطُوا إِلَيْكُمْ أَيْدِيَهُمْ فَكَفَّ أَيْدِيَهُمْ عَنكُمْ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ ۝١١
Yaa aiyuhal lazeena aamanuz kuroo ni`matallaahi `alaikum iz hamma qawmun ai yabsutooo ilaikum aidiyahm fakaffa aidiyahum `ankum wattaqullaah; wa`alal laahi fal yatawakalil mu`minoon
📖 தமிழில்
முஃமின்களே! ஒரு கூட்டத்தார் தம் கைகளை உங்களிடம் நீட்(டி உங்களைக் கொன்று வி)டத் தீர்மானித்த போது, உங்களை விட்டு அவர்கள் கைகளை தடுத்து அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருளை நினைவு கூறுங்கள் - ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்;. இன்னும் அல்லாஹ்வின் மீதே முஃமின்கள் (முழுமையாக) நம்பிக்கை வைக்கட்டும்.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00
📜

மொழிபெயர்ப்பு — Tafsir

சொற்பொருள் விளக்கம்:

  • هَمَّ قَوْمٌ: ஒரு கூட்டத்தார் (உங்களைத் தாக்க) உறுதி செய்தனர் / எண்ணினர்.
  • يَبْسُطُوا أَيْدِيَهُمْ: தங்கள் கைகளை உங்களை நோக்கி நீட்டி (உங்களைக் கொல்ல அல்லது தாக்க) முயற்சிப்பது.
  • فَكَفَّ: தடுத்தார் / தடுத்து நிறுத்தினார்.
  • وَاتَّقُوا اللّهَ: அல்லாஹ்வை அஞ்சுங்கள் (அவனது கட்டளைகளைப் பின்பற்றி, தடைகளை விட்டு விலகுங்கள்).
  • فَلْيَتَوَكَّلِ: முழுமையாக நம்பிக்கை வைக்கட்டும் / சார்ந்திருக்கட்டும்.

விளக்கம்:

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை நினைவு கூருங்கள். குறிப்பாக, ஒரு கூட்டத்தார் உங்களைத் தாக்குவதற்காகத் தங்கள் கைகளை உங்களை நோக்கி நீட்ட எண்ணியபோது, அல்லாஹ் அவர்களின் கைகளை உங்களை விட்டுத் தடுத்து, உங்களுக்குப் பாதுகாப்பளித்தான். அவர்களின் இதயங்களில் பயத்தைப் போட்டு, அவர்களின் சதித்திட்டத்தை முறியடித்தான். இது அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடையாகும். எனவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்; அவனது கட்டளைகளை நிறைவேற்றி, அவனது தடைகளை விட்டு விலகுங்கள். மேலும், நம்பிக்கையாளர்கள் தங்கள் மார்க்க மற்றும் உலக விவகாரங்களில் அல்லாஹ்வை மட்டுமே முழுமையாக நம்பி, அவனிடமே பொறுப்பை ஒப்படைக்கட்டும். ஏனெனில், நன்மையை வழங்குவதற்கும் தீமையைத் தடுப்பதற்கும் அவனே போதுமானவன்.


பயன்கள் / நல்லுபதேசங்கள்:

  1. அல்லாஹ்வின் அருட்கொடைகளை நினைவு கூர்வது இறைநம்பிக்கையை வலுப்படுத்துகிறது; அவனுக்கு நன்றி செலுத்தும் உள்ளத்தை உருவாக்குகிறது.
  2. எதிரிகள் எத்தனை சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும், அல்லாஹ் நாடினால் அவர்களின் சதிகளைத் தடுக்க முடியும் என்பதை இது உணர்த்துகிறது. எனவே, அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சத் தேவையில்லை.
  3. அல்லாஹ்வை அஞ்சுவதும் (தக்வா) அவனில் முழுமையான நம்பிக்கை வைப்பதும் (தவக்குல்) ஒவ்வொரு நம்பிக்கையாளரின் அத்தியாவசிய பண்புகளாகும்; இவை அவருக்கு வெற்றியையும் பாதுகாப்பையும் அளிக்கின்றன.
  4. சிரமங்களிலும் ஆபத்துகளிலும் மனிதன் அல்லாஹ்விடமே தஞ்சமடைய வேண்டும்; அவனே அனைத்து விவகாரங்களிலும் போதுமானவன்.
  5. இந்த வசனம் நம்பிக்கையாளர்களுக்கு தைரியத்தையும் உறுதியையும் அளிக்கிறது; அல்லாஹ்வின் உதவி எப்போதும் அவர்களுடன் இருப்பதாக உணர்த்துகிறது.


📜 வசனம் 9-13 — சூரா அல்-மாயிதா

9وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ ۙ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ عَظِيمٌ
ஈமான் கொண்டு. நல்ல அமல்கள் செய்வோருக்கு, மன்னிப்பையும், மகத்தான (நற்)கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.
10وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَٰئِكَ أَصْحَابُ الْجَحِيمِ
எவர் நிராகரித்து, நம் திருவசனங்களையும் மறுக்கிறார்களோ, அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்.
11يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ هَمَّ قَوْمٌ أَن يَبْسُطُوا إِلَيْكُمْ أَيْدِيَهُمْ فَكَفَّ أَيْدِيَهُمْ عَنكُمْ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ
முஃமின்களே! ஒரு கூட்டத்தார் தம் கைகளை உங்களிடம் நீட்(டி உங்களைக் கொன்று வி)டத் தீர்மானித்த போது, உங்களை விட்டு அவர்கள் கைகளை தடுத்து அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருளை நினைவு கூறுங்கள் - ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்;. இன்னும் அல்லாஹ்வின் மீதே முஃமின்கள் (முழுமையாக) நம்பிக்கை வைக்கட்டும்.
12۞ وَلَقَدْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ وَبَعَثْنَا مِنْهُمُ اثْنَيْ عَشَرَ نَقِيبًا ۖ وَقَالَ اللَّهُ إِنِّي مَعَكُمْ ۖ لَئِنْ أَقَمْتُمُ الصَّلَاةَ وَآتَيْتُمُ الزَّكَاةَ وَآمَنتُم بِرُسُلِي وَعَزَّرْتُمُوهُمْ وَأَقْرَضْتُمُ اللَّهَ قَرْضًا حَسَنًا لَّأُكَفِّرَنَّ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَلَأُدْخِلَنَّكُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۚ فَمَن كَفَرَ بَعْدَ ذَٰلِكَ مِنكُمْ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ
நிச்சயமாக அல்லாஹ் இஸ்ராயீலின் சந்ததியினர் இடத்தில் உறுதி மொழி வாங்கினான்;. மேலும் அவர்களிலிருந்து பன்னிரண்டு தலைவர்களை அனுப்பியுள்ளோம். இன்னும் (உறுதி மொழி வாங்கியபோது) அல்லாஹ் கூறினான்; "நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன்; நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஜக்காத்தும் கொடுத்து, என் தூதர்களை விசுவாசித்து, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்காக அழகிய கடனும் கொடுப்பீர்களானால் நிச்சயமாக நான் உங்கள் பாவங்களை மன்னித்து சதா நீரருவிகள் தாழாலே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளில் உங்களை நுழைய வைப்பேன்;. எனவே இதற்குப் பின்னரும், உங்களில் எவரேனும் (இம்மார்க்கத்தை) நிராகரிப்பின் நிச்சயமாக அவர் நேரான வழியிலிருந்து தவறிவிட்டார்."
13فَبِمَا نَقْضِهِم مِّيثَاقَهُمْ لَعَنَّاهُمْ وَجَعَلْنَا قُلُوبَهُمْ قَاسِيَةً ۖ يُحَرِّفُونَ الْكَلِمَ عَن مَّوَاضِعِهِ ۙ وَنَسُوا حَظًّا مِّمَّا ذُكِّرُوا بِهِ ۚ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلَىٰ خَائِنَةٍ مِّنْهُمْ إِلَّا قَلِيلًا مِّنْهُمْ ۖ فَاعْفُ عَنْهُمْ وَاصْفَحْ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ
அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்;. அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம்;. (இறை)வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்;. ஆகவே அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டு கொண்டே இருப்பீர். எனவே நீர் அவர்களை மன்னத்துப் புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
அல்-மாயிதாகுர்ஆன் பட்டியல்
120வசனம்
MedinanRevelation
11வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-மாயிதா 11

சூரா அல்-மாயிதா வசனம் 11 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : முஃமின்களே! ஒரு கூட்டத்தார் தம் கைகளை உங்களிடம் நீட்(டி உங்களைக் கொன்று வி)டத்…

சூரா வசனம் 11/120 — சூரா அல்-மாயிதா المائدة (Medinan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-மாயிதா கேள், சூரா அல்-மாயிதா மொழிபெயர்ப்பு, சூரா அல்-மாயிதா mp3, சூரா அல்-மாயிதா pdf. வசனம் 9–13. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers