அல்-ஜுமுஆ · 9/11
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-ஜுமுஆ
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ ۝٩
Yaaa ayyuhal lazeena aamanoo izaa noodiya lis-Salaati miny yawmil Jumu`ati fas`aw ilaa zikril laahi wa zarul bai`; zaalikum khayrul lakum in kuntum ta`lamoon
📖 தமிழில்
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00
📜

மொழிபெயர்ப்பு — Tafsir

சொற்பொருள் விளக்கம்:

  • نُودِيَ – அதான் சொல்லப்பட்டது (தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்பட்டது).
  • فَاسْعَوْا – நீங்கள் செல்லுங்கள், விரைந்து செல்லுங்கள் (இங்கு வேகமாக ஓடுவது கருத்தல்ல; மன உறுதியுடனும், ஆர்வத்துடனும், நடந்து செல்வதே கருத்தாகும்).
  • ذِكْرِ اللَّهِ – அல்லாஹ்வின் நினைவு; இங்கு குறிப்பாக ஜுமுஆ தொழுகை மற்றும் உரை (குத்பா) எனக் கருத்தாகும்.
  • وَذَرُوا الْبَيْعَ – வியாபாரத்தை (வாங்குதல், விற்றல்) விட்டுவிடுங்கள்.

விளக்கம்:

நம்பிக்கையாளர்களே! ஜுமுஆ (வெள்ளிக்கிழமை) நாளில் தொழுகைக்காக அதான் சொல்லப்பட்டால், (அதாவது இமாம் மிம்பரில் ஏறிய பிறகு அதான் சொல்லப்பட்டதும்) நீங்கள் அல்லாஹ்வின் நினைவிற்காக – அதாவது ஜுமுஆ உரையைச் செவிமடுத்து, ஜுமுஆ தொழுகையை நிறைவேற்றுவதற்காக – பள்ளிவாசல்களுக்குச் செல்லுங்கள். அதற்காக உங்கள் வியாபாரத்தையும், வாங்குதல்-விற்றல் போன்ற அனைத்து உலகக் காரியங்களையும் விட்டுவிடுங்கள். அந்த நேரத்தில் தொழுகைக்குச் செல்வதும், வியாபாரத்தை விடுவதும் உங்களுக்கு மிகவும் நல்லது; ஏனெனில் அதில் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுவதும், அல்லாஹ்வின் கூலி கிடைப்பதும் உள்ளது. உங்களுடைய நன்மை-தீமைகளை அறிந்து கொள்ளக்கூடியவர்களாக இருந்தால், அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டதை நீங்கள் கடைப்பிடியுங்கள். இந்த வசனத்தில் ஜுமுஆ தொழுகைக்குச் செல்வது கடமை என்பதும், உரையைச் செவிமடுப்பது அவசியம் என்பதும் தெளிவாகிறது.


இந்த வசனத்திலிருந்து பெறும் பயன்கள்:

  1. ஜுமுஆ தொழுகை நம்பிக்கையாளர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது; அதற்குச் செல்வது கட்டாயமாகும்.
  2. ஜுமுஆ அதான் சொல்லப்பட்டவுடன் உலக வியாபாரம், கொள்முதல், விற்பனை போன்ற அனைத்தையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.
  3. ஜுமுஆ உரையைச் செவிமடுப்பதும், தொழுகையில் கலந்துகொள்வதும் அல்லாஹ்வின் நினைவாகும்; இது உலக ஆதாயங்களை விட மேலானது.
  4. மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக உலக விவகாரங்களை விடுவது நம்பிக்கையாளர்களின் பண்பாகும்; இதுவே அவர்களுக்கு உண்மையான நன்மையைத் தரும்.
  5. அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது, உலக ஆதாயங்களை விட நிலையானதும், மேலானதுமான பலன்களை அளிக்கிறது – இதுவே அறிவுடையோரின் வழியாகும்.


📜 வசனம் 7-11 — சூரா அல்-ஜுமுஆ

7وَلَا يَتَمَنَّوْنَهُ أَبَدًا بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ ۚ وَاللَّهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ
ஆனால், அவர்களுடைய கைகள் முற்படுத்தி வைத்த (பாவத்)தின் காரணத்தால், அவர்கள் அதை (மரணத்தை) ஒருக்காலும் விரும்ப மாட்டார்கள். மேலும், அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.
8قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ۖ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
"நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும், பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்" (என்று) (நபியே!) நீர் கூறுவீராக.
9يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
10فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ
பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள், அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.
11وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا ۚ قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ ۚ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ
இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர், "அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும், மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அல்-ஜுமுஆகுர்ஆன் பட்டியல்
11வசனம்
MedinanRevelation
9வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-ஜுமுஆ 9

சூரா அல்-ஜுமுஆ வசனம் 9 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு,…

சூரா வசனம் 9/11 — சூரா அல்-ஜுமுஆ الجمعة (Medinan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-ஜுமுஆ கேள், சூரா அல்-ஜுமுஆ மொழிபெயர்ப்பு, சூரா அல்-ஜுமுஆ mp3, சூரா அல்-ஜுமுஆ pdf. வசனம் 7–11. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Tuesday, September 29, 2026

Don't forget us in your sincere prayers