முஹம்மத் · 36/38
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா முஹம்மத்
إِنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ ۚ وَإِن تُؤْمِنُوا وَتَتَّقُوا يُؤْتِكُمْ أُجُورَكُمْ وَلَا يَسْأَلْكُمْ أَمْوَالَكُمْ ۝٣٦
Innamal hayaatud dunyaa la`ibunw wa lahw; wa in to`minoo wa tattaqoo yu`tikum ujoorakum wa laa yas`alkum amwaalakum
📖 தமிழில்
திடமாக இவ்வுலக வாழ்க்கை வீண்விளையாட்டாகவும் வேடிக்கையாகவுமிருக்கிறது ஆனால், நீங்கள் ஈமான் கொண்டு பயபக்தியுடையவர்களாயிருந்தால், அவன் உங்களுடைய கூலிகளை உங்களுக்கு அறிப்பான். அன்றியும் உங்களிடம் உங்களுடைய பொருள்களை அவன் கேட்கவில்லை.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00
📜

மொழிபெயர்ப்பு — Tafsir

சொற்பொருள் விளக்கம்:

  • لَعِبٌ (லஃஇப்): விளையாட்டு; பயனற்ற செயல்.
  • وَلَهْوٌ (வ லஹ்வு): பொழுதுபோக்கு; மனதை மகிழ்விக்கும் ஆனால் நிலையற்ற விஷயங்கள்.
  • يُؤْتِكُمْ (யுஃதிகும்): உங்களுக்குக் கொடுப்பான்.
  • أُجُورَكُمْ (உஜூரகும்): உங்கள் நற்பிரதிபலன்கள்; நன்மைகளின் கூலி.
  • لَا يَسْأَلْكُمْ (லா யஸ்அல்கும்): அவன் உங்களிடம் கேட்கமாட்டான்.

விளக்கம்:

இவ்வுலக வாழ்க்கை ஒரு விளையாட்டைப் போன்றும், பொழுதுபோக்கைப் போன்றும் உள்ளது. அது நிலையற்றது; இன்பங்களும் செல்வங்களும் மரணத்துடன் முடிந்துவிடும். எனவே அறிவாளி இந்த அற்ப உலக வாழ்க்கையில் மயங்கி, மறுமைக்கான தயாரிப்பை விட்டுவிடக்கூடாது.

நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் உண்மையான ஈமான் கொண்டு, அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றி, தடை செய்யப்பட்டவற்றை விட்டும் விலகி, தக்வா (இறையச்சம்) உள்ளவர்களாக இருந்தால், அல்லாஹ் உங்கள் நன்மைகளுக்கான முழு கூலியைக் குறைவின்றி வழங்குவான். மேலும், அவன் உங்களுடைய அனைத்து செல்வங்களையும் கேட்பதில்லை. கடமையான ஸகாத்தை மட்டுமே அவன் உங்களிடம் கேட்கிறான். அதுவும் உங்கள் செல்வத்தில் ஒரு சிறிய பகுதியே ஆகும்.

அவன் உங்களுடைய அனைத்து செல்வங்களையும் கேட்டு, அதில் வற்புறுத்தினால், நீங்கள் கஞ்சத்தனம் செய்து, அதைக் கொடுக்க மறுத்து விடுவீர்கள். அப்போது உங்கள் உள்ளங்களில் மறைந்திருந்த குற்றங்கள் வெளிப்பட்டுவிடும். எனவே அல்லாஹ் உங்கள் மீது கருணை காட்டி, உங்களிடம் அனைத்தையும் கேட்காமல், கடமையான அளவை மட்டுமே கேட்கிறான்.


பயன்கள்:

  1. இவ்வுலக வாழ்க்கை நிலையற்றது என்பதை உணர்ந்து, மறுமை வாழ்க்கைக்காக அதிகமாக செயல்பட வேண்டும்.
  2. ஈமானும் தக்வாவும் தான் மனிதனுக்கு நிலையான வெற்றியைத் தரும்; செல்வமும் பதவியும் அல்ல.
  3. அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிகவும் கருணையுள்ளவன்; அவர்களுக்கு சிரமம் தருவதை விரும்பமாட்டான். கடமையான ஸகாத்தை மட்டுமே கேட்பது இதற்கு சான்று.
  4. செல்வத்தின் மீதுள்ள பற்று மனிதனை இறைவனிடமிருந்து தூரப்படுத்தும்; அதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  5. இஸ்லாம் நடைமுறைக்கு எளிதான வாழ்க்கை முறை; அது மனிதனுக்கு சுமையை ஏற்றுவதில்லை.


📜 வசனம் 34-38 — சூரா முஹம்மத்

34إِنَّ الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَن سَبِيلِ اللَّهِ ثُمَّ مَاتُوا وَهُمْ كُفَّارٌ فَلَن يَغْفِرَ اللَّهُ لَهُمْ
நிச்சியமாக, எவர்களை நிராகரித்துக் கொண்டும், (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டு தடுத்துக் கொண்டும், பின்னர் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே இறந்தும் விடுகிறார்களோ - இ(த்தகைய)வர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.
35فَلَا تَهِنُوا وَتَدْعُوا إِلَى السَّلْمِ وَأَنتُمُ الْأَعْلَوْنَ وَاللَّهُ مَعَكُمْ وَلَن يَتِرَكُمْ أَعْمَالَكُمْ
(முஃமின்களே! போரில்) நீங்கள் தளர்ச்சியடைந்து, தைரியமிழந்து சமாதானத்தைக் கோராதீர்கள்; (ஏனென்றால்) நீங்கள் தாம் மேலோங்குபவர்கள்; அல்லாஹ் உங்களுடனேயே இருக்கின்றான் - மேலும், அவன் உங்கள் (நற்) செய்கைகளை உங்களுக்கு (ஒரு போதும்) குறைத்து விடமாட்டான்.
36إِنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ ۚ وَإِن تُؤْمِنُوا وَتَتَّقُوا يُؤْتِكُمْ أُجُورَكُمْ وَلَا يَسْأَلْكُمْ أَمْوَالَكُمْ
திடமாக இவ்வுலக வாழ்க்கை வீண்விளையாட்டாகவும் வேடிக்கையாகவுமிருக்கிறது ஆனால், நீங்கள் ஈமான் கொண்டு பயபக்தியுடையவர்களாயிருந்தால், அவன் உங்களுடைய கூலிகளை உங்களுக்கு அறிப்பான். அன்றியும் உங்களிடம் உங்களுடைய பொருள்களை அவன் கேட்கவில்லை.
37إِن يَسْأَلْكُمُوهَا فَيُحْفِكُمْ تَبْخَلُوا وَيُخْرِجْ أَضْغَانَكُمْ
அவன் உங்களிடம் அவற்றைக் கேட்டு வற்புறுத்தினாலும், நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள். (பேராசை போன்ற) உங்கள் உள்ளக்கிடக்கைகளையும் அவன் வெளிப்படுத்தி வடுவான்.
38هَا أَنتُمْ هَٰؤُلَاءِ تُدْعَوْنَ لِتُنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ فَمِنكُم مَّن يَبْخَلُ ۖ وَمَن يَبْخَلْ فَإِنَّمَا يَبْخَلُ عَن نَّفْسِهِ ۚ وَاللَّهُ الْغَنِيُّ وَأَنتُمُ الْفُقَرَاءُ ۚ وَإِن تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُم
அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்; ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் - அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்க்ள தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள்.
முஹம்மத்குர்ஆன் பட்டியல்
38வசனம்
MedinanRevelation
36வசனம்

மொழிபெயர்ப்பு — முஹம்மத் 36

சூரா முஹம்மத் வசனம் 36 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : திடமாக இவ்வுலக வாழ்க்கை வீண்விளையாட்டாகவும் வேடிக்கையாகவுமிருக்கிறது ஆனால், நீங்கள் ஈமான் கொண்டு பயபக்தியுடையவர்களாயிருந்தால்,…

சூரா வசனம் 36/38 — சூரா முஹம்மத் محمد (Medinan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா முஹம்மத் கேள், சூரா முஹம்மத் மொழிபெயர்ப்பு, சூரா முஹம்மத் mp3, சூரா முஹம்மத் pdf. வசனம் 34–38. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers