PDF —
182 வசனம் Meccan PDF
Built right in your browser — download starts automatically

சூரா அஸ்-ஸாஃப்பாத் pdf — பதிவிறக்கம் (தமிழ்)

சூரா அஸ்-ஸாஃப்பாத் pdf தமிழ் — பதிவிறக்கம் சூரா அஸ்-ஸாஃப்பாத் மொழிபெயர்ப்பு. சூரா அஸ்-ஸாஃப்பாத் (Meccan) 182 வசனம்.

← யாஸீன்சூரா அஸ்-ஸாஃப்பாத் ஸாத் →


182 வசனம் · Meccan · தமிழ்
bismillah
ﭑﭒﭓ
37:1 அணிவகுத்து நிற்பவர்கள் மீது சத்தியமாக,
ﭔﭕﭖ
37:2 பலமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக,
ﭗﭘﭙ
37:3 (நினைவூட்டும்) வேதத்தை ஓதுவோர் மீது சத்தியமாக,
ﭚﭛﭜﭝ
37:4 நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனே.
ﭞﭟﭠﭡﭢﭣﭤﭥ
37:5 வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன்; கீழ்திசைகளின் இறைவன்.
ﭦﭧﭨﭩﭪﭫﭬ
37:6 நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம்.
ﭭﭮﭯﭰﭱﭲ
37:7 (அதைத்) தீய ஷைத்தான்கள் அனைவருக்கும் தடையாகவும் (ஆக்கினோம்).
ﭳﭴﭵﭶﭷﭸﭹﭺﭻﭼ
37:8 (அதனால்) அவர்கள் மேலான கூட்டத்தார் (பேச்சை ஒளிந்து) கேட்க முடியாது இன்னும், அவர்கள் ஒவ்வோர் திசையிலிருந்தும் வீசி எறியப்படுகிறார்கள்.
ﭽﭾﭿﮀﮁﮂ
37:9 (அவர்கள்) துரத்தப்படுகிறார்கள்; அவர்களுக்கு நிலையான வேதனையுமுண்டு.
ﮃﮄﮅﮆﮇﮈﮉﮊ
37:10 (ஏதேனும் செய்தியை) இறைஞ்சிச் செல்ல முற்பட்டால், அப்பொழுது அவனைப் பிரகாச தீப்பந்தம் பின்தொடரும்.
ﮋﮌﮍﮎﮏﮐﮑﮒﮓﮔﮕﮖﮗﮘ
37:11 ஆகவே, "படைப்பால் அவர்கள் வலியவர்களா அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி போன்றவையா) என்று (நிராகரிப்போரிடம் நபியே!) நீர் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களைப் பிசுபிசுப்பன களிமண்ணால்தான் படைத்திருக்கின்றோம்.
ﮙﮚﮛﮜ
37:12 (நபியே! அல்லாஹ்வின் வல்லமையைக் கண்டு) நீர் ஆச்சரியப்படுகிறீர்; (ஆனால்) அவர்கள் பரிகாசம் செய்கின்றனர்.
ﮝﮞﮟﮠﮡ
37:13 அன்றியும், அவர்களுக்கு நினைவூட்டப்பட்டாலும், (அதனை) அவர்கள் நினைவிலிறுத்திக் கொள்வதில்லை.
ﮢﮣﮤﮥﮦ
37:14 அவர்கள் (ஏதேனும்) ஓர் அத்தாட்சியைக் கண்டாலும், (அதை) மெத்தப்பரிகாசம் செய்கின்றனர்.
ﮧﮨﮩﮪﮫﮬﮭ
37:15 "இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை" என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ﮮﮯﮰﮱﯓﯔﯕﯖ
37:16 "நாங்கள் இறந்து, மண்ணாகவும் எலும்புகளாகவும் நாங்கள் ஆகிவிட்டாலும், மெய்யாகவே (நாங்கள் மீண்டும் உயிர்ப்பித்து) எழுப்பப்படுபவர்களா? (என்றும் கேட்கின்றனர்.)
ﯗﯘﯙ
37:17 "அவ்வாறே, முந்தைய நம் தந்தையர்களுமா? (எழுப்பப்படுவார்கள்? என்றும் கேட்கின்றனர்.)
ﯚﯛﯜﯝﯞ
37:18 "ஆம்! (உங்கள் செயல்களின் காரணமாக) நீங்கள் சிறுமையடைந்தவர்களா(கவும் எழுப்பப்படு)வீர்கள்" என்று (நபியே!) நீர் கூறும்.
ﯟﯠﯡﯢﯣﯤﯥﯦ
37:19 ஒரே சப்தம் தான்! உடனே அவர்கள் (திடுக்கிட்டு எழுந்து) பார்ப்பார்கள்.
ﯧﯨﯩﯪﯫﯬ
37:20 (அவ்வேளை) "எங்களுடைய கேடே! இது கூலி கொடுக்கும் நாளாயிற்றே" என்று அவர்கள் கூறுவர்.
ﯭﯮﯯﯰﯱﯲﯳﯴ
37:21 "நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டுக் கொண்டிருந்தீர்களே அந்தத் தீர்ப்பு நாள் இதுதான்!" (என்று அவர்களுக்குக் கூறப்படும்.)
ﯵﯶﯷﯸﯹﯺﯻﯼﯽ
37:22 "அநியாயம் செய்தார்களே அவர்களையும் அவர்களுடைய துணைகளையும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றையும் ஒன்று சேருங்கள்.
ﯾﯿﰀﰁﰂﰃﰄﰅ
37:23 "அல்லாஹ்வையன்றி (அவர்கள் வழிபட்டவை அவை) பின்னர் அவர்களை, நரகத்தின் பாதைக்கு கொண்டு செல்லுங்கள்.
ﰆﰇﰈﰉﰊ
37:24 "இன்னும், அவர்களை (அங்கே) நிறுத்தி வையுங்கள்; அவர்கள் நிச்சயமாகக் (கேள்வி கணக்குக்) கேட்கப்பட வேண்டியவர்கள்" (என்று மலக்குகளுக்குக் கூறப்படும்)
ﭑﭒﭓﭔﭕ
37:25 "உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் (உலகில் செய்தது போன்று) உதவி செய்து கொள்ளவில்லை?" (என்று கேட்கப்படும்).
ﭖﭗﭘﭙﭚ
37:26 ஆனால் அவர்கள் அந்நாளில் (எதுவும் செய்ய இயலாது தலை குனிந்து) கீழ்படிந்தவர்களாக இருப்பார்கள்.
ﭛﭜﭝﭞﭟﭠ
37:27 அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி, ஒருவரை ஒருவர் கேள்வி கேட்டு(த் தர்க்கித்துக்) கொண்டும் இருப்பார்கள்.
ﭡﭢﭣﭤﭥﭦﭧ
37:28 (தம் தலைவர்களை நோக்கி) "நிச்சயமாக நீங்கள் வலப்புறத்திலிருந்து (சக்தியுடன்) எங்களிடம் வருகிறவர்களாக இருந்தீர்கள்" என்று கூறுவார்கள்.
ﭨﭩﭪﭫﭬﭭ
37:29 ("அப்படியல்ல!) நீங்கள் தாம் முஃமின்களாக - நம்பிக்கை கொண்டோராய் - இருக்கவில்லை!" என்று அ(த்தலை)வர்கள் கூறுவர்.
ﭮﭯﭰﭱﭲﭳﭴﭵﭶﭷﭸﭹ
37:30 "அன்றியும் உங்கள் மீது எங்களுக்கு எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை எனினும் நீங்கள் தாம் வரம்பு கடந்து பாவம் செய்யும் கூட்டத்தாராக இருந்தீர்கள்."
ﭺﭻﭼﭽﭾﭿﮀﮁ
37:31 "ஆகையால், எங்கள் இறைவனுடைய வாக்கு எங்கள் மீது உண்மையாகி விட்டது நிச்சயமாக நாம் (யாவரும் வேதனையைச்) சுவைப்பவர்கள் தாம்!
ﮂﮃﮄﮅﮆ
37:32 "(ஆம்) நாங்கள் உங்களை வழிகெடுத்தோம்; நிச்சயமாக நாங்களே வழிகெட்டுத்தான் இருந்தோம்."
ﮇﮈﮉﮊﮋﮌ
37:33 ஆகவே, அந்நாளில் நிச்சயமாக அவர்கள் வேதனையில் கூட்டானவர்களாகவே இருப்பார்கள்.
ﮍﮎﮏﮐﮑ
37:34 குற்றவாளிகளை இவ்வாறு தான் நாம் நிச்சயமாக நடத்துவோம்.
ﮒﮓﮔﮕﮖﮗﮘﮙﮚﮛﮜ
37:35 "அல்லாஹ்வைத்தவிர நாயன் இல்லை" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், மெய்யாகவே அவர்கள் பெருமையடித்தவர்களாக இருந்தனர்.
ﮝﮞﮟﮠﮡﮢﮣ
37:36 "ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?" என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
ﮤﮥﮦﮧﮨﮩ
37:37 அப்படியல்ல! அவர் சத்தியத்தையே கொண்டு வந்திருக்கிறார்; அன்றியும் (தமக்கு முன்னர் வந்த) தூதர்களையும் உண்மைப்படுத்துகிறார்.
ﮪﮫﮬﮭﮮ
37:38 (இதை நிராகரிப்போராயின்) நிச்சயமாக நீங்கள் நோவினை தரும் வேதனையை அனுபவிப்பவர்கள் தாம்.
ﮯﮰﮱﯓﯔﯕﯖ
37:39 ஆனால், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கன்றி (வேறு) எதற்கும் நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள்.
ﯗﯘﯙﯚﯛ
37:40 அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களோ (எனின்)-
ﯜﯝﯞﯟﯠ
37:41 அவர்களுக்கு அறியப்பட்டுள்ள உணவு அவர்களுக்கு இருக்கிறது.
ﯡﯢﯣﯤ
37:42 கனி வகைகள் (அளிக்கப்படும்), இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள்;
ﯥﯦﯧﯨ
37:43 இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் -
ﯩﯪﯫﯬ
37:44 ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்).
ﯭﯮﯯﯰﯱﯲ
37:45 தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களசை; சுற்றி கொண்டுவரும்.
ﯳﯴﯵﯶ
37:46 (அது) மிக்க வெண்மையானது அருந்துவோருக்கு மதுரமானது.
ﯷﯸﯹﯺﯻﯼﯽﯾ
37:47 அதில் கெடுதியும் இராது அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர்.
ﯿﰀﰁﰂﰃ
37:48 இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள்.
ﰄﰅﰆﰇ
37:49 (தூய்மையில் அவர்கள் சிப்பிகளில்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.
ﰈﰉﰊﰋﰌﰍ
37:50 (அப்பொழுது) அவர்களில் ஒரு சிலர் சிலரை முன்னோக்கியவாறு பேசிக் கொண்டிருப்பார்கள்.
ﰎﰏﰐﰑﰒﰓﰔﰕ
37:51 அவர்களில் ஒருவர்; எனக்கு (இம்மையில்) உற்ற நண்பன் ஒருவன் இருந்தான் எனக் கூறுவார்.
ﭑﭒﭓﭔﭕ
37:52 (மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதை) உண்மையென ஏற்பவர்களில் நிச்சயமாக நீயும் ஒருவனா எனக் கேட்டான்.
ﭖﭗﭘﭙﭚﭛﭜﭝ
37:53 "நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவுமாகி விட்டபின், (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்பெறுவோமா?" என்றும் கேட்டான்.
ﭞﭟﭠﭡﭢ
37:54 (அவ்வாறு கூறியவனை) "நீங்கள் பார்க்(க விரும்பு)கிறீர்களா?" என்றும் கூறுவார்.
ﭣﭤﭥﭦﭧﭨ
37:55 அவர் (கீழே) நோக்கினார்; அவனை நரகத்தின் நடுவில் பார்த்தார்.
ﭩﭪﭫﭬﭭﭮ
37:56 (அவனிடம்) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிட முற்பட்டாயே!
ﭯﭰﭱﭲﭳﭴﭵ
37:57 "என் இறைவனுடைய அருள் இல்லாதிருந்தால், நானும் (நரகத்திற்குக்) கொண்டு வரப்பட்டவர்களில் ஒருவனாகியிருப்பேன்.
ﭶﭷﭸﭹ
37:58 "(மற்றொருமுறையும்) நாம் இறந்து விடுவோமா?
ﭺﭻﭼﭽﭾﭿﮀ
37:59 "(இல்லை) நமக்கு முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை அன்றியும், நாம் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர்" என்று கூறுவார்.
ﮁﮂﮃﮄﮅﮆ
37:60 நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும்.
ﮇﮈﮉﮊﮋ
37:61 எனவே பாடுபடுபவர்கள் இது போன்றதற்காகவே பாடுபடவேண்டும்.
ﮌﮍﮎﮏﮐﮑﮒ
37:62 அது சிறப்பான விருந்தா? அல்லது (நரகத்திலிருக்கும் கள்ளி) 'ஜக்கூம்' என்ற மரமா?
ﮓﮔﮕﮖﮗ
37:63 நிச்சயமாக நாம் அதை அநியாயக்காரர்களுக்கு ஒரு சோதனையாகவே செய்திருக்கிறோம்.
ﮘﮙﮚﮛﮜﮝﮞ
37:64 மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும் மரமாகும்.
ﮟﮠﮡﮢﮣ
37:65 அதன் பாளைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போலிருக்கும்.
ﮤﮥﮦﮧﮨﮩﮪ
37:66 நிச்சயமாக, அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்; அதைக்கொண்டு தங்களுடைய வயிறுகளை நிரப்பிக் கொள்வார்கள்.
ﮫﮬﮭﮮﮯﮰﮱﯓ
37:67 பின்னர், நிச்சயமாக அவர்களுக்குக் குடிக்க, கொதிக்கும் நீர் கொடுக்கப்படும்.
ﯔﯕﯖﯗﯘﯙ
37:68 அதன் பின்னர் அவர்கள் மீளும் தலம் நிச்சயமாக நரகம்தான்.
ﯚﯛﯜﯝﯞ
37:69 நிச்சயமாக அவர்கள் தம் மூதாதையர்களை வழி கேட்டிலேயே கண்டார்கள்.
ﯟﯠﯡﯢﯣ
37:70 ஆகையால், அவர்களுடைய அடிச்சுவடுகள்மீதே இவர்களும் விரைந்தார்கள்.
ﯤﯥﯦﯧﯨﯩ
37:71 இன்னும், இவர்களுக்கு முன்னரும் அப்பண்டைய மக்களில் பெரும்பாலோர் வழி கெட்டிருந்தனர்.
ﯪﯫﯬﯭﯮ
37:72 மேலும், நிச்சயமாக நாம் அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிப்பவர்களை அனுப்பினோம்.
ﯯﯰﯱﯲﯳﯴ
37:73 பிறகு, அவ்வாறு அச்சமூட்டி எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு என்னவாயிற்றென்று (நபியே!) நீர் பாரும்.
ﯵﯶﯷﯸﯹ
37:74 அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களைத் தவிர.
ﯺﯻﯼﯽﯾﯿ
37:75 அன்றியும் நூஹ் நம்மைப் பிரார்த்தித்தார்; பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம்.
ﰀﰁﰂﰃﰄﰅ
37:76 ஆகவே, நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெருங் கஷ்டத்திலிருந்து பாதுகாத்தோம்.
ﭑﭒﭓﭔﭕ
37:77 மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம்.
ﭖﭗﭘﭙﭚ
37:78 மேலும், அவருக்காகப் பிற்காலத்தவர்க்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்.
ﭛﭜﭝﭞﭟﭠ
37:79 "ஸலாமுன் அலாநூஹ்" - அகிலங்கள் எங்கும் நூஹ் மீது ஸலாம் உண்டாவதாக.
ﭡﭢﭣﭤﭥ
37:80 இவ்வாறே, நன்மை செய்வோருக்கு நிச்யமாக நாம் கூலி கொடுக்கிறோம்.
ﭦﭧﭨﭩﭪ
37:81 நிச்சயமாக அவர் (நூஹ்) முஃமின்களான நம் நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்.
ﭫﭬﭭﭮ
37:82 பிறகு நாம் மற்றவர்களை (வெள்ளத்தில்) மூழ்கடித்தோம்.
ﭯﭰﭱﭲﭳﭴ
37:83 நிச்சயமாக, இப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களில் ஒருவர்தாம்.
ﭵﭶﭷﭸﭹﭺ
37:84 அவர் தூய நெஞ்சத்துடன் தம்முடைய இறைவனிடம் வந்தபோது (நபியே! நீர் நினைவு கூர்வீராக).
ﭻﭼﭽﭾﭿﮀﮁ
37:85 அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தாரையும் நோக்கி "நீங்கள் எதனை வணங்குகிறீர்கள்? எனக் கேட்ட போது,
ﮂﮃﮄﮅﮆﮇ
37:86 "அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகிறீர்கள்?"
ﮈﮉﮊﮋﮌ
37:87 "அவ்வாறாயின் அகிலங்களுக்கெல்லாம் இறைவன் பற்றி உங்கள் எண்ணம் தான் என்ன?" (என்று கேட்டார்.)
ﮍﮎﮏﮐﮑ
37:88 பின்னர் அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார்.
ﮒﮓﮔﮕ
37:89 "நிச்சயமாக நாம் நோயாளியாக இருக்கிறேன்" என்றும் கூறினார்.
ﮖﮗﮘﮙ
37:90 எனவே அவரை விட்டும் அ(வருடைய சமூகத்த)வர்கள் திரும்பிச் சென்றனர்.
ﮚﮛﮜﮝﮞﮟﮠ
37:91 அப்பால் அவர்களுடைய தெய்வங்களின் பால் அவர் சென்று "(உங்களுக்கு முன் படைக்கப்பட்டுள்ள உணவுகளை) நீங்கள் உண்ணமாட்டீர்களா?" என்று கூறினார்.
ﮡﮢﮣﮤﮥ
37:92 "உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுகிறீர்களில்லை?" (என்றும் கேட்டார்.)
ﮦﮧﮨﮩﮪ
37:93 பின் அவர் அவற்றின் பக்கம் திரும்பி தம் வலக்கையால் அவற்றை அடித்து (உடைத்து) விட்டார்.
ﮫﮬﮭﮮ
37:94 (அவற்றை வணங்குபவர்கள்) அவர்பால் விரைந்து வந்தார்கள்.
ﮯﮰﮱﯓﯔ
37:95 அவர் கூறினார்! "நீங்களே செதுக்கிய இவற்றையா வணங்குகிறீர்கள்?"
ﯕﯖﯗﯘﯙ
37:96 "உங்களையும், நீங்கள் செய்த(இ)வற்றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்."
ﯚﯛﯜﯝﯞﯟﯠﯡ
37:97 அவர்கள் கூறினார்கள்; "இவருக்காக(ப் பெரியதொரு நெருப்புக்) கிடங்கை அமைத்து எரிநெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்."
ﯢﯣﯤﯥﯦﯧ
37:98 (இவ்வாறாக) அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள்; ஆனால், நாம் அவர்களையே இழிவுபடுத்தி விட்டோம்.
ﯨﯩﯪﯫﯬﯭﯮ
37:99 மேலும், அவர் கூறினார்; "நிச்சயமாக நான் என்னுடைய இறைவனிடம் செல்பவன்; திட்டமாக அவன் எனக்கு நேர் வழியைக் காண்பிப்பான்."
ﯯﯰﯱﯲﯳﯴ
37:100 "என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக" (என்று பிரார்த்தித்தார்).
ﯵﯶﯷﯸ
37:101 எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.
ﯹﯺﯻﯼﯽﯾﯿﰀﰁﰂﰃﰄﰅﰆﰇﰈﰉﰊﰋﰌﰍﰎﰏﰐﰑﰒﰓﰔﰕ
37:102 பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!" (மகன்) கூறினான்; "என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்."
ﭑﭒﭓﭔﭕ
37:103 ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்றாஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது
ﭖﭗﭘﭙ
37:104 நாம் அவரை "யா இப்றாஹீம்!" என்றழைத்தோம்.
ﭚﭛﭜﭝﭞﭟﭠﭡﭢ
37:105 "திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.
ﭣﭤﭥﭦﭧﭨ
37:106 "நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்."
ﭩﭪﭫﭬ
37:107 ஆயினும், நாம் ஒரு மகத்தான் பலியைக் கொண்டு அவருக்குப்ப பகரமாக்கினோம்.
ﭭﭮﭯﭰﭱ
37:108 இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்;
ﭲﭳﭴﭵ
37:109 "ஸலாமுன் அலா இப்ராஹீம்" (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)!
ﭶﭷﭸﭹ
37:110 இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம்.
ﭺﭻﭼﭽﭾ
37:111 நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்.
ﭿﮀﮁﮂﮃﮄ
37:112 ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபி இஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம்.
ﮅﮆﮇﮈﮉﮊﮋﮌﮍﮎﮏﮐ
37:113 இன்னும் நாம் அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம்; மேலும் அவ்விருவருடைய சந்ததியரில் நன்மை செய்பவர்களும் இருக்கின்றார்கள்; அன்றியும் தமக்குத் தாமே பகிரங்கமாக அநியாயம் செய்து கொள்வோரும் இருக்கின்றனர்.
ﮑﮒﮓﮔﮕﮖ
37:114 மேலும், மூஸா, ஹாரூன் ஆகியவர்கள் மீதும் நாம் நிச்சயமாக அருள் புரிந்தோம்.
ﮗﮘﮙﮚﮛﮜ
37:115 அவ்விருவரையும், அவ்விருவருடைய சமூகத்தாரையும் மிகப்பெரும் துன்பத்திருந்து இரட்சித்தோம்.
ﮝﮞﮟﮠﮡ
37:116 மேலும், நாம் அவர்களுக்கு உதவி செய்தோம்; எனவே அவர்கள் தாம் வெற்றி பெற்றோரானார்கள்.
ﮢﮣﮤﮥ
37:117 அவ்விருவருக்கும் நாம் துலக்கமான வேதத்தைக் கொடுத்தோம்.
ﮦﮧﮨﮩ
37:118 இன்னும், நாம் அவ்விருவருக்கும் நேர்வழியைக் காண்பித்தோம்.
ﮪﮫﮬﮭﮮ
37:119 இன்னும் அவ்விருவருக்குமாகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்;
ﮯﮰﮱﯓﯔ
37:120 "ஸலாமுன் அலா மூஸா வ ஹாரூன்" மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் ஸலாம் உண்டாவதாக.
ﯕﯖﯗﯘﯙ
37:121 இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுக்கிறொம்.
ﯚﯛﯜﯝﯞ
37:122 நிச்சயமாக அவ்விருவரும் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்கள்.
ﯟﯠﯡﯢﯣ
37:123 மேலும், நிச்சயமாக இல்யாஸும் முர்ஸல்(களில் - தூதராக அனுப்பப்பட்டவர்)களில் ஒருவர் தாம்.
ﯤﯥﯦﯧﯨﯩ
37:124 அவர் தம் சமூகத்தவரிடம்; "நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?" என்று (போதித்துச்) சொல்லியதை (நினைவு கூர்வீராக).
ﯪﯫﯬﯭﯮﯯ
37:125 "நீங்கள் படைப்பவர்களில் மிகச் சிறப்பானவனை விட்டு விட்டு 'பஃலு' (எனும் சிலையை) வணங்குகிறீர்களா?
ﯰﯱﯲﯳﯴﯵ
37:126 "அல்லாஹ்தான் - உங்களுடைய இறைவனும், உங்களுடை முன் சென்ற மூதாதையர்களின் இறைவனும் ஆவான்."
ﭑﭒﭓﭔ
37:127 ஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆகையால், அவர்கள் (மறுமையில் இறைவன் முன்னே தண்டனைக்காக) நிச்சயமாக கொண்டு வரப்படுவார்கள்.
ﭕﭖﭗﭘﭙ
37:128 அல்லாஹ்வுடைய தூய அடியார்களைத் தவிர. (இவர்களுக்கு நற்கூலியுண்டு.)
ﭚﭛﭜﭝﭞ
37:129 மேலும், நாம் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்;
ﭟﭠﭡﭢﭣ
37:130 "ஸலாமுன் அலா இல்யாஸீன்" இல்யாஸீன் மீது ஸலாமுண்டாவதாக.
ﭤﭥﭦﭧﭨ
37:131 இவ்வாறே நன்மை செய்வோருக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுக்கிறோம்.
ﭩﭪﭫﭬﭭ
37:132 நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்) அடியார்களில் நின்றுமுள்ளவர்.
ﭮﭯﭰﭱﭲ
37:133 மேலும், லூத்தும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.
ﭳﭴﭵﭶﭷ
37:134 அவரையும் அவருடைய குடும்பத்தார் யாவரையும் காத்துக் கொண்டோம் -
ﭸﭹﭺﭻﭼ
37:135 பின்னால் தங்கிவிட்டவர்களிடையே இருந்துவிட்ட (லூத்தின் மனைவியான) கிழவியைத் தவிர்த்து.
ﭽﭾﭿﮀ
37:136 பின்னர் நாம் மற்றவர்களை அழித்து விட்டோம்.
ﮁﮂﮃﮄﮅ
37:137 இன்னும், நீங்கள் காலை வேலைகளில் அவர்களின் (அழிந்து போன ஊர்களின்) மீதே நடந்து செல்கிறீர்கள்.
ﮆﮇﮈﮉﮊ
37:138 இன்னும் இரவிலும் கூட(ச் செல்கிறீர்கள். இதைக்கொண்டு) நீங்கள் நல்லறிவு பெற மாட்டீர்களா?
ﮋﮌﮍﮎﮏ
37:139 மேலும், யூனுஸும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.
ﮐﮑﮒﮓﮔﮕ
37:140 நிரப்பப்பட்ட கப்பலின் பால் அவர் ஒளித்தோடிய போது -
ﮖﮗﮘﮙﮚ
37:141 அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்த்தனர் - இவர் தாம் குற்றமுள்ளவர் (என்று தீர்மானித்தனர்).
ﮛﮜﮝﮞﮟ
37:142 ஆகவே, (அவர்களுடைய) பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார் ஒரு மீன் விழுங்கிற்று.
ﮠﮡﮢﮣﮤﮥ
37:143 ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து - தஸ்பீஹு செய்து - கொண்டிராவிட்டால் -
ﮦﮧﮨﮩﮪﮫﮬ
37:144 (மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள்வரை, அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார்.
ﮭﮮﮯﮰﮱﯓ
37:145 ஆனால், அவர் நோயுற்றிருந்த நிலையில், நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியெற்றி) வெட்ட வெளியில் போட்டோம்.
ﯔﯕﯖﯗﯘﯙ
37:146 அன்றியும் நாம் அவருக்கு மேல் ஒரு சுரைக்கொடியை முளைப்பித்(து நிழலிடுமாறு செய்)தோம்.
ﯚﯛﯜﯝﯞﯟﯠ
37:147 மேலும், நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கதிகமானவர்களிடம் அனுப்பி வைத்தோம்.
ﯡﯢﯣﯤﯥ
37:148 ஆகவே அவர்கள் ஈமான் கொண்டார்கள். ஆகையால் அவர்களை ஒரு காலம்வரை சுகிக்; கச்செய்தோம்.
ﯦﯧﯨﯩﯪﯫ
37:149 (நபியே!) அவர்களிடம் கேளும்; உம் இறைவனுக்குப் பெண் மக்களையும் அவர்களுக்கு ஆண்மக்களையுமா (கற்பனை செய்கிறார்கள்) என்று.
ﯬﯭﯮﯯﯰﯱﯲ
37:150 அல்லது நாம் மலக்குகளைப் பெண்களாகவா படைத்தோம்? (அதற்கு) அவர்கள் சாட்சிகளா?
ﯳﯴﯵﯶﯷﯸ
37:151 "அறிந்து கொள்க! நிச்சயமாக இவர்கள் தங்கள் கற்பனையில் தான் கூறுகின்றனர்."
ﯹﯺﯻﯼﯽ
37:152 "அல்லாஹ் பிள்ளைகளைப் பெற்றான்" (என்று கூறுபவர்கள்) நிச்சயமாகப் பொய்யர்களே!
ﯾﯿﰀﰁﰂ
37:153 (அன்றியும், அல்லாஹ்) அவன் ஆண்மக்களை விட்டுப் பெண்மக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானா?
ﭑﭒﭓﭔﭕ
37:154 உங்களுக்கு என்ன (நேர்ந்து விட்டது)? எவ்வாறு நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்?
ﭖﭗﭘ
37:155 நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா?
ﭙﭚﭛﭜﭝ
37:156 அல்லது உங்களிடம் தெளிவான ஆதாரம் எதுவும் இருக்கிறதா?
ﭞﭟﭠﭡﭢﭣ
37:157 நீங்கள் உண்மையாளர்களாயிருப்பின், உங்கள் வேத (ஆதார)த்தைக் கொண்டு வாருங்கள்.
ﭤﭥﭦﭧﭨﭩﭪﭫﭬﭭﭮﭯ
37:158 அன்றியும் இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்குமிடையில் (வம்சாவளி) உறவை (கற்பனையாக) ஏற்படுத்துகின்றனர் ஆனால் ஜின்களும் (மறுமையில் இறைவன் முன்) நிச்சயமாகக் கொண்டுவரப்படுவார்கள் என்பதை அறிந்தேயிருக்கிறார்கள்.
ﭰﭱﭲﭳﭴ
37:159 எனவே, அவர்கள் இவ்வாறு வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்.
ﭵﭶﭷﭸﭹ
37:160 அந்தரங்க சுத்தியான அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர்த்து.
ﭺﭻﭼﭽ
37:161 ஆகையால், நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குபவையும்.
ﭾﭿﮀﮁﮂ
37:162 (எவரையும் அல்லாஹ்வுக்கு) எதிராக நீங்கள் வழிகெடுத்து விடமுடியாது.
ﮃﮄﮅﮆﮇﮈ
37:163 நரகைச் சென்றடைபவர்களைத் தவிர.
ﮉﮊﮋﮌﮍﮎﮏ
37:164 (மேலும் மலக்குகள் கூறுகிறார்கள்;) "குறிப்பிடப்பட்ட ஓர் இடம் இல்லாதவராக திடமாக எங்களில் எவருமில்லை."
ﮐﮑﮒﮓ
37:165 "நிச்சயமாக, நாங்கள் (அல்லாஹ்வின் ஏவலை எதிர்பார்த்து) அணிவகுத்தவர்களாகவே (நிற்கின்றோம்).
ﮔﮕﮖﮗ
37:166 "மேலும், நிச்சயமாக நாங்கள் (அல்லாஹ்வைத் துதி செய்து) தஸ்பீஹு செய்பவர்களாக இருக்கிறோம்."
ﮘﮙﮚﮛ
37:167 (நபியே! மக்காவாசிகள் முன்னர்) கூறிக்கொண்டிருந்தார்கள்;
ﮜﮝﮞﮟﮠﮡﮢ
37:168 "முன்னோர்களிடமிருந்து, (எங்களுக்கு இறை நினைவூட்டும்) ஏதேனும் ஒரு வேதத்தை நாங்கள் பெற்றிருந்தால் -
ﮣﮤﮥﮦﮧ
37:169 "அல்லாஹ்வுடைய தூய அடியார்களாக நாங்கள் நிச்சயமாக ஆகியிருப்போம்" என்று.
ﮨﮩﮪﮫﮬﮭ
37:170 ஆனால் (திருக் குர்ஆன் வந்தபோது) அவர்கள் அதை நிராகரிக்கிறார்கள் - (இதன் பலனை) விரைவிலேயே அவர்கள் அறிந்து கொள்வார்கள்!
ﮮﮯﮰﮱﯓﯔ
37:171 தூதர்களாகிய நம் அடியார்களிடம், முன்னரே திடமாக நம்வாக்குச் சென்றிருக்கிறது.
ﯕﯖﯗﯘ
37:172 (அதாவது) நிச்சயமாக அவர்கள் உதவி செய்யப்படுவார்கள் -
ﯙﯚﯛﯜﯝ
37:173 மேலும், நம் படைகளே நிச்சயமாக அவர்களே வெற்றி பெறுவார்கள்.
ﯞﯟﯠﯡﯢ
37:174 (ஆகவே, நபியே!) சிறிது காலம் வரையில் நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக!
ﯣﯤﯥﯦ
37:175 (அவர்களின் நிலை என்னவாகிறது என்பதை) நீர் கவனிப்பீராக! (தங்களுக்கு நேரப்போவதை) அவர்களும் கவனிப்பார்கள்.
ﯧﯨﯩ
37:176 நம்(மிடமிருந்து வரும்) வேதனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்?
ﯪﯫﯬﯭﯮﯯﯰ
37:177 (அவ்வேதனை) அவர்களுடைய முற்றத்தில் இறங்கும்போது அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட அவர்களின் விடியல் மிகக் கெட்டதாக இருக்கும்.
ﯱﯲﯳﯴﯵ
37:178 ஆகவே, சிறிது காலம் வரை நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக.
ﯶﯷﯸﯹ
37:179 (அவர்களின் நிலை என்னவாகிறது என்பதை) நீர் கவனிப்பீராக! (தங்களுக்கு நேரப் போவதை) அவர்களும் கவனிப்பார்கள்.
ﯺﯻﯼﯽﯾﯿﰀ
37:180 அவர்கள் வர்ணிப்பதை விட்டும், கண்ணியத்தின் இறைவனான உம்முடைய இறைவன் தூயவன்.
ﰁﰂﰃﰄ
37:181 மேலும் முர்ஸல்(களான அவன் தூதர்)கள் மீது ஸலாம் உண்டாவதாக.
ﰅﰆﰇﰈﰉ
37:182 வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீம் (இன்னும் புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்).

திருக்குர்ஆன்


Wednesday, September 9, 2026

Don't forget us in your sincere prayers