அல்-மாயிதா · 112/120
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-மாயிதா
إِذْ قَالَ الْحَوَارِيُّونَ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ هَلْ يَسْتَطِيعُ رَبُّكَ أَن يُنَزِّلَ عَلَيْنَا مَائِدَةً مِّنَ السَّمَاءِ ۖ قَالَ اتَّقُوا اللَّهَ إِن كُنتُم مُّؤْمِنِينَ ۝١١٢
Iz qaalal hawaariyyoona yaa `Eesab na Maryama hal yastatee`u Rabbuka ai yunaz zila `alinaa maaa`idatam minas samaaa`i qaalat taqul laaha in kuntum mu`mineen
📖 தமிழில்
"மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா?" என்று ஹவாரிய்யூன் (சீடர்)கள் கேட்டபோது அவர், "நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00
📜

மொழிபெயர்ப்பு — Tafsir

சொற்பொருள் விளக்கம்:

  • الحواريون (அல்-ஹவாரிய்யூன்): ஈசா (அலை) அவர்களின் நெருங்கிய தோழர்களும், அவர்களின் பிரச்சாரத்திற்கு உதவியவர்களும் ஆவர்.
  • மائِدَة (மாயிதா): உணவு வைக்கப்படும் மேசை அல்லது உணவு நிறைந்த தட்டு.
  • يَسْتَطِيعُ (யஸ்ததீஊ): முடியும், சக்தி பெற்றிருத்தல். இங்கே கேள்வி வடிவில் வந்துள்ளது.

விளக்கம்:

(நபியே!) ஹவாரிய்யூன் (சீடர்கள்) “மர்யமின் மகனே ஈசாவே! உமது இறைவன் எங்களுக்காக வானத்திலிருந்து ஓர் உணவு மேசையை இறக்க முடியுமா?” என்று கேட்ட சம்பவத்தை நினைவு கூர்வீராக. இந்தக் கேள்வி அவர்கள் இறைவனின் சக்தியை சந்தேகித்ததாலா அல்லது அறியாமையாலா என்று பார்க்கும்போது, அவர்கள் உண்மையான நம்பிக்கையாளர்களாக இருந்தும், அற்புதத்தைக் காணும் ஆவலில் இக்கேள்வியை எழுப்பினர். எனினும், இது போன்ற கேள்விகள் இறைவனின் கண்ணியத்திற்கு பொருந்தாத ஒன்றாகும். ஆகவே, ஈசா (அலை) அவர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறி, “நீங்கள் உண்மையான நம்பிக்கையாளர்களாக இருந்தால், இறைவனை அஞ்சுங்கள். இது போன்ற கேள்விகளைக் கேட்பதை விட்டும் விலகுங்கள். ஏனெனில், இறைவன் அனைத்தையும் செய்ய வல்லவன். அவனிடம் உணவைக் கேளுங்கள்; அவன் உங்களுக்கு வழங்குவான். ஆனால், இப்படி சோதனைக்குரிய கேள்விகளைக் கேட்பது உங்களுக்கு கேடாக முடியலாம்” என்று கூறினார்கள்.


பயன்கள்:

  1. இறைவனின் சக்தியை சந்தேகிக்கும் விதமான கேள்விகளைக் கேட்பது நம்பிக்கையாளர்களுக்கு தகாதது. இறைவன் அனைத்தையும் செய்ய வல்லவன் என்பதில் உறுதியான நம்பிக்கை கொள்ள வேண்டும்.
  2. நல்ல அறிவுரையாளர்கள், தவறான கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது, அன்புடனும் கனிவுடனும் சரியான வழியைச் சுட்டிக்காட்ட வேண்டும். ஈசா (அலை) அவர்கள் செய்தது போன்று.
  3. அற்புதங்களைக் காண்பதை விட, இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடப்பதே சிறந்தது. உண்மையான ஈமான் (நம்பிக்கை) என்பது அற்புதங்களைக் காண்பதில் இல்லை; மாறாக, இறைவனின் வார்த்தைகளை ஏற்று அவனை வணங்குவதில் உள்ளது.
  4. இறைவனிடம் தேவைகளைக் கேட்பதில் தவறில்லை; ஆனால், அது மரியாதையுடனும், பணிவுடனும் இருக்க வேண்டும். சோதனைக்குரிய முறையில் இருக்கக் கூடாது.


📜 வசனம் 110-114 — சூரா அல்-மாயிதா

110إِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ اذْكُرْ نِعْمَتِي عَلَيْكَ وَعَلَىٰ وَالِدَتِكَ إِذْ أَيَّدتُّكَ بِرُوحِ الْقُدُسِ تُكَلِّمُ النَّاسَ فِي الْمَهْدِ وَكَهْلًا ۖ وَإِذْ عَلَّمْتُكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَالتَّوْرَاةَ وَالْإِنجِيلَ ۖ وَإِذْ تَخْلُقُ مِنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ بِإِذْنِي فَتَنفُخُ فِيهَا فَتَكُونُ طَيْرًا بِإِذْنِي ۖ وَتُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ بِإِذْنِي ۖ وَإِذْ تُخْرِجُ الْمَوْتَىٰ بِإِذْنِي ۖ وَإِذْ كَفَفْتُ بَنِي إِسْرَائِيلَ عَنكَ إِذْ جِئْتَهُم بِالْبَيِّنَاتِ فَقَالَ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ إِنْ هَٰذَا إِلَّا سِحْرٌ مُّبِينٌ
அப்பொழுது அல்லாஹ் கூறுவான்; "மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும். பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து, நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்). இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரளையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்). இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்). அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை" என்று கூறியவேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.
111وَإِذْ أَوْحَيْتُ إِلَى الْحَوَارِيِّينَ أَنْ آمِنُوا بِي وَبِرَسُولِي قَالُوا آمَنَّا وَاشْهَدْ بِأَنَّنَا مُسْلِمُونَ
"என் மீதும் என் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்" என்று நான் ஹவாரிய்யூன் (சீடர்)களுக்கு தெரிவித்தபோது, அவர்கள், "நாங்கள் ஈமான் கொண்டோம், நிச்சயமாக நாங்கள் முஸ்லீம்கள் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்" என்று கூறினார்கள்.
112إِذْ قَالَ الْحَوَارِيُّونَ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ هَلْ يَسْتَطِيعُ رَبُّكَ أَن يُنَزِّلَ عَلَيْنَا مَائِدَةً مِّنَ السَّمَاءِ ۖ قَالَ اتَّقُوا اللَّهَ إِن كُنتُم مُّؤْمِنِينَ
"மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா?" என்று ஹவாரிய்யூன் (சீடர்)கள் கேட்டபோது அவர், "நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்.
113قَالُوا نُرِيدُ أَن نَّأْكُلَ مِنْهَا وَتَطْمَئِنَّ قُلُوبُنَا وَنَعْلَمَ أَن قَدْ صَدَقْتَنَا وَنَكُونَ عَلَيْهَا مِنَ الشَّاهِدِينَ
அதற்கவர்கள், "நாங்கள் அதிலிருந்து புசித்து எங்கள் இதயங்கள் அமைதி பெறவும், நிச்சயமாக நீங்கள் எங்களுக்கு உண்மையையே கூறினீர்கள் என்பதை அறிந்து கொள்ளவும், இன்னும் நாங்கள் அதைப்பற்றி சாட்சி கூறக் கூடியவர்களாகவும் இருக்க விரும்புகின்றோம்" என்று கூறினார்கள்.
114قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ اللَّهُمَّ رَبَّنَا أَنزِلْ عَلَيْنَا مَائِدَةً مِّنَ السَّمَاءِ تَكُونُ لَنَا عِيدًا لِّأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِّنكَ ۖ وَارْزُقْنَا وَأَنتَ خَيْرُ الرَّازِقِينَ
மர்யமுடைய மகன் ஈஸா, "அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக. அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக. நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்" என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
அல்-மாயிதாகுர்ஆன் பட்டியல்
120வசனம்
MedinanRevelation
112வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-மாயிதா 112

சூரா அல்-மாயிதா வசனம் 112 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : "மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத்…

சூரா வசனம் 112/120 — சூரா அல்-மாயிதா المائدة (Medinan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-மாயிதா கேள், சூரா அல்-மாயிதா மொழிபெயர்ப்பு, சூரா அல்-மாயிதா mp3, சூரா அல்-மாயிதா pdf. வசனம் 110–114. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers