அன்-நம்ல் · 47/93
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — அன்-நம்ல்
قَالُوا اطَّيَّرْنَا بِكَ وَبِمَن مَّعَكَ ۚ قَالَ طَائِرُكُمْ عِندَ اللَّهِ ۖ بَلْ أَنتُمْ قَوْمٌ تُفْتَنُونَ ۝٤٧
Qaalut taiyarnaa bika wa bimam ma`ak; qaala taaa`irukum `indal laahi bal antum qawmun tuftanoon
📖 தமிழில்
அதற்கவர்கள்; "உம்மையும், உம்முடன் இருப்பவர்களையும் நாங்கள் துர்ச்சகுணமாகக் காண்கிறோம்" என்று சொன்னார்கள்; அவர் கூறினார்; "உங்கள் துர்ச்சகுணம் அல்லாஹ்விடம் இருக்கிறது எனினும், நீங்கள் சோதனைக்குள்ளாக்கப்படும் சமூகத்தாராக இருக்கிறீர்கள்."
🎧 கேள்

📜 வசனம் 45-49 — அன்-நம்ல்

45وَلَقَدْ أَرْسَلْنَا إِلَىٰ ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا أَنِ اعْبُدُوا اللَّهَ فَإِذَا هُمْ فَرِيقَانِ يَخْتَصِمُونَ
தவிர, நாம் நிச்சயமாக ஸமூது சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை "நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்" (என்று போதிக்குமாறு) அனுப்பினோம்; ஆனால் அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து தம்மிடையே சச்சரவு செய்து கொள்ளலானார்கள்.
46قَالَ يَا قَوْمِ لِمَ تَسْتَعْجِلُونَ بِالسَّيِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ ۖ لَوْلَا تَسْتَغْفِرُونَ اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
(அப்போது அவர்) "என்னுடைய சமூகத்தாரே! நன்மைக்கு முன்னால், தீமைக்காக நீங்கள் ஏன் அவசரப்படுகிறீர்கள், நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு அல்லாஹ்விடம் தவ்பா (செய்து மன்னிப்புக்) கேட்கப்மாட்டீர்களா?" எனக் கூறினார்.
47قَالُوا اطَّيَّرْنَا بِكَ وَبِمَن مَّعَكَ ۚ قَالَ طَائِرُكُمْ عِندَ اللَّهِ ۖ بَلْ أَنتُمْ قَوْمٌ تُفْتَنُونَ
அதற்கவர்கள்; "உம்மையும், உம்முடன் இருப்பவர்களையும் நாங்கள் துர்ச்சகுணமாகக் காண்கிறோம்" என்று சொன்னார்கள்; அவர் கூறினார்; "உங்கள் துர்ச்சகுணம் அல்லாஹ்விடம் இருக்கிறது எனினும், நீங்கள் சோதனைக்குள்ளாக்கப்படும் சமூகத்தாராக இருக்கிறீர்கள்."
48وَكَانَ فِي الْمَدِينَةِ تِسْعَةُ رَهْطٍ يُفْسِدُونَ فِي الْأَرْضِ وَلَا يُصْلِحُونَ
இன்னும், அந்நகரில் ஒன்பது மனிதர்கள் இருந்தார்கள்; அவர்கள் நன்மை எதுவும் செய்யாது பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிந்தார்கள்.
49قَالُوا تَقَاسَمُوا بِاللَّهِ لَنُبَيِّتَنَّهُ وَأَهْلَهُ ثُمَّ لَنَقُولَنَّ لِوَلِيِّهِ مَا شَهِدْنَا مَهْلِكَ أَهْلِهِ وَإِنَّا لَصَادِقُونَ
அவர்கள்; "நாம் அவரையும் (ஸாலிஹையும்), அவருடைய குடும்பத்தாரையும் இரவோடிரவாக திட்டமாக அழித்து விடுவோம்; (இதனை யாரிடமும் சொல்வதில்லை) என்று நாம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கொள்வோமாக!" பிறகு அவருடைய வாரிஸ்தாரிடம் (அவர்கள் பழிக்குப்பழி வாங்க வந்தால்) "உங்கள் குடும்பத்தார் அழிக்கப்பட்டதை நாங்கள் காணவேயில்லை நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்கள்" என்று திட்டமாகக் கூறிவிடலாம் (எனச் சதி செய்தார்கள்).
அன்-நம்ல்குர்ஆன் பட்டியல்
93வசனம்
MeccanRevelation
47வசனம்

மொழிபெயர்ப்பு — அன்-நம்ல் 47

சூரா அன்-நம்ல் வசனம் 47 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : அதற்கவர்கள்; "உம்மையும், உம்முடன் இருப்பவர்களையும் நாங்கள் துர்ச்சகுணமாகக் காண்கிறோம்" என்று சொன்னார்கள்; அவர்…

சூரா வசனம் 47/93 — அன்-நம்ல் النمل (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: அன்-நம்ல் கேள், அன்-நம்ல் மொழிபெயர்ப்பு, அன்-நம்ல் mp3, அன்-நம்ல் pdf. வசனம் 45–49. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers