அல்-கஸஸ் · 45/88
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — அல்-கஸஸ்
وَلَٰكِنَّآ أَنشَأۡنَا قُرُونًا فَتَطَاوَلَ عَلَيۡهِمُ ٱلۡعُمُرُۚ وَمَا كُنتَ ثَاوِيًا فِيٓ أَهۡلِ مَدۡيَنَ تَتۡلُواْ عَلَيۡهِمۡ ءَايَٰتِنَا وَلَٰكِنَّا كُنَّا مُرۡسِلِينَ  ۝٤٥
Wa laakinnaa anshaanaa quroonan fatataawala `alaihimul `umur; wa maa kunta saawiyan feee ahli Madyana tatloo `alaihim Aayaatinaa wa laakinnaa kunnaa mursileen
📖 தமிழில்
எனினும் (அவர்களுக்குப் பின்) நாம் அநேக தலைமுறையினர்களை உண்டாக்கினோம்; அவர்கள்மீது காலங்கள் பல கடந்து விட்டன அன்றியும் நீர் மத்யன் வாசிகளிடம் வசிக்கவுமில்லை அவர்களுக்கு நம் வசனங்களை நீர் ஓதிக் காண்பிக்கவுமில்லை எனினும் நாம் தூதர்களை அனுப்பி வைப்போராகவே இருந்தோம்.
🎧 கேள்

📜 வசனம் 43-47 — அல்-கஸஸ்

43وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ مِنۢ بَعۡدِ مَآ أَهۡلَكۡنَا ٱلۡقُرُونَ ٱلۡأُولَىٰ بَصَآئِرَ لِلنَّاسِ وَهُدًى وَرَحۡمَةً لَّعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ 
இன்னும், முந்தைய தலைமுறையார்களை நாம் அழித்தபின் திடனாக மூஸாவுக்கு(த் தவ்றாத்) வேதத்தைக் கொடுத்தோம் - மனிதர் (சிந்தித்து) உபதேசம் பெறும் பொருட்டு அவர்களுக்கு ஞானப்பிரகாசங்களாகவும், நேர்வழி காட்டியாகவும் அருட் கொடையாகவும் (அது இருந்தது).
44وَمَا كُنتَ بِجَانِبِ ٱلۡغَرۡبِيِّ إِذۡ قَضَيۡنَآ إِلَىٰ مُوسَى ٱلۡأَمۡرَ وَمَا كُنتَ مِنَ ٱلشَّٰهِدِينَ 
மேலும், நாம் மூஸாவுக்குக் கட்டளைகளைக் கடமையாக்கிய சமயம் நீர் (தூர் மலைக்கு) மேற்குத் திசையில் இருக்கவில்லை (அந்நிகழ்வைப்) பார்ப்பவர்களில் ஒருவராகவும் நீர் இருக்கவில்லை.
45وَلَٰكِنَّآ أَنشَأۡنَا قُرُونًا فَتَطَاوَلَ عَلَيۡهِمُ ٱلۡعُمُرُۚ وَمَا كُنتَ ثَاوِيًا فِيٓ أَهۡلِ مَدۡيَنَ تَتۡلُواْ عَلَيۡهِمۡ ءَايَٰتِنَا وَلَٰكِنَّا كُنَّا مُرۡسِلِينَ 
எனினும் (அவர்களுக்குப் பின்) நாம் அநேக தலைமுறையினர்களை உண்டாக்கினோம்; அவர்கள்மீது காலங்கள் பல கடந்து விட்டன அன்றியும் நீர் மத்யன் வாசிகளிடம் வசிக்கவுமில்லை அவர்களுக்கு நம் வசனங்களை நீர் ஓதிக் காண்பிக்கவுமில்லை எனினும் நாம் தூதர்களை அனுப்பி வைப்போராகவே இருந்தோம்.
46وَمَا كُنتَ بِجَانِبِ ٱلطُّورِ إِذۡ نَادَيۡنَا وَلَٰكِن رَّحۡمَةً مِّن رَّبِّكَ لِتُنذِرَ قَوۡمًا مَّآ أَتَىٰهُم مِّن نَّذِيرٍ مِّن قَبۡلِكَ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ 
இன்னும் நாம் (மூஸாவை) அழைத்தபோது, நீர் தூர் மலையின் பக்கத்தில் இருக்கவுமில்லை எனினும் எந்த மக்களுக்கு, உமக்கு முன்னால் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் அனுப்பப்படவில்லையோ, அவர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு அவர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காக உமக்கு உம் இறைவனிடமிருந்து அருட்கொடையாக (இவைக் கூறப்படுகிறது).
47وَلَوۡلَآ أَن تُصِيبَهُم مُّصِيبَةُۢ بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡ فَيَقُولُواْ رَبَّنَا لَوۡلَآ أَرۡسَلۡتَ إِلَيۡنَا رَسُولًا فَنَتَّبِعَ ءَايَٰتِكَ وَنَكُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ 
அவர்களுடைய கைகள் செய்து முற்படுத்திய(தீ)வினை காரணமாக, அவர்களுக்கு ஏதேனும் சோதனை வரும்போது அவர்கள்; "எங்கள் இறைவா! நீ எங்களுக்குத் தூதர் ஒருவரை அனுப்பிவைத்திருக்க வேண்டாமா? அப்போது நாங்கள் உன் வசனங்களை பின்பற்றி நாங்களும் முஃமின்களில் உள்ளவர்களாகியிருப்போமே!" என்று கூறாதிருக்கும் பொருட்டும் (உம்மை அவர்களிடையே தூதராக அனுப்பினோம்).
அல்-கஸஸ்குர்ஆன் பட்டியல்
88வசனம்
MeccanRevelation
45வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-கஸஸ் 45

சூரா வசனம் 45/88 — அல்-கஸஸ் القصص (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: அல்-கஸஸ் கேள், அல்-கஸஸ் மொழிபெயர்ப்பு, அல்-கஸஸ் mp3, அல்-கஸஸ் pdf. வசனம் 43–47. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers