அத்-தௌபா · 23/129
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அத்-தௌபா
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا آبَاءَكُمْ وَإِخْوَانَكُمْ أَوْلِيَاءَ إِنِ اسْتَحَبُّوا الْكُفْرَ عَلَى الْإِيمَانِ ۚ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ ۝٢٣
Yaaa aiyuhal lazeena aamanoo laa tattakhizooo aabaaa `akum wa ikhwaanakum awliyaaa`a inis tahabbul kufra `alal eemaan; wa mai yatawal lahum minkum fa ulaaa`ika humuz zaalimoon
📖 தமிழில்
ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00
📜

மொழிபெயர்ப்பு — Tafsir

சொற்பொருள் விளக்கம்:

  • أَوْلِيَاء: நெருங்கிய நண்பர்கள், பாதுகாவலர்கள், இரகசியங்களைப் பகிர்ந்துகொள்ளும் உற்ற தோழர்கள்.
  • اسْتَحَبُّوا: விரும்பினர், தேர்ந்தெடுத்தனர்.
  • الظَّالِمُونَ: தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக்கொண்டவர்கள்.

விளக்கம்:

இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் தந்தையரும் சகோதரர்களும் இறைமறுப்பை இறைநம்பிக்கையை விட விரும்பி, அதையே தேர்ந்தெடுத்து, இஸ்லாத்திற்கு எதிராக நிற்கும்போது, அவர்களை உங்கள் நெருங்கிய நண்பர்களாகவும், இரகசியங்களைப் பகிர்ந்துகொள்ளும் தோழர்களாகவும், ஆலோசனை கேட்கும் பாதுகாவலர்களாகவும் ஆக்கிக்கொள்ளாதீர்கள். ஏனெனில், அவர்கள் இறைமறுப்பில் நிலைத்திருந்து, உங்களை இறைநம்பிக்கையிலிருந்து தடுத்து, இறைக்கட்டளைகளை நிறைவேற்றாமல் தடுப்பார்கள்.

உங்களில் யாரேனும் இத்தகைய இறைமறுப்பாளர்களை நண்பர்களாக ஆக்கிக்கொண்டு, அவர்களிடம் அன்பும் பாசமும் காட்டி, அவர்களுக்கு ஆதரவளித்தால், அவர்கள் இறைவனுக்கு மாறு செய்தவர்களாவார்கள். மேலும், அவர்கள் தங்களுக்குத் தாங்களே பெரும் அநீதி இழைத்துக்கொண்டவர்கள் ஆவார்கள். ஏனெனில், அவர்கள் இறைவனின் கோபத்திற்கு ஆளாகி, நரகத்திற்கு வழிவகுத்துக்கொள்கிறார்கள்.

பயன்பாடுகள்:

  • இறைநம்பிக்கை என்பது அனைத்து உறவுகளுக்கும் மேலானது; இறைமறுப்பில் உள்ள உறவினர்களை விட இறைநம்பிக்கையே முதன்மை.
  • உறவினர்கள் இறைமறுப்பில் இருந்தாலும் அவர்களுக்கு நன்மையை விரும்ப வேண்டும், ஆனால் அவர்களுடன் மத விஷயங்களில் நெருக்கமான தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது.
  • இறைவனின் கட்டளைகளுக்கு மாறு செய்வது தனக்குத்தானே அநீதி இழைப்பதாகும்; இது ஒவ்வொரு முஸ்லிமும் உணர வேண்டிய முக்கியமான பாடம்.
  • உண்மையான நட்பும் ஆதரவும் இறைநம்பிக்கையின் அடிப்படையிலேயே அமைய வேண்டும்; உலக உறவுகள் அதற்கு தடையாக இருக்கக் கூடாது.


📜 வசனம் 21-25 — சூரா அத்-தௌபா

21يُبَشِّرُهُمْ رَبُّهُم بِرَحْمَةٍ مِّنْهُ وَرِضْوَانٍ وَجَنَّاتٍ لَّهُمْ فِيهَا نَعِيمٌ مُّقِيمٌ
அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் தன்னுடைய கிருபையையும், திருப்பொருத்தத்தையும் (அளித்து) சுவனபதிகளையும் (தருவதாக) நன்மாராயம் கூறுகிறான்; அங்கு அவர்களுக்கு நிரந்தரமான பாக்கியங்களுண்டு.
22خَالِدِينَ فِيهَا أَبَدًا ۚ إِنَّ اللَّهَ عِندَهُ أَجْرٌ عَظِيمٌ
அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அவர்களுக்கு) மகத்தான (நற்) கூலி உண்டு.
23يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا آبَاءَكُمْ وَإِخْوَانَكُمْ أَوْلِيَاءَ إِنِ اسْتَحَبُّوا الْكُفْرَ عَلَى الْإِيمَانِ ۚ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ
ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
24قُلْ إِن كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُم مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّىٰ يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ
(நபியே!) நீர் கூறும்; உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.
25لَقَدْ نَصَرَكُمُ اللَّهُ فِي مَوَاطِنَ كَثِيرَةٍ ۙ وَيَوْمَ حُنَيْنٍ ۙ إِذْ أَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنكُمْ شَيْئًا وَضَاقَتْ عَلَيْكُمُ الْأَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّيْتُم مُّدْبِرِينَ
நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் பல போர்க்களங்களில் உதவி செய்திருக்கின்றான்; (நினைவு கூறுங்கள்;) ஆனால் ஹுனைன் (போர் நடந்த) அன்று. உங்களைப் பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்த உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு எவ்விதப் பலனும் அளிக்கவில்லை, (மிகவும்) பரந்த பூமி உங்களுக்கு (அப்போது) சுருக்கமாகிவிட்டது. அன்றியும் நீங்கள் புறங்காட்டிப் பின்வாங்கலானீர்கள்.
அத்-தௌபாகுர்ஆன் பட்டியல்
129வசனம்
MedinanRevelation
23வசனம்

மொழிபெயர்ப்பு — அத்-தௌபா 23

சூரா அத்-தௌபா வசனம் 23 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால்,…

சூரா வசனம் 23/129 — சூரா அத்-தௌபா التوبة (Medinan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அத்-தௌபா கேள், சூரா அத்-தௌபா மொழிபெயர்ப்பு, சூரா அத்-தௌபா mp3, சூரா அத்-தௌபா pdf. வசனம் 21–25. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers