அத்-தக்வீர் சூரா அரபி மற்றும் தமிழ்

அத்-தக்வீர் சூராவை முழுமையான தமிழ் மொழிபெயர்ப்புடன் படியுங்கள். அரபி உரை மற்றும் ஒலி திலாவத்துடன் வசனம் வசனமாக. (29 வசனம் — مكية). அத்-தக்வீர் கேள், அத்-தக்வீர் மொழிபெயர்ப்பு, அத்-தக்வீர் mp3, அத்-தக்வீர் pdf.

அத்-தக்வீர் சூரா படி மற்றும் கேள்

🎧 வசனம்
M Mishary Rashid Alafasy
M Mahmoud Khalil Al-Husary
A Abdurrahman As-Sudais
M Mohamed Siddiq Al-Minshawi
A Abdul Basit Abdul Samad
A Ali Al-Hudhaify
A Ahmed ibn Ali al-Ajamy
A Abu Bakr Ash-Shaatree
M Muhammad Ayyoub
A Abdullah Basfar
A Abdullah Al-Juhani
M Maher Al Muaiqly
x1
إِذَا الشَّمْسُ كُوِّرَتْ ۝١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 1
சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது
وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ ۝٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 2
நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-
وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ ۝٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 3
மலைகள் பெயர்க்கப்படும் போது-
وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ ۝٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 4
சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-
وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ ۝٥
📖 மொழிபெயர்ப்பு வசனம் 5
காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-
وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ ۝٦
📖 மொழிபெயர்ப்பு வசனம் 6
கடல்கள் தீ மூட்டப்படும்போது-
وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ ۝٧
📖 மொழிபெயர்ப்பு வசனம் 7
உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-
وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ ۝٨
📖 மொழிபெயர்ப்பு வசனம் 8
உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-
بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ ۝٩
📖 மொழிபெயர்ப்பு வசனம் 9
"எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று-
وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ ۝١٠
📖 மொழிபெயர்ப்பு வசனம் 10
பட்டோலைகள் விரிக்கப்படும் போது-
وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ ۝١١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 11
வானம் அகற்றப்படும் போது-
وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ ۝١٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 12
நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-
وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ ۝١٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 13
சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-
عَلِمَتْ نَفْسٌ مَّا أَحْضَرَتْ ۝١٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 14
ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.
فَلَا أُقْسِمُ بِالْخُنَّسِ ۝١٥
📖 மொழிபெயர்ப்பு வசனம் 15
எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-
الْجَوَارِ الْكُنَّسِ ۝١٦
📖 மொழிபெயர்ப்பு வசனம் 16
முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),
وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ ۝١٧
📖 மொழிபெயர்ப்பு வசனம் 17
பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,
وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ ۝١٨
📖 மொழிபெயர்ப்பு வசனம் 18
மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.
إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ ۝١٩
📖 மொழிபெயர்ப்பு வசனம் 19
நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும்.
ذِي قُوَّةٍ عِندَ ذِي الْعَرْشِ مَكِينٍ ۝٢٠
📖 மொழிபெயர்ப்பு வசனம் 20
(அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.
مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ ۝٢١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 21
(வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.
وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ ۝٢٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 22
மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.
وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ ۝٢٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 23
அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.
وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ ۝٢٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 24
மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.
وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَّجِيمٍ ۝٢٥
📖 மொழிபெயர்ப்பு வசனம் 25
அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.
فَأَيْنَ تَذْهَبُونَ ۝٢٦
📖 மொழிபெயர்ப்பு வசனம் 26
எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ ۝٢٧
📖 மொழிபெயர்ப்பு வசனம் 27
இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.
لِمَن شَاءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ ۝٢٨
📖 மொழிபெயர்ப்பு வசனம் 28
உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).
وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ ۝٢٩
📖 மொழிபெயர்ப்பு வசனம் 29
ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.
← 80 அத்-தக்வீர் (81/114) 82 →
படிக்க அத்-தக்வீர் சூரா தமிழ் மொழிபெயர்ப்பு – வசனங்கள் மற்றும் ஒலி

81التكوير At-Takwir 📚 29 வசனம் مكية

வசனம் வசனமாக – அத்-தக்வீர் சூரா — 29 வசனம்




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers