அல்-மாயிதா · 71/120
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — அல்-மாயிதா
وَحَسِبُوا أَلَّا تَكُونَ فِتْنَةٌ فَعَمُوا وَصَمُّوا ثُمَّ تَابَ اللَّهُ عَلَيْهِمْ ثُمَّ عَمُوا وَصَمُّوا كَثِيرٌ مِّنْهُمْ ۚ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ ۝٧١
Wa hasibooo allaa takoona fitnaun fa`amoo wa sammoo summa taabal laahu `alaihim summa `amoo wa sammoo kaseerum minhum; wallaahu baseerum bimaa ya`maloon
📖 தமிழில்
(இதனால் தங்களுக்கு) எந்தவிதமான வேதனையும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர். ஆகவே அவர்கள் (உண்மையுணர முடியாக்) குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆகிவிட்டார்கள்;. இதற்குப் பிறகும் அல்லாஹ் அவர்களை மன்னித்தான்;. எனினும் அவர்களில் பெரும்பாலோர் குருடர்களாகபும் செவிடர்களாகவுமே இருந்தனர். அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் (நன்கு) உற்று நோக்கியவனாக இருக்கின்றான்.
🎧 கேள்

📜 வசனம் 69-73 — அல்-மாயிதா

69إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَادُوا وَالصَّابِئُونَ وَالنَّصَارَىٰ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
70لَقَدْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ وَأَرْسَلْنَا إِلَيْهِمْ رُسُلًا ۖ كُلَّمَا جَاءَهُمْ رَسُولٌ بِمَا لَا تَهْوَىٰ أَنفُسُهُمْ فَرِيقًا كَذَّبُوا وَفَرِيقًا يَقْتُلُونَ
நாம் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் உறுதிமொழி வாங்கினோம், அவர்களிடம் தூதர்களையும் அனுப்பி வைத்தோம்;. எனினும் அவர்கள் மனம் விரும்பாதவற்றை (கட்டளைகளை நம்) தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம், (தூதர்களில்) ஒரு பிரிவாரைப் பொய்ப்பித்தும்; இன்னும் ஒரு பிரிவாரைக் கொலை செய்தும் வந்தார்கள்.
71وَحَسِبُوا أَلَّا تَكُونَ فِتْنَةٌ فَعَمُوا وَصَمُّوا ثُمَّ تَابَ اللَّهُ عَلَيْهِمْ ثُمَّ عَمُوا وَصَمُّوا كَثِيرٌ مِّنْهُمْ ۚ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ
(இதனால் தங்களுக்கு) எந்தவிதமான வேதனையும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர். ஆகவே அவர்கள் (உண்மையுணர முடியாக்) குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆகிவிட்டார்கள்;. இதற்குப் பிறகும் அல்லாஹ் அவர்களை மன்னித்தான்;. எனினும் அவர்களில் பெரும்பாலோர் குருடர்களாகபும் செவிடர்களாகவுமே இருந்தனர். அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் (நன்கு) உற்று நோக்கியவனாக இருக்கின்றான்.
72لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ ۖ وَقَالَ الْمَسِيحُ يَا بَنِي إِسْرَائِيلَ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ ۖ إِنَّهُ مَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ ۖ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ
"நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்" என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிடடார்கள்;. ஆனால் மஸீஹ் கூறினார்; "இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்" என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.
73لَّقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ ثَالِثُ ثَلَاثَةٍ ۘ وَمَا مِنْ إِلَٰهٍ إِلَّا إِلَٰهٌ وَاحِدٌ ۚ وَإِن لَّمْ يَنتَهُوا عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَّ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ
நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்;. ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும்.
அல்-மாயிதாகுர்ஆன் பட்டியல்
120வசனம்
MedinanRevelation
71வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-மாயிதா 71

சூரா அல்-மாயிதா வசனம் 71 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : (இதனால் தங்களுக்கு) எந்தவிதமான வேதனையும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர். ஆகவே…

சூரா வசனம் 71/120 — அல்-மாயிதா المائدة (Medinan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: அல்-மாயிதா கேள், அல்-மாயிதா மொழிபெயர்ப்பு, அல்-மாயிதா mp3, அல்-மாயிதா pdf. வசனம் 69–73. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers