Allazeena yanqudoona `ahdal laahi mim ba`di meesaaqihee wa yaqt`oona maaa amaral laahu biheee ai yoosala wa yufsidoona fil ard; ulaaa`ika hum khaasirron
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
இ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள்.
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
അല്ലാഹുവിന്റെഉത്തരവ് അവന് ശക്തിയുക്തം നല്കിയതിന് ശേഷം അതിന് വിപരീതം പ്രവര്ത്തിക്കുകയും അല്ലാഹു കൂട്ടിചേര്ക്കുവാന് കല്പിച്ചതിനെ മുറിച്ച് വേര്പെടുത്തുകയും ഭൂമിയില് കുഴപ്പമുണ്ടാക്കുകയും ചെയ്യുന്നവരത്രെ അവര് (അധര്മ്മകാരികള്). അവര് തന്നെയാകുന്നു നഷ്ടക്കാര്.
அல்லாஹ்வின் உடன்படிக்கையை முறித்து விடுகிறார்கள் என்றால், அவன் மனிதர்களிடம் எடுத்த உறுதிமொழியை மீறுகிறார்கள். அல்லாஹ் தனது ஏகத்துவத்தையும், வழிபாட்டையும், தன் தூதர்களுக்குக் கீழ்ப்படிவதையும் மனிதர்களிடம் உறுதிமொழியாகப் பெற்றான். இதனை அவன் தூதர்களை அனுப்பியும், வேதங்களை இறக்கியும் மேலும் உறுதிப்படுத்தினான். இவர்கள் அந்த உறுதிமொழியை மீறி, அல்லாஹ் இணைக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டவற்றை – அதாவது இறைநம்பிக்கை, தூதர்கள் மீதான நம்பிக்கை, உறவினர்களைச் சேர்த்து வைத்தல் போன்றவற்றை – துண்டித்து விடுகிறார்கள். மேலும், பாவச் செயல்கள் மூலமும், மக்களை நேர்வழியிலிருந்து தடுப்பதன் மூலமும் பூமியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். இத்தகையவர்களே உண்மையான நஷ்டமடைந்தவர்கள் – இம்மையிலும் மறுமையிலும் தங்கள் பங்கை இழந்தவர்கள்.
பயன்பாடுகள் (சில படிப்பினைகள்):
அல்லாஹ்வின் உடன்படிக்கையைக் காப்பது இறைநம்பிக்கையின் அடையாளம்; அதை மீறுவது நஷ்டத்திற்குக் காரணம்.
உறவினர்களைச் சேர்த்து வைப்பது (சிலா-இரஹிம்) அல்லாஹ்வின் கட்டளை; அதைத் துண்டிப்பது பெரும் பாவம்.
பூமியில் குழப்பம் ஏற்படுத்துவது – எந்த வடிவத்திலும் – இறைவனுக்குப் பிடிக்காத செயல்.
உண்மையான நஷ்டம் என்பது இம்மை வாழ்க்கையின் இன்பங்களை இழப்பது மட்டுமல்ல; மறுமையின் வெற்றியை இழப்பதே மிகப்பெரிய நஷ்டம்.
முஸ்லிம்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களாகவும், சமூகத்தில் ஒற்றுமையை ஏற்படுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும்.
இ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள்.
(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக! சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு, அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் "இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன, இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு, மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள்.
நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, "இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?" என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன் மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.
இ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள்.
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கின்றான்.
சூரா அல்-பகரா வசனம் 27 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : இ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர்.…
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.