அல்-அஹ்காஃப் · 23/35
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-அஹ்காஃப்
قَالَ إِنَّمَا الْعِلْمُ عِندَ اللَّهِ وَأُبَلِّغُكُم مَّا أُرْسِلْتُ بِهِ وَلَٰكِنِّي أَرَاكُمْ قَوْمًا تَجْهَلُونَ ۝٢٣
Qaala innamal `ilmu indal laahi wa uballighukum maaa uriltu bihee wa laakinneee araakum qawman tajhaloon
📖 தமிழில்
அதற்கவர்; "(அது எப்பொழுது வரும் என்ற) ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடம் தான் இருக்கிறது மேலும், நான் எதைக் கொண்டு உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறேனோ அதையே நான் உங்களுக்குச் சேர்ப்பித்து, எடுத்துரைக்கின்றேன் - எனினும் நான் உங்களை அறிவில்லாத சமூகத்தாராகவே காண்கிறேன்" என்று கூறினார்.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00
📜

மொழிபெயர்ப்பு — Tafsir

சொற்பொருள் விளக்கம்:

  • إِنَّمَا الْعِلْمُ عِندَ اللَّهِ – (இதைப் பற்றிய) அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது.
  • وَأُبَلِّغُكُم – நான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன்.
  • تَجْهَلُونَ – நீங்கள் அறியாமை செய்கிறீர்கள்.

விளக்கம்:

நபி ஹூத் (அலைஹிஸ்ஸலாம்) தம் சமூகத்தினரிடம் கூறினார்கள்: "வேதனை எப்போது வரும் என்பது பற்றிய அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. அதைப் பற்றி எனக்கு எந்த அறிவும் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராக மட்டுமே இருக்கிறேன். அவன் எனக்கு அனுப்பிய செய்திகளை உங்களுக்கு எடுத்துரைப்பதே எனது கடமையாகும். வேதனையை அவசரமாகக் கேட்டு, அல்லாஹ்வின் மீது துணிவு காட்டுவதில் நீங்கள் அறியாமையுள்ள சமூகமாகவே இருக்கிறீர்கள். உங்களுக்கு நன்மை தருவதை விட்டுவிட்டு, உங்களுக்குத் தீமை தருவதையே நாடுகிறீர்கள்."

பயன்கள்:

  1. எதிர்கால நிகழ்வுகள் பற்றிய முழுமையான அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது; இறைத்தூதர்களுக்கும் அது தெரியாது என்பதை இது காட்டுகிறது.
  2. இறைத்தூதர்களின் பணி அல்லாஹ்வின் செய்தியை எடுத்துரைப்பதே ஆகும்; அவர்கள் மீது கட்டாயப்படுத்தப்படாத விஷயங்களில் அவர்கள் பதில் சொல்ல வேண்டியதில்லை.
  3. வேதனையை அவசரமாகக் கோருவது அறியாமையின் அறிகுறியாகும்; ஒருவன் தனக்கு நன்மை தருவதை அறிந்து அதைப் பின்பற்ற வேண்டும்.
  4. அறிவாளிகள் பொறுமையுடன் இருப்பார்கள்; அல்லாஹ்வின் கட்டளை வரும் வரை காத்திருப்பார்கள்.


📜 வசனம் 21-25 — சூரா அல்-அஹ்காஃப்

21۞ وَاذْكُرْ أَخَا عَادٍ إِذْ أَنذَرَ قَوْمَهُ بِالْأَحْقَافِ وَقَدْ خَلَتِ النُّذُرُ مِن بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ أَلَّا تَعْبُدُوا إِلَّا اللَّهَ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
மேலும் 'ஆது' (சமூகத்தாரின்) சகோதரர் (ஹூது) திடமாகவே, அவருக்கு முன்னரும், அவருக்குப் பின்னரும் எச்சரிக்கை செய்பவர்கள் (இறை தூதர்கள்) வந்திருக்கிறார்கள் - (அவர்) தம் சமூகத்தாரை, "அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) நீங்கள் வணங்காதீர்கள் - நிச்சயமாக ஒரு கடுமையான நாளின் வேதனை உங்களுக்கு வரும் என்று நான் பயப்படுகிறேன்" என்று மணல் குன்றுகளிலிருந்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்தவை (நபியே!) நீர் நினைவு கூர்வீராக.
22قَالُوا أَجِئْتَنَا لِتَأْفِكَنَا عَنْ آلِهَتِنَا فَأْتِنَا بِمَا تَعِدُنَا إِن كُنتَ مِنَ الصَّادِقِينَ
அதற்கு அவர்கள்; "எங்களுடைய தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பி விட நீர் எங்களிடம் வந்தீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் எதைக் கொண்டு எங்களை பயமுறுத்துகிறீரோ அ(வ் வேதனையான)தைக் கொண்டு வாரும்" என்று கூறினார்கள்.
23قَالَ إِنَّمَا الْعِلْمُ عِندَ اللَّهِ وَأُبَلِّغُكُم مَّا أُرْسِلْتُ بِهِ وَلَٰكِنِّي أَرَاكُمْ قَوْمًا تَجْهَلُونَ
அதற்கவர்; "(அது எப்பொழுது வரும் என்ற) ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடம் தான் இருக்கிறது மேலும், நான் எதைக் கொண்டு உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறேனோ அதையே நான் உங்களுக்குச் சேர்ப்பித்து, எடுத்துரைக்கின்றேன் - எனினும் நான் உங்களை அறிவில்லாத சமூகத்தாராகவே காண்கிறேன்" என்று கூறினார்.
24فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُّسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا هَٰذَا عَارِضٌ مُّمْطِرُنَا ۚ بَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُم بِهِ ۖ رِيحٌ فِيهَا عَذَابٌ أَلِيمٌ
ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், "இது நமக்கு மழையைப் பொழியும் மேகமாகும்" எனக் கூறினார்கள்; "அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அதுதான்; (இது கொடுங்)காற்று - இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது
25تُدَمِّرُ كُلَّ شَيْءٍ بِأَمْرِ رَبِّهَا فَأَصْبَحُوا لَا يُرَىٰ إِلَّا مَسَاكِنُهُمْ ۚ كَذَٰلِكَ نَجْزِي الْقَوْمَ الْمُجْرِمِينَ
"அது தன் இறைவனின் கட்டளையினால் எல்லாப் பொருட்களையும் அழித்துவிடும்" (என்று கூறப்பட்டது). பொழுது விடிந்த போது, (அழிக்கப்பட்ட அவர்களுடைய) வீடுகளைத் தவிர (வேறு) எதுவும் காணப்படவில்லை - இவ்வாறே குற்றம் செய்யும் சமூகத்திற்கு நாம் கூலி கொடுக்கிறோம்.
அல்-அஹ்காஃப்குர்ஆன் பட்டியல்
35வசனம்
MeccanRevelation
23வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-அஹ்காஃப் 23

சூரா அல்-அஹ்காஃப் வசனம் 23 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : அதற்கவர்; "(அது எப்பொழுது வரும் என்ற) ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடம் தான் இருக்கிறது…

சூரா வசனம் 23/35 — சூரா அல்-அஹ்காஃப் الأحقاف (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-அஹ்காஃப் கேள், சூரா அல்-அஹ்காஃப் மொழிபெயர்ப்பு, சூரா அல்-அஹ்காஃப் mp3, சூரா அல்-அஹ்காஃப் pdf. வசனம் 21–25. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers