அவ்விரு பெண்களில் ஒருவர் கூறினார்; "என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்; நீங்கள் கூலிக்கு அமர்த்துபவர்களில் நிச்சயமாக இவர் மிகவும் மேலானவர் பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்."
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
ആ രണ്ടുസ്ത്രീകളിലൊരാള് പറഞ്ഞു: എന്റെ പിതാവേ, ഇദ്ദേഹത്തെ താങ്കള് കൂലിക്കാരനായി നിര്ത്തുക. തീര്ച്ചയായും താങ്കള് കൂലിക്കാരായി എടുക്കുന്നവരില് ഏറ്റവും ഉത്തമന് ശക്തനും വിശ്വസ്തനുമായിട്ടുള്ളവനത്രെ.
மூத்த பெண் (மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நீர் புகட்டிய இரு பெண்களில் ஒருவர்) தனது தந்தையிடம் (ஷுஐப் அலைஹிஸ்ஸலாம்) கூறினார்: "தந்தையே! இவரை நமது ஆடுகளை மேய்ப்பதற்காகக் கூலிக்கு அமர்த்திக்கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் கூலிக்கு அமர்த்துபவர்களில் மிகச் சிறந்தவர், பணியைச் செய்வதற்கு வலிமையும் ஆற்றலும் உடையவராகவும், ஒப்படைக்கப்பட்ட பொறுப்பைப் பாதுகாக்கும் நம்பிக்கைக்குரியவராகவும் இருப்பவரே ஆவார்."
இந்த வார்த்தைகள் மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குணநலன்களைப் பறைசாற்றுவதாக அமைந்தன. அவர் தண்ணீர் இறைத்துக் கொடுத்த உதவியின் மூலம் வலிமையையும், அந்தப் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொண்டதன் மூலம் நம்பிக்கைக்குரிய தன்மையையும் வெளிப்படுத்தினார். எனவே, அந்தப் பெண் தனது தந்தைக்கு இவரை வேலைக்கு அமர்த்துவதே சிறந்தது என்று ஆலோசனை கூறினார்.
பயன்கள் (படிப்பினைகள்):
ஒருவரை வேலைக்கு அமர்த்தும்போது அவரது திறமை (வலிமை) மற்றும் நேர்மை (அமானத்) ஆகிய இரு குணங்களையும் கவனிக்க வேண்டும். இவை இரண்டும் இணைந்திருந்தால் அவரே சிறந்தவர்.
ஒரு பெண் தனது தந்தைக்கு நல்ல ஆலோசனை கூறுவது முற்றிலும் அனுமதிக்கப்பட்டதும், பாராட்டத்தக்கதுமான செயலாகும்.
மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது வலிமையையும் நேர்மையையும் வெளிப்படுத்தியதன் மூலம், ஒரு முஸ்லிம் தனது குணங்களால் மற்றவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
தகுதியானவரை அடையாளம் கண்டு அவருக்கு வாய்ப்பு வழங்குவது சமூகத்தின் நன்மைக்கு வழிவகுக்கும்.
இந்தச் சம்பவம், நேர்மையும் உழைப்பும் எவ்வாறு ஒருவருக்கு கண்ணியமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அவ்விரு பெண்களில் ஒருவர் கூறினார்; "என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்; நீங்கள் கூலிக்கு அமர்த்துபவர்களில் நிச்சயமாக இவர் மிகவும் மேலானவர் பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்."
ஆகையால், அவ்விருவருக்குமாக அவர் (ஆட்டு மந்தைக்குத்) தண்ணீர் புகட்டினார்; பிறகு அவர் (ஒரு மர) நிழலில் ஒதுங்கி; "என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்" என்று கூறினார்.
(சிறிது நேரத்திற்குப்) பிறகு அவ்விரு பெண்களில் ஒருவர் நாணத்துடன் நடந்து மூஸாவின் முன் வந்து "எங்களுக்காக நீங்கள் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்" என்று கூறினார்; இவ்வாறாக மூஸா அவரிடம் வந்தபோது தம் வரலாற்றை எடுத்துச் சொன்னார்; அதற்கவர்; "பயப்படாதீர்! அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீர் தப்பித்துவிட்டீர்" என்று கூறினார்.
அவ்விரு பெண்களில் ஒருவர் கூறினார்; "என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்; நீங்கள் கூலிக்கு அமர்த்துபவர்களில் நிச்சயமாக இவர் மிகவும் மேலானவர் பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்."
(அப்போது அவர் மூஸாவிடம்) கூறினார்; "நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன் - ஆயினும், நீர் பத்து (ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உம் விருப்பம்; நான் உமக்கு சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ், என்னை நல்லவர்களில் உள்ளவராக காண்பீர்."
(அதற்கு மூஸா) கூறினார் "இதுவே எனக்கும் உங்களுக்கிமிடையே (ஒப்பந்தமாகும்), இவ்விரு தவணைகளில் நான் எதை நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை - நாம் பேசிக் கொள்வதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான்.
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.