அல்-பலத் சூரா அரபி மற்றும் தமிழ்
அல்-பலத் சூராவை முழுமையான தமிழ் மொழிபெயர்ப்புடன் படியுங்கள். அரபி உரை மற்றும் ஒலி திலாவத்துடன் வசனம் வசனமாக. (20 வசனம் — مكية). அல்-பலத் கேள், அல்-பலத் மொழிபெயர்ப்பு, அல்-பலத் mp3, அல்-பலத் pdf.அல்-பலத் சூரா படி மற்றும் கேள்
🎧 வசனம்
M
Mishary Rashid Alafasy
✓
Mishary Rashid Alafasy
✓
M
Mahmoud Khalil Al-Husary
✓
Mahmoud Khalil Al-Husary
✓
A
Abdurrahman As-Sudais
✓
Abdurrahman As-Sudais
✓
M
Mohamed Siddiq Al-Minshawi
✓
Mohamed Siddiq Al-Minshawi
✓
A
Abdul Basit Abdul Samad
✓
Abdul Basit Abdul Samad
✓
A
Ali Al-Hudhaify
✓
Ali Al-Hudhaify
✓
A
Ahmed ibn Ali al-Ajamy
✓
Ahmed ibn Ali al-Ajamy
✓
A
Abu Bakr Ash-Shaatree
✓
Abu Bakr Ash-Shaatree
✓
M
Muhammad Ayyoub
✓
Muhammad Ayyoub
✓
A
Abdullah Basfar
✓
Abdullah Basfar
✓
A
Abdullah Al-Juhani
✓
Abdullah Al-Juhani
✓
M
Maher Al Muaiqly
✓
Maher Al Muaiqly
✓
—
x1
لَا أُقْسِمُ بِهَٰذَا الْبَلَدِ ١
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 1
இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
وَأَنتَ حِلٌّ بِهَٰذَا الْبَلَدِ ٢
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 2
நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,
وَوَالِدٍ وَمَا وَلَدَ ٣
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 3
பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي كَبَدٍ ٤
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 4
திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.
أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ ٥
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 5
'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?
يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًا ٦
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 6
"ஏராளமான பொருளை நான் அழித்தேன்" என்று அவன் கூறுகிறான்.
أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُ أَحَدٌ ٧
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 7
தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
أَلَمْ نَجْعَل لَّهُ عَيْنَيْنِ ٨
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 8
அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா?
وَلِسَانًا وَشَفَتَيْنِ ٩
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 9
மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?
وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ ١٠
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 10
அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.
وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ ١٢
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 12
(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.
أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ ١٤
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 14
அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.
أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ ١٦
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 16
அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).
ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ ١٧
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 17
பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.
أُولَٰئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ ١٨
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 18
அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.
وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا هُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِ ١٩
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 19
ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.
عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ ٢٠
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 20
அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.
படிக்க அல்-பலத் சூரா தமிழ் மொழிபெயர்ப்பு – வசனங்கள் மற்றும் ஒலி
திருக்குர்ஆன்
Tuesday, August 18, 2026
Don't forget us in your sincere prayers

