அர்-ரஅத் · 28/43
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அர்-ரஅத்
الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ ۝٢٨
Allazeena aamanoo wa tatma`innu quloobuhum bizikril laah; alaa bizikril laahi tatma`innul quloob
📖 தமிழில்
(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன் அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00
📜

மொழிபெயர்ப்பு — Tafsir

சொற்பொருள்:

  • تَطْمَئِنُّ: அமைதியடைகின்றன, நிம்மதி அடைகின்றன.
  • ذِكْرِ اللَّهِ: அல்லாஹ்வின் நினைவு, அவனைத் துதித்தல், அவனுடைய வசனங்களை ஓதுதல்.

விளக்கம்:

அல்லாஹ் தன் நேர்வழியில் செலுத்துபவர்கள் யார் என்று கூறுகையில், அவர்கள் ஈமான் கொண்டவர்கள்; அவர்களுடைய இதயங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியடைகின்றன. அதாவது, அவர்கள் அல்லாஹ்வை நினைக்கும் போதும், அவனைப் பற்றி கூறப்படுவதைக் கேட்கும் போதும், அவனுடைய வேதத்தை ஓதும் போதும் அவர்களுடைய இதயங்கள் நிம்மதியடைந்து, உறுதியும் அமைதியும் பெறுகின்றன. ஏனெனில், அல்லாஹ்வின் நினைவைத் தவிர வேறு எதனாலும் இதயங்களுக்கு உண்மையான அமைதி ஏற்படாது. அவனுடைய திக்ர் (நினைவு), அவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல், அவனுடைய வாக்குறுதிகளின் மீதான நம்பிக்கை ஆகியவற்றால் தான் இதயங்கள் அமைதியடைந்து, சந்தேகங்கள் நீங்கி, உறுதியான ஈமான் ஏற்படுகிறது.

பயன்கள்:

  • அல்லாஹ்வின் நினைவே இதயத்திற்கு உண்மையான அமைதியைத் தருகிறது; உலக செல்வங்களோ, பதவிகளோ இதயத்திற்கு நிரந்தர அமைதியைத் தர முடியாது.
  • அல்லாஹ்வை நினைப்பது (திக்ர்) ஒவ்வொரு முஃமினின் வாழ்க்கையில் அவசியமானதாகும்; இது இதயத்தின் கடினத்தன்மையை நீக்கி, இறைவனுடன் தொடர்பை ஏற்படுத்துகிறது.
  • இந்த வசனம் முஃமின்களுக்கு ஒரு நற்செய்தியாகும்; அவர்கள் சிரமங்களிலும், கவலைகளிலும் அல்லாஹ்வை நினைத்தால் அவர்களுடைய இதயங்கள் நிம்மதியடையும்.
  • இதயத்தின் அமைதியும், மனநிறைவும் உண்மையான ஈமானின் அடையாளமாகும்; இது மனிதனை நல்ல செயல்களில் ஈடுபடத் தூண்டுகிறது.


📜 வசனம் 26-30 — சூரா அர்-ரஅத்

26اللَّهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاءُ وَيَقْدِرُ ۚ وَفَرِحُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَمَا الْحَيَاةُ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مَتَاعٌ
அல்லாஹ் தான் நாடியவருக்கு சம்பத்தை விசாலமாக்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவிட்டுக் கொடுக்கின்றான்; எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகிறார்கள் - இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிடாமல் மிகவும் அற்பமேயன்றி வேறில்லை.
27وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا لَوْلَا أُنزِلَ عَلَيْهِ آيَةٌ مِّن رَّبِّهِ ۗ قُلْ إِنَّ اللَّهَ يُضِلُّ مَن يَشَاءُ وَيَهْدِي إِلَيْهِ مَنْ أَنَابَ
"இவருக்கு இவருடைய இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சி இறக்கி வைக்கப்படக் கூடாதா" என்று நிராகரிப்போர் கூறுகிறார்கள், (நபியே!) நீர் கூறும்; "நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிகெடச்செய்கிறான்; தன் பால் எவர் திரும்புகிறாரோ அத்தகையோருக்கு நேர் வழிகாட்டுகிறான்" என்று
28الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன் அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!
29الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ طُوبَىٰ لَهُمْ وَحُسْنُ مَآبٍ
எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் புரிகின்றார்கலோ, அவர்களுக்கு (எல்லா) நற்பாக்கியங்களும் உண்டு; இன்னும் அழகிய இருப்பிடமும் உண்டு.
30كَذَٰلِكَ أَرْسَلْنَاكَ فِي أُمَّةٍ قَدْ خَلَتْ مِن قَبْلِهَا أُمَمٌ لِّتَتْلُوَ عَلَيْهِمُ الَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَهُمْ يَكْفُرُونَ بِالرَّحْمَٰنِ ۚ قُلْ هُوَ رَبِّي لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ مَتَابِ
(நபியே!) நாம் உம்மை இவ்வாறே ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; இவர்களுக்கு முன்னரும் பல கூட்டத்தினர் நிச்சயமாகச் சென்றிருக்கிறார்கள்; நாம் உம் மீது எதை வஹீயாக அறிவித்தோமோ அதை இவர்களுக்கு ஓதிக்காண்பிப்பதற்காக (உம்மை அனுப்பினோம்); ஆனால் இவர்களோ அர்ரஹ்மா(ன் எனும் அருள் மிக்க இறைவ)னையே நிராகரிக்கின்றனர். அவர்களிடம்; "அவனே என் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயன் எவனுமில்லை அவன் மீதே நாம் முழமையாக நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவனிடமே (என்னுடைய) மீட்சியும் இருக்கிறது' என்று நீர் கூறுவீராக!
அர்-ரஅத்குர்ஆன் பட்டியல்
43வசனம்
MedinanRevelation
28வசனம்

மொழிபெயர்ப்பு — அர்-ரஅத் 28

சூரா அர்-ரஅத் வசனம் 28 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : (நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்;…

சூரா வசனம் 28/43 — சூரா அர்-ரஅத் الرعد (Medinan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அர்-ரஅத் கேள், சூரா அர்-ரஅத் மொழிபெயர்ப்பு, சூரா அர்-ரஅத் mp3, சூரா அர்-ரஅத் pdf. வசனம் 26–30. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Tuesday, September 29, 2026

Don't forget us in your sincere prayers