யூனுஸ் · 34/109
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா யூனுஸ்
قُلْ هَلْ مِن شُرَكَائِكُم مَّن يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ ۚ قُلِ اللَّهُ يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ ۖ فَأَنَّىٰ تُؤْفَكُونَ ۝٣٤
Qul hal min shurakaaa `ikum mai yabda`ul khalqa suma yu`eeduh; qulil laahu yabda`ul khalqa summa yu`eeduhoo fa annaa tu`fakoon
📖 தமிழில்
உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் முதன் முதலில் சிருஷ்டிகளை படைப்பவனும் பிறகு அவைகளை திரும்பப் படைப்பவனும் இருக்கின்றார்களா, என்று (நபியே!) நீர் கேட்பீராக் அல்லாஹ்தான் முதன் முதலில் சிருஷ்டிகளை படைக்கிறான், பிறகு அவைகளை மீண்டும் படைக்கிறான்; நீங்கள் எங்கே திருப்பப்படுகிறீர்கள் என்று கூறுவீராக.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00
📜

மொழிபெயர்ப்பு — Tafsir

சொற்பொருள் விளக்கம்:

  • يَبْدَأُ الْخَلْقَ: படைப்பை முதன்முதலில் உருவாக்குகிறான்.
  • يُعِيدُهُ: மரணத்திற்குப் பின் மீண்டும் உயிர்ப்பிக்கிறான்.
  • تُؤْفَكُونَ: நீங்கள் வழி தவறி (சத்தியத்திலிருந்து) திருப்பப்படுகிறீர்கள்.

விளக்கம்:

நபியே! இந்த இணைவைப்பாளர்களிடம் கேளுங்கள்: "நீங்கள் இணையாக வைத்து வணங்கும் உங்கள் தெய்வங்களில், படைப்பை முதன்முதலில் உருவாக்கி, பின்னர் அதை அழித்து மீண்டும் உயிர்ப்பிக்கக்கூடியவர் யாராவது இருக்கிறார்களா?" அவர்களால் இதற்கு ஆம் என்று பதிலளிக்க முடியாது. ஏனெனில், அவர்களின் தெய்வங்கள் எதையும் படைக்கவோ மீண்டும் உயிர்ப்பிக்கவோ சக்தி பெற்றவை அல்ல. ஆகவே, நீங்களே சொல்லுங்கள்: "அல்லாஹ்வே படைப்பை முதன்முதலில் உருவாக்குகிறான்; பின்னர் அதை மீண்டும் உயிர்ப்பிக்கிறான்." அவன் ஒருவனே இந்த ஆற்றலைக் கொண்டவன். அவ்வாறிருக்க, நீங்கள் ஏன் சத்தியத்தை விட்டுவிட்டு அசத்தியத்தை நோக்கி திருப்பப்படுகிறீர்கள்? அல்லாஹ்வை விட்டுவிட்டு, எந்தப் பயனும் தீங்கும் செய்ய முடியாத சிலைகளை வணங்குகிறீர்களே!

பயன்கள்:

  1. அல்லாஹ்வின் வல்லமையை உணர்ந்து, அவன் ஒருவனே வணக்கத்திற்குரியவன் என்பதை உறுதியாக நம்ப வேண்டும்.
  2. மறுமை நாளில் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவோம் என்ற நம்பிக்கை இறைவனின் சக்தியின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.
  3. இணைவைப்பு என்பது அறிவுக்கு முரணானதும், சத்தியத்திலிருந்து விலகிச் செல்வதுமான ஒரு தவறான பாதையாகும்.
  4. இந்த வசனம், இறைவனின் படைப்பு மற்றும் மறுமை நம்பிக்கையின் அடிப்படையில், மனிதனை நல்லறிவுக்கு அழைக்கிறது.


📜 வசனம் 32-36 — சூரா யூனுஸ்

32فَذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمُ الْحَقُّ ۖ فَمَاذَا بَعْدَ الْحَقِّ إِلَّا الضَّلَالُ ۖ فَأَنَّىٰ تُصْرَفُونَ
உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்ள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
33كَذَٰلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَى الَّذِينَ فَسَقُوا أَنَّهُمْ لَا يُؤْمِنُونَ
பாவம் செய்பவர்கள் மீது உமது இறைவனின் வாக்கு இவ்வாறே உறுதியாகி விட்டது. ஏனெனில் நிச்சயமாக அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
34قُلْ هَلْ مِن شُرَكَائِكُم مَّن يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ ۚ قُلِ اللَّهُ يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ ۖ فَأَنَّىٰ تُؤْفَكُونَ
உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் முதன் முதலில் சிருஷ்டிகளை படைப்பவனும் பிறகு அவைகளை திரும்பப் படைப்பவனும் இருக்கின்றார்களா, என்று (நபியே!) நீர் கேட்பீராக் அல்லாஹ்தான் முதன் முதலில் சிருஷ்டிகளை படைக்கிறான், பிறகு அவைகளை மீண்டும் படைக்கிறான்; நீங்கள் எங்கே திருப்பப்படுகிறீர்கள் என்று கூறுவீராக.
35قُلْ هَلْ مِن شُرَكَائِكُم مَّن يَهْدِي إِلَى الْحَقِّ ۚ قُلِ اللَّهُ يَهْدِي لِلْحَقِّ ۗ أَفَمَن يَهْدِي إِلَى الْحَقِّ أَحَقُّ أَن يُتَّبَعَ أَمَّن لَّا يَهِدِّي إِلَّا أَن يُهْدَىٰ ۖ فَمَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ
உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் சத்தியத்தின் பால் வழிகாட்டுபவன் உண்டா? என்று கேட்பீராக் அல்லாஹ்தான் சத்தியத்திற்கு வழிகாட்டுகிறான் என்று கூறுவீராக. சத்தியத்திற்கு வழிகாட்டுபவன் பின்பற்றப்படதக்கவனா? வழிகாட்டப்பட்டாலேயன்றி நேர்வழியடைய மாட்டானே அவன் பின்பற்றத் தக்கவனா? உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்.
36وَمَا يَتَّبِعُ أَكْثَرُهُمْ إِلَّا ظَنًّا ۚ إِنَّ الظَّنَّ لَا يُغْنِي مِنَ الْحَقِّ شَيْئًا ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِمَا يَفْعَلُونَ
ஆனால், அவர்களில் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை; நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும் தர இயலாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
யூனுஸ்குர்ஆன் பட்டியல்
109வசனம்
MeccanRevelation
34வசனம்

மொழிபெயர்ப்பு — யூனுஸ் 34

சூரா யூனுஸ் வசனம் 34 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் முதன் முதலில் சிருஷ்டிகளை படைப்பவனும் பிறகு அவைகளை திரும்பப் படைப்பவனும்…

சூரா வசனம் 34/109 — சூரா யூனுஸ் يونس (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா யூனுஸ் கேள், சூரா யூனுஸ் மொழிபெயர்ப்பு, சூரா யூனுஸ் mp3, சூரா யூனுஸ் pdf. வசனம் 32–36. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers