அல்-ஹாக்கா சூரா அரபி மற்றும் தமிழ்

அல்-ஹாக்கா சூராவை முழுமையான தமிழ் மொழிபெயர்ப்புடன் படியுங்கள். அரபி உரை மற்றும் ஒலி திலாவத்துடன் வசனம் வசனமாக. (52 வசனம் — مكية). அல்-ஹாக்கா கேள், அல்-ஹாக்கா மொழிபெயர்ப்பு, அல்-ஹாக்கா mp3, அல்-ஹாக்கா pdf.

அல்-ஹாக்கா சூரா படி மற்றும் கேள்

🎧 வசனம்
M Mishary Rashid Alafasy
M Mahmoud Khalil Al-Husary
A Abdurrahman As-Sudais
M Mohamed Siddiq Al-Minshawi
A Abdul Basit Abdul Samad
A Ali Al-Hudhaify
A Ahmed ibn Ali al-Ajamy
A Abu Bakr Ash-Shaatree
M Muhammad Ayyoub
A Abdullah Basfar
A Abdullah Al-Juhani
M Maher Al Muaiqly
x1
الْحَاقَّةُ ۝١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 1
நிச்சயமானது.
مَا الْحَاقَّةُ ۝٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 2
நிச்சயமானது எது?
وَمَا أَدْرَاكَ مَا الْحَاقَّةُ ۝٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 3
அன்றியும் நிச்சயமானது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌ بِالْقَارِعَةِ ۝٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 4
ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர்.
فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ ۝٥
📖 மொழிபெயர்ப்பு வசனம் 5
எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.
وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ ۝٦
📖 மொழிபெயர்ப்பு வசனம் 6
இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.
سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ ۝٧
📖 மொழிபெயர்ப்பு வசனம் 7
அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான், எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.
فَهَلْ تَرَىٰ لَهُم مِّن بَاقِيَةٍ ۝٨
📖 மொழிபெயர்ப்பு வசனம் 8
ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா?
وَجَاءَ فِرْعَوْنُ وَمَن قَبْلَهُ وَالْمُؤْتَفِكَاتُ بِالْخَاطِئَةِ ۝٩
📖 மொழிபெயர்ப்பு வசனம் 9
அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர்.
فَعَصَوْا رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةً رَّابِيَةً ۝١٠
📖 மொழிபெயர்ப்பு வசனம் 10
அதனால், அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர், ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.
إِنَّا لَمَّا طَغَى الْمَاءُ حَمَلْنَاكُمْ فِي الْجَارِيَةِ ۝١١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 11
தண்ணீர் பொங்கிய போது நிச்சயமாக நாம் உங்களைக் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)னோம்.
لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَتَعِيَهَا أُذُنٌ وَاعِيَةٌ ۝١٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 12
அதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படிப்பினையாக்குவதற்கும், பேணிக்காக்கும் செவி (அதை நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப் பேணிக்கொள்வதற்கும் (ஆக அவ்வாறு செய்தோம்).
فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ ۝١٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 13
எனவே, ஸூரில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது:
وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً ۝١٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 14
இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் -
فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ ۝١٥
📖 மொழிபெயர்ப்பு வசனம் 15
அந்த நாளில் தாம் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும்.
وَانشَقَّتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ ۝١٦
📖 மொழிபெயர்ப்பு வசனம் 16
வானமும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும்.
وَالْمَلَكُ عَلَىٰ أَرْجَائِهَا ۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ ۝١٧
📖 மொழிபெயர்ப்பு வசனம் 17
இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள், அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.
يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَىٰ مِنكُمْ خَافِيَةٌ ۝١٨
📖 மொழிபெயர்ப்பு வசனம் 18
(மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது.
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ ۝١٩
📖 மொழிபெயர்ப்பு வசனம் 19
ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), "இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்" எனக் கூறுவார்.
إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ ۝٢٠
📖 மொழிபெயர்ப்பு வசனம் 20
"நிச்சயமாக, நாம் உன்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்."
فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ ۝٢١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 21
ஆகவே, அவர் திருப்தியான சுக வாழ்க்கையில் -
فِي جَنَّةٍ عَالِيَةٍ ۝٢٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 22
உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.
قُطُوفُهَا دَانِيَةٌ ۝٢٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 23
அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திருக்கும்.
كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ ۝٢٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 24
"சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்" (என அவர்களுக்குக் கூறப்படும்).
وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ ۝٢٥
📖 மொழிபெயர்ப்பு வசனம் 25
ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்; "என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!
وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ ۝٢٦
📖 மொழிபெயர்ப்பு வசனம் 26
"அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-
يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ ۝٢٧
📖 மொழிபெயர்ப்பு வசனம் 27
"(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?
مَا أَغْنَىٰ عَنِّي مَالِيَهْ ۜ ۝٢٨
📖 மொழிபெயர்ப்பு வசனம் 28
"என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!
هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ ۝٢٩
📖 மொழிபெயர்ப்பு வசனம் 29
"என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!" (என்று அரற்றுவான்).
خُذُوهُ فَغُلُّوهُ ۝٣٠
📖 மொழிபெயர்ப்பு வசனம் 30
"(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்."
ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ ۝٣١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 31
"பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.
ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوهُ ۝٣٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 32
"பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்" (என்று உத்தரவிடப்படும்).
إِنَّهُ كَانَ لَا يُؤْمِنُ بِاللَّهِ الْعَظِيمِ ۝٣٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 33
"நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்."
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ ۝٣٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 34
"அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை."
فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيمٌ ۝٣٥
📖 மொழிபெயர்ப்பு வசனம் 35
"எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை."
وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ ۝٣٦
📖 மொழிபெயர்ப்பு வசனம் 36
"சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை."
لَّا يَأْكُلُهُ إِلَّا الْخَاطِئُونَ ۝٣٧
📖 மொழிபெயர்ப்பு வசனம் 37
"குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்."
فَلَا أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ ۝٣٨
📖 மொழிபெயர்ப்பு வசனம் 38
ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம் செய்கிறேன்.
وَمَا لَا تُبْصِرُونَ ۝٣٩
📖 மொழிபெயர்ப்பு வசனம் 39
நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (சத்தியம் செய்கிறேன்.)
إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ ۝٤٠
📖 மொழிபெயர்ப்பு வசனம் 40
நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.
وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ ۚ قَلِيلًا مَّا تُؤْمِنُونَ ۝٤١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 41
இது ஒரு கவிஞனின் சொல்லன்று (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள்.
وَلَا بِقَوْلِ كَاهِنٍ ۚ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ ۝٤٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 42
(இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைந்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.
تَنزِيلٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ ۝٤٣
📖 மொழிபெயர்ப்பு வசனம் 43
அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும்.
وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ ۝٤٤
📖 மொழிபெயர்ப்பு வசனம் 44
அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -
لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ ۝٤٥
📖 மொழிபெயர்ப்பு வசனம் 45
அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு-
ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ ۝٤٦
📖 மொழிபெயர்ப்பு வசனம் 46
பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.
فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَاجِزِينَ ۝٤٧
📖 மொழிபெயர்ப்பு வசனம் 47
அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை.
وَإِنَّهُ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِينَ ۝٤٨
📖 மொழிபெயர்ப்பு வசனம் 48
ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்.
وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ ۝٤٩
📖 மொழிபெயர்ப்பு வசனம் 49
ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.
وَإِنَّهُ لَحَسْرَةٌ عَلَى الْكَافِرِينَ ۝٥٠
📖 மொழிபெயர்ப்பு வசனம் 50
அன்றியும், நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது.
وَإِنَّهُ لَحَقُّ الْيَقِينِ ۝٥١
📖 மொழிபெயர்ப்பு வசனம் 51
மேலும், அது நிச்சயமாக உறுதியான உண்மையாகும்.
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ ۝٥٢
📖 மொழிபெயர்ப்பு வசனம் 52
ஆகவே, மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக.
← 68 அல்-ஹாக்கா (69/114) 70 →
படிக்க அல்-ஹாக்கா சூரா தமிழ் மொழிபெயர்ப்பு – வசனங்கள் மற்றும் ஒலி

69الحاقة Al-Haqqah 📚 52 வசனம் مكية

வசனம் வசனமாக – அல்-ஹாக்கா சூரா — 52 வசனம்




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers